கனிமொழியின் ஜாமீன் மனு தொடர்பாக உச்சநீதிமன்றம் மத்திய புலனாய்வுத் துறையிடம் மூன்று முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது. இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தற்போது டெல்லி திகார் சிறையில் இருக்கும் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரருமான கனிமொழியில் ஜாமீன் மனுவை இந்திய உச்சநீதிமன்றம் திங்களன்று விசாரித்தது. அப்போது, இந்த முறைகேட்டில் கனிமொழிக்கும், ஷரத்குமாருக்கும் தொடர்பு இல்லை என்றும், கடனாகப் பெற்ற 200 கோடி ரூபாய் திருப்பித் தரப்பட்டுவிட்டதாகவும் மூத்த வழக்கறிஞர் அல்டாஃப் அகமது வாதிட்டார். ஆனால், அந்தத் தொகை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளுக்காக லஞ்சமாகப் பெறப்பட்டது என்று சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, சிபிஐக்கு நீதிபதிகள் மூன்று கேள்விகளை எழுப்பினார்கள்.
ஆகிய கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், வரும் வெள்ளிக்கிழமைக்குள் அதுதொடர்பாக பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்கள். சிபிஐ பதிலளித்த பிறகு, வழக்கு விசாரணை அடுத்த வாரம் திங்கட்கிழமை நடைபெறும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது |
Tuesday, June 14, 2011
கனிமொழி ஜாமீன்: உச்சநீதிமன்றம் கேள்வி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment