டிரைவிங் லைசென்சை புதுப்பிக்க நேரில் சென்ற பிரதமர்
புதுடெல்லி, ஜன.19-
டெல்லி இந்திரபிரஸ்தா பகுதியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் (ஆர்.டி.ஓ.) கடந்த 1992-ம் ஆண்டில் பிரதமர் மன்மோகன் சிங் டிரைவிங் லைசென்சு எடுத்தார். அப்போது, மத்திய நிதி மந்திரியாக அவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது லைசென்சை புதுப்பித்து வந்தார். 45 நாட்களுக்கு முன் அது காலாவதியாகி விட்டது.
இதையடுத்து டிரைவிங் லைசென்சை புதுப்பிப்பதற்காக இந்திரபிரஸ்தா வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் நேரில் சென்றார். தற்போதைய `பயோ-மெட்ரிக்' முறையிலான லைசென்சை பெறுவதற்கு தேவையான புகைப்படங்கள் மற்றும் கைரேகை உள்ளிட்டவற்றை அளித்ததுடன் விண்ணப்பத்தையும் நிரப்பி கொடுத்தார்.
பிரதமர் மன்மோகன் சிங்குடன் அவரது மனைவி குர்சரண் கவுரும் போக்குவரத்து அலுவலகத்துக்கு சென்றிருந்தார். அவரும் தனது டிரைவிங் லைசென்சை புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தார்.
No comments:
Post a Comment