ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவ மையத்தில் குர்ஆன் எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு கலவரம் நடைபெற்று வருகிறது. இந்தக் கலவரங்களில் நான்கு அமெரிக்க படை வீரர்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.இன்று ஜலாலாபாத் விமான நிலையத்தில் ஏற்பட்ட தற்கொலைத் தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த செவ்வாய் ( 21.02.2012) அன்று அமெரிக்க ராணுவ மையத்தில் முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆனும் மற்றும் சில இஸ்லாமிய புத்தகங்களும் எரிக்கப்பட்டது. ஆனால் இதனைத் தொடர்ந்து ஆப்கானிய மக்கள் கண்டனப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். குர்ஆன் எரிப்பு தவறுதலாக நடைபெற்று விட்டது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று (27.02.2012) ஜலாலாபாத் விமானதளத்தில் காரில் வந்த தற்கொலைதாரி நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.இந்தத் தாக்குதலுக்கு தலிபான் பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட கொந்தளிப்பினைப் பயன்படுத்தி தலிபான் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது. இறந்தவர்களில் 6 பேர் பொதுமக்கள், இரண்டு பேர் விமான நிலைய ஊழியர்கள், ஒருவர் ராணுவ வீரர் என கண்டறியப்பட்டுள்ளது.
இரண்டு தினங்களுக்கு முன்பு அமெரிக்க ராணுவ ஆலோசகர்கள் இரண்டு பேர் உள்துறை அமைச்சகத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டது அங்கு பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

No comments:
Post a Comment