கண்டங்கத்திரி செடி நன்கு படர்ந்து தரையை ஒட்டி வளரும் குறுஞ்செடியாகும். இந்த தாவரம் முழுவதும் முட்கள் காணப்படும். நீல நிறத்தில் மலர்கள் கொத்து கொத்தாகக் காணப்படும். இந்த செடியின் இலைகள், தண்டு, மலர், கனி, விதை ஆகிய முழுத்தாவரமும் மருத்துவப் பயன் கொண்டவை. அர்வாதி என்னும் ஆயுர்வேத மருந்தின் பகுதியாக உள்ளது.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
இத்தாவரத்தில் இருந்து பலவிதமான கரிம அமிலங்கள் மற்ற வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. டயோஸ்ஜெனின், சொலசோடைன், சொலனோகார்பைன், அரகிடிக்,லினோலியிக், ஒலியிக், பால்மிடிக், அமிலங்கள் காணப்படுகின்றன.
ஆஸ்துமா நீக்கும் வேர்
கண்டங்கத்திரி செடியின் வேர் ஆஸ்துமா எதிர்ப்பு குணம் கொண்டது. விதைகளை எரித்த புகை ஆஸ்துமா நோயில் சளி அகற்றுவியாக உதவுகிறது. பல்வலி போக்குகிறது.
இலைகளின் சாறு மிளகுடன் சேர்த்து மூட்டு வலிகளுக்கு மருந்தாகிறது. வாந்தி நிறுத்தக்கூடியது. சிறுநீர் போக்கு தூண்டுவி. மார்பு வலி, இருமல் மற்றும் காய்ச்சலுக்கு மருந்தாகும். தசமூலா என்னும் ஆயுர்வேத மருந்தின் பகுதியாக உள்ளது.
குழந்தைகளின் இருமல் நீக்கும்
கனிகளின் சாறு தொண்டை வலியை போக்க வல்லது. குழந்தைகளின் தொடர்ந்த இருமலுக்கு இதன் பொடி தேனுடன் கலந்து கொடுக்கப்படுகிறது.
முழுத்தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. உடல்நலம் தேற்றக்கூடியது. மூச்சுக்குழல் அலர்ஜி, இருமல், மலச்சிக்கல், ஆகியவற்றினை போக்க உதவும். இதன் கசாயம் பால்வினை நோய்களுக்கு மருந்தாவதுடன் கருத்தரிக்கவும் ஊக்குவிக்கிறது.

No comments:
Post a Comment