மென்பான தயாரிப்பாளர்களான கொக்கோ கோலா நிறுவனத்திடம் மக்கள் நட்ட ஈடு கோருவதற்கு அனுமதிக்கும் வகையிலான சட்டம் ஒன்றை கேரள மாநில அரசாங்கம் கொண்டுவந்துள்ளது. கோயம்புத்தூருக்கு மேற்கே இந்த நிறுவனத்துக்கு மென்பானத்தை பாட்டிலில் அடைக்கும் ஆலை ஒன்று உள்ளது. அந்த ஆலை, அங்கு சுற்றுச் சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், பெரும் குடிநீர் தட்டுப்பாட்டையும் ஏற்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. இந்தப் புதிய சட்டத்தை வரவேற்றுள்ள மனித உரிமை அமைப்புக்கள், இது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சட்டம் என்று அதனை வரவேற்றுள்ளன. கொக்கோ கோலா நிறுவனம் இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ளதுடன், இந்தச் சட்டத்தால் தாம் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் கூறியுள்ளது. முன்னதாக இந்தச் ''சுற்றுச்சூழல் பாதிப்பு'' 50 லட்சம் டாலர்களுக்கும் குறைவானது என்று ஒரு குழு மதிப்பிட்டிருந்தது. |
Friday, February 25, 2011
கொக்கோ கோலாவுக்கு சிக்கல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment