மிகப்பெரும் ஊழல்வாதியான ராம்தேவ் கறுப்பு பணம் பற்றி பேசுவதற்கு முன் தனது சொத்துக்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஹரிபிரசாத் கூறியுள்ளார்.
பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் ஹரிபிரசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கர்நாடக லோக் அயுக்தா நீதிபதியும் லோக்பால் சட்ட வரைவு குழு உறுப்பினருமான சந்தோஷ் ஹெக்டே ஊழல் பற்றி தேசிய அளவில் பேசி வருகிறார். செல்லும் இடமெல்லாம் ஊழல் பற்றி விமர்சனம் செய்து வருகிறார். கர்நாடகத்தில் முதல்வர் எடியூரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பான ஆதாரங்களும் லோக்அயுக்தா நீதிபதியிடம் உள்ளது. முதலில் அவர் எடியூரப்பா மீது விசாரணை நடத்தட்டும். அதன் பிறகு அவர் லோக்பால் சட்ட மசோதா பற்றி பேச வேண்டும்.
பாபா ராம்தேவை சமரசப்படுத்தும் பணியில் காங்கிரஸ் கட்சியின் பங்கு எதுவும் இல்லை. அவர் சாமியார் அல்ல. மிகப்பெரிய ஊழல்வாதி. அவர் ரூ.1110 கோடிக்கும் அதிகமாக தன்னிடம் சொத்து உள்ளதாக தெரிவித்து உள்ளார். அது எப்படி வந்தது. இது தொடர்பாக அவர் தெளிவுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் தனது சொத்தை அரசிடம் ஒப்படைத்து விட்டு கறுப்பு பண பிரச்சினை பற்றி பேச வேண்டும்.
இவ்வாறு ஹரிபிரசாத் கூறினார்.

No comments:
Post a Comment