நீதிபதிகள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா?
மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் பெரிய சாதனைகள் என்றால் அதில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கும் தகவல் அரியும் உரிமை சட்டத்திற்கும் முக்கிய இடம் உண்டு. இந்த சட்டத்தால் பல அழுகிய நாறிப் போன சமாச்சாரங்கள் எல்லாம் வெளிய வந்தது. அரசின் ரகசியமில்லாத எந்த ஆவணத்தின் விவரங்களையும் பொது மக்களால் அறிந்துக் கொள்ள முடிகிறது. இதை பற்றி ஏற்கனவே நிறைய பேர் எழுதிவிட்டதால் இப்போதைய விவகாரத்திற்கு வருவோம்.சமீபத்தில், தகவல் அறியும் உரிமை அமைப்புக்கான கமிஷனர், நீதிபதிகளின் சொத்து விவரங்களையும் இந்த சட்டத்தின் படி யாராவது கேட்டால் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். உடனே நம்ம தலைமை நீதிபதி பாலகிருஷ்ணனின் ஈகோ டமார்ன்னு எகிறி குதிச்சி ருத்ர தாண்டவம் ஆடிடிச்சி. நாங்க எல்லாம் நீதிபதிகள். நாங்க யாருக்கும் எங்க சொத்து விவரங்களை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று திருவாய் மலர்ந்தார்.
ஏனுங்க சொல்ல மாட்டிங்க அப்டின்னு கேட்டதுக்கு, “ நீதிபதிகள் நியமனம் மாதிரியான விவரங்களை நான் சுப்ரீம் கோர்ட் பதிவாளரிடம் கூட சொல்வதில்லை. நீதிபதிகள் தங்கள் சொத்து விவரங்களை என்னை நம்பி ஒப்படைத்திருக்கிறார்கள். அதை வெளியே சொல்வது நம்பிக்கை துரோகம் “ என்றெல்லாம் சொல்லி இருக்கிறார். அட என்னங்க இது வம்பா போச்சி.. மக்கள் என்ன நீதிபதிகளின் வீட்டு விவகாரத்தையும் சொந்த கஷ்ட நஷ்டங்களையுமா கேக்கறாங்க. சொத்து விவரங்களைத் தானே. அரசாங்க அமைப்பின் அங்கத்தினர் என்ற வகையில் நீங்களும் இந்த சட்டத்திற்கு கட்டுபட்டவர்கள் தான்.
மேலும் , நீதிபதிகளின் மீதான நம்பிக்கை இப்போதெல்லாம் குறைந்து வருகிறது. நீதிபதிகளுக்கு பணவெறி பிடித்து ஆட்டுவதும் சமீக காலங்களாக வெளிவந்துக் கொண்டிருக்கிறது. கீழ்க் கோர்ட்டுகளில் நீதிபதிகள் கவர் வாங்குவது போன்ற குற்றச் சாட்டுகள் ஏற்கனவே வந்துக் கொண்டிருக்கிறது. ஆகவே நீதிபதிகளின் சொத்து விவரங்களை வாங்கி அதை ஆவணமாக தலைமை நீதிபதி வைத்திருக்கிறார். அந்த ஆவணங்களில் உள்ள விவரங்களை மக்கள் கேட்க்கும் போது தெரியபடுத்துவது தலைமை நீதிபதியின் கடமையே. சட்டத்தின் முன் அனைவரும் சமம்தான். இதை நிலைநாட்டும் நீதிபதிகள் இதற்கு முன்னாதாரணமாக இருக்க வேண்டுமே ஒழிய தங்களுக்கே உத்தரவா என்ற தலைக்கனத்தில் இருக்கக் கூடாது.
No comments:
Post a Comment