அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, January 21, 2009

போராடுவோம் போராடுவோம் இறுதி வரை போராடுவோம்..

போராடுவோம் போராடுவோம் இறுதி வரை போராடுவோம்..

இந்த கிரடிட் கார்டுங்கள பார்த்து எதுக்குத் தான் மக்கள் இப்படி பயப்படறாங்களோ தெரியலை. நாம ஒழுங்கா இருந்தா க்ரெடிட் கார்ட் மாதிரி நண்பன் வேற யாரும் இருக்க மாட்டாங்க. யாருக்கு எபடியோ .. ஆனா எனக்கு இவரு ரொம்ப நல்ல நண்பன்தாங்க... எந்த பொருள் வாங்கினாலும் 50 நாளைக்கு பணம் கட்ட டைம் வாங்கி தரான். எப்படி பார்த்தாலும் குறைந்த பட்சம் 30 நாள் டைம் வாங்கி தரான். ஆனா கடந்த சில மாதங்களாக இவனால கொஞ்சம் சிக்கல் ஆகிபோச்சிங்க... பணம் கட்டும் கெடுவுக்கு 4 நாட்கள் முன்னாடியே செக் தரனும்னு ப்ரிண்டட் ஸ்டேட்மெண்ட்ல சொல்லி இருக்காங்க. ஆனா நான் அதை எல்லாம் பாக்கறதில்ல. மெயில்ல வர ஸ்டேட்மெண்ட் மட்டும் தான் பாப்பேன். அதுல அந்த விவரம் இருக்காது.

சரி மேட்டருக்கு வருவோம்...
நான் எப்போவுமே கெடு தேதி அல்லது அதற்கு ஒரு நாள் முன்பு தான் காசோலை தருவது வழக்கம். ஆரம்பத்தில் இதனால் எனக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆனால் கடந்த சில மாதங்களாக தாமதக் கட்டணம் என்று 350 ரூபாய் போட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் நான் அதை கழித்தே பணம் செலுத்தினேன். ஒவ்வொரு மாதமும் தாமதக் கட்டணம் போட்டதுமில்லாமல் சென்ற மாதம் Finance Charge என்று ஒன்று புதியதாக போட்டிருந்தார்கள். வட்டியாக இருக்கலாம். நான் இதற்கு முன்பே சேவை மையத்தில் இதை பற்றி குறிப்பிட்டிருந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. தாமதமாக என் காசோலை Collection ஆகி இருப்பதாக பதில் சொன்னார்கள். ஆனால் நான் ஒருமுறை கூட கெடு தேதிக்கு பின்பு காசோலை குடுத்ததில்லை. தாமதமாக அவர்களுக்கு பணம் போனதற்கு நான் காரணம் இல்லை.

Finance charge என்பதை பார்த்து கடுப்பானதில் வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு மெயில் அனுப்பினேன். ரொம்ப புத்திசாலித் தனமாக கடந்த 3 மாத அறிக்கையை குறிபிட்டு .. இவ்வளவு தொகை இருக்கிறது. நீங்கள் இவ்வளவு தான் கட்டி இருக்கிறீர்கள். ஆகவே தாமதக் கட்டணங்களும் ஃபினான்ஸ் கட்டணமும் வந்திருக்கு என்று பதில் அனுபினார்கள். என் கடுப்பை அதிகரிக்க வேண்டும் என்று அந்த பெண் சபதம் எதும் எடுத்திருப்பார் போல. உடனே நானும் அதற்கு பதில் அனுப்பினேன்.

யக்கா மாரியாத்தா..." நீங்கள் குறிப்பிட்டிருப்பது தாமதக் கட்டணத்தையும் சேர்த்து.. நான் அதை கழித்து கட்டி இருக்கிறேன். அநாவசியமாக நீங்கள் குறிப்பிடும் தாமதக் கட்டணத்தை கட்ட வேண்டிய அவசியம் இல்லை. வேண்டுமென்றால் என் காசோலைகளை சரிபார்த்துக் கொள்ளுங்கள். எனக்கு 50 நாள் அவகாசம் கொடுத்திருக்கிறீர்கள். ஆகவே நான் கடைசித் தேதியில் தான் காசோலை தருவேன். நான் கொடுப்பது உள்ளூர் காசோலை. இது பணமாக 24 மணி நேரத்துக்கு மேல ஆகாது. அப்படி இருக்க நான் ஏன் தாமதக் கட்டணம் செலுத்த வேண்டும். எந்த சூழ்நிலையிலும் நீங்கள் குறிப்பிட்டுள்ள தாமதக் கட்டணத்தையும் செலுத்த மாட்டேன். உங்கள் வங்கி எடுக்கும் எந்த நடவடிக்கையையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். மேலும் இந்த தேவையற்ற கட்டணங்களை திரும்ப பெறவில்லை என்றால் உடனே உங்கள் வங்கி அளித்துள்ள கடன் அட்டையை ஒப்படைத்துவிடுகிறேன்" என்று பதில் அனுப்பினேன்.

அடுத்த நாளே பதில் வந்தது. நீங்கள் எங்களின் மதிப்பு மிக்க வாடிக்கையாளர்... லொட்டு லொசுக்கு என்று அளந்து விட்டு, அந்த கட்டணங்கள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்கள். இன்று எனக்கு ஸ்டேட்மெண்ட் வரும் நாள். பார்த்தேன். அட.. சொன்ன மாதிரியே எல்லாவற்றையும் திரும்ப பெற்றுக் கொண்டார்கள் :)...

ஆகவே மக்களே .. இதனால் சகலமானவங்களுக்கும் தெரிவிப்பது இன்னான்னா.. பேராசையை கட்டுப் படுத்திக் கொண்டு கடன் அட்டையை சரியாகப் பயன் படுத்தினால் அதை விட நல்ல நண்பன் இருக்கவே முடியாது. ஆகவே கடன் அட்டையை பார்த்து பயப்படாதிங்க. நாம ஒழுங்கா இருக்கிறவரைக்கும் அவங்களால ஒன்னும் பண்ண முடியாது. கடன் அட்டை வழங்கிய நிறுவனம் "தவறான" கட்டணம் குறிப்பிட்டிருந்தால் கட்டாதீங்க.கேள்வி கேளுங்க... அவர்கள் என்ன நம்மை மிரட்டுவது.. நாம் அவர்களை மிரட்டுவோம்...ஜெயம் நமக்கே..

அஸ்கி புஸ்கி : இந்த பதிவை எழுதிமுடித்து எழுத்துப் பிழை திருத்த திரும்ப படித்த போது கொஞ்சம் டோண்டு பாணி பதிவாக தோன்றியது. இதில் சுய தம்பட்டம் அடிப்பது நோக்கம் அல்ல. எனக்கு நேர்ந்ததை உள்ளது உள்ளபடி சொல்லி கடன் அட்டை பற்றிய பயத்தை போக்குவதும் தவறை எதிர்த்தால் நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும் என்பதை வலியுறுத்தவுமே இந்த பதிவு. உங்களுக்கும் இது போன்ற அனுபவம் இருந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள். யாருக்காவது உதவலாம். ஹிஹி.. தலைப்பு கொஞ்சம் ஓவரா இருக்குல.. கண்டுக்காதிங்க.. :P

ஓட்டு போடுங்க சாமியோவ்..

No comments: