சுப்ரமணியபுரம் சசிக்குமார்.. பருத்தித் தமிழ் வீரன் அமீர், எழுத்து வீரன் சாரு...
சசிக்குமார்.. ஒரே படத்தின் மூலம் தமிழ்நாட்டின் முக்கிய இயக்குனர் ஆகிவிட்ட இவரின் வெற்றிக்குப் பின் இருக்கும் உழைப்பை அறிந்தவர்கள் ஆச்சர்யப்படமாட்டார்கள்..சமீபத்திய வருடங்களில் தமிழ்நாட்டை திரும்பி பார்க்க வைத்த அல்லது புரட்டிப் போட்ட படங்கள் என்று குறிப்பிட்டுப் பார்த்தால்.. சேது, நந்தா, பிதாமகன், ராம், பருத்தி வீரன் இந்த படங்கள் அந்த லிஸ்ட்டில் இடம்பெறும்.. இந்த எல்லா படங்களிலும் துணை மற்றும் இணை இயக்குனராக பணியாற்றியவர்தான் சசிக்குமார்.. தன் இருப்பையும் பொறுப்பையும் மிகச்சுத்தமாகவும் சத்தமாகவும் சுப்ரமணியபுரம் படம் மூலம் முரசறைந்தவர் சசிக்குமார்..
அமீர் : ஈழப் பிரச்சனை குறித்த தம் குரலை ஆழமாக பதிந்தவர்..ராம் மூலம் கவனம் ஈர்த்தவர்.. என்பதை எல்லாம் தாண்டி.. மண்ணின் மனத்தையும் ரத்தத்தின் நிறத்தையும் அந்த பிசுபிசுப்போடு பருத்திவீரன் மூலம் உலகிற்கு உணர்த்தியவர்.. தமிழ் சினிமா அதிகம் எதிர்பார்க்கும் இயக்குனர்..
இவர்கள் இருவரும் பங்கேற்கும் நிகழ்ச்சி நாளை (7 1 09 புதன்கிழமை..) மாலை 6 மணியளவில் சென்னை புக் பாயிண்ட் அரங்கத்தில் நடைபெறுகிறது..
என்ன நிகழ்ச்சி??
எழுத்து வீரன்.. தமிழில் அதிகம் விமர்சிக்கப்படும் எழுத்தாளர் சாரு..ஏனெனின் அதிகம் வாசிக்கப்படுபவர் என்பதால்.. பிடித்தவர்கள் பிடித்ததற்காக வாசிக்கிறார்கள்.. பிடிக்காதவர்கள் விமர்சனத்திற்காக வாசிக்கிறார்கள்.. ஆக.. விமர்சனங்களும் விமர்சகைளும் பெற்றுக் கொண்டிருக்கும்.. தமிழ் எழுத்தில் தனக்கென ஒரு கட்டமைப்பை உருவாக்கிக் கொண்டுவரும்,கொண்டவருமான சாருநிவேதிதாவின் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி..
இவர்கள் தவிர .. திரு மதன், திரு இந்திரா பார்த்தசாரதி,திரு பிரபஞ்சன்,திரு ந.முத்துச்சாமி திருமதி சிவகாமி, திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் ,திரு அழகிய பெரியவன், திரு சுதேசமித்திரன்..
என அவரவர் துறையின் ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சிக்கு பதிவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது..
இடம் : புக் பாயிண்ட் அரங்கம்..(ஸ்பென்ஸர் பிளாஸா எதிரில்) சென்னை..
நாள் : 7 1 2009 புதன்கிழமை
நேரம் : மாலை 6 மணி
அதைத்தொடர்ந்து கலாச்சார கலந்துரையாடல் வித் சாரு @ country club.. RA PURAM.
மேலும் விபரங்களுக்கு..
முரளி கண்ணன் : 9444884964
அனைவரும் வருக..
No comments:
Post a Comment