வழமையான, மேன்மை பொருந்திய வரலாற்றைக் கொண்ட இஸ்லாமிய சமுதாயம் இன்று கடும் பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியிருக்கிறது. முதலாளித்துவமும், ஊழலும், தகுதிக்கேடும் இன்று இஸ்லாமிய சமூகத்தை பீடித்திருக்கிறது. இதற்கு, மக்களை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் பொருளாதார அமைப்பும், இஸ்லாமிய ஆட்சியாளர்கள் மேற்கொள்ளும் தவறான ஆட்சி முறையுமே காரணம் ஆகும். இஸ்லாமிய சமூகம் தங்கள் பிடியில் இருக்கும் படியும், தங்களின் (குடியேற்ற நாடுகளின்) தலைமையே இஸ்லாமிய சமூகத்தை ஆதிக்கம் செலுத்தும் வகையிலுமே குடியேற்ற நாடுகளின் பொருளாதாரக் கொள்கைகள் இருக்கின்றன. இவ்வாறாக, அமெரிக்கா மற்றும் அதைப்போன்ற நாடுகள் , இஸ்லாமிய நாடுகளை தங்களின் பொருட்களை விற்கும் சந்தையாகவே கருதுகின்றன. குடியேற்ற நாடுகளின் பிடியிலிருந்து மீள முஸ்லீம் ஆட்சியாளர்கள் கையாள வேண்டிய பொருளாதாரக் கொள்கைகள் இங்கே விளக்கப்பட்டுள்ளன. மேலும் இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாடுகள் குர்ஆன் மற்றும் திருநபியின்(ஸல்) போதனைப்படி அமையும் வழியையும் சுட்டுகிறது.
தனி மனிதனின் தேவையைக் கணக்கில் கொள்ளாமல், சமதர்மத்தை நிலைநிறுத்துவது பற்றியும், மொத்த தேசிய உற்பத்தியை பெருக்க வேண்டும் எனவும் மட்டுமே குடியேற்ற நாடுகள் வலியுறுத்துகின்றன. இதன் தொடர்பாக, மேலை நாடுகள், பொருளாதாரத்தைப் பற்றி புத்தகங்கள் பலவற்றை பிரசுரித்து, தொழில் முன்னேற்றம் கண்ட தங்களுடன் சரி நிலையை அடைய, இஸ்லாமிய நாடுகள் தங்களுடைய பொருளாதாரக் கொள்கைகளையே பின்பற்ற வேண்டும் என்றும் எச்சரிக்கின்றன.
மொத்த தேசிய உற்பத்தியை பெருக்கி-அதன் அடிப்படையில் பொருளாதாரத்தை அமைப்பதும், சமதர்மக் கொள்கையும், சமூக நீதி திட்டமும், சமூகத்திற்கு எவ்வித பயனும் தராமல் உண்மை நிலையிலிருந்து விலகியே நிற்கின்றன. சமூக நீதி கொள்கையானது, முதலாளித்துவக்கொள்கைக்கு கைகொடுக்குமெயன்றி வேறொரு பயனும் அளிக்காது.
இஸ்லாமிய சட்டங்களை மாற்ற முடியாத காரணத்தினாலும், அவை மட்டுமே மனித சமூகம் உயர வழி கோலும் என்பதாலும், முஸ்லீம்கள் நிலையற்ற அல்லது பிற நாட்டைச்சார்ந்த பொருளாதாரத்திட்டத்தை பின்பற்றுவது உபயோகமற்றதாகும். இஸ்லாமியர்களின் பொருளாதார அமைப்பு திருக்குர்ஆன் கூறும் ஷரியத் சட்டப்படியும், சுன்னாஹ் எனப்படும் நபிகளாரின்(ஸல்) வழிகாட்டுதலின் படியும், சஹாபாக்களின் ஒருங்கிணைந்த தீர்வின் படியும்(இஜ்மா-அஸ்-ஸஹாபா), கியாஸ்(ஒப்புநோக்குதல்) படியும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த அடிப்படையில் பின்வரும் நான்கு கருத்துக்கள் அமைந்திருக்கின்றது.
1. ஒரு தனி நபருக்கு பூர்த்தி செய்யப்பட வேண்டிய தனிப்பட்ட தேவைகள் உண்டு என இஸ்லாம் கருதுகிறது.
2. ஒரு மனிதன் வாழ அடிப்படைத் தேவைகள் பூர்த்திசெய்யப்படவேண்டும் என இஸ்லாம் கருதுகிறது.
3. தொழில் சுதந்திரத்தையும், வேலையில் யாவரும் சமம் என்ற நிலையையும், இறைவனின் வழங்களிலிருந்து பயனடைதலின் மூலம் பெற முடியும் என இஸ்லாம் கருதுகிறது.
4. உறவு முறைகளின் முக்கியத்துவத்தையும், மனிதர்களிடையே உள்ள தொடர்பையும் இஸ்லாம் நிர்வகிக்கிறது.
ஆகவே, மனிதன் உழைப்பதின் மூலமும், மனிதர்களிடையே உள்ள தொடர்பை உறுதிப்படுத்துவதின் வாயிலாகவும், தனி நபரின் முக்கியத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும், அவனுடைய வாழக்கைத் தரத்தை உயர்த்தவும், அவனை முன்னேற்றமடையச்செய்யவும் இஸ்லாம் வழி சொல்கிறது.
எனவே உற்பத்தியைப் பெருக்குவதோ, சமதர்மக்கொள்கையோ, சமூக நீதி திட்டமோ இவை அனைத்தும் இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கையாகாது. முஸ்லிம் உம்மாவிடையே, அல்லாஹ்வின் வழங்களை சமமாக பங்கிடுதலின் மூலமாக, ஒவ்வொரு மனிதனின் அடிப்படைத் தேவைகளையும், அதிகப்படியான தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும் என இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கை கூறுகிறது.
வழங்களை சமமாக பங்கிடுதல் மட்டுமல்லாமல் நிலத்தை உழுவதின் மூலமாகவும் அவற்றை செழுமைப்படுத்தியும் உற்பத்தியைப் பெருக்க முடியும் என்று அறியப்படுகிறது. இவ்வாறாக ஒன்றுக்கொன்று தொடர்பற்ற இரு வேறு கோணத்திலிருந்து இஸ்லாம் பொருளாதாரத்தை விளக்குகிறது.
1. பொருளாதாரக் கொள்கை.
2. பொருளாதார முன்னேற்றம்(பொருள் உற்பத்தியும் பெருக்கமும்).
பொருளாதாரக் கொள்கை.
பொருளாதாரக் கொள்கைகளை இரு வகைகளாக வகுத்து நோக்கலாம்.
1. பொருளாதாரத்தின் முக்கிய வருமான வழிகள்.
2. அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கிய முறைகள்.
பொருளாதார முன்னேற்றம்.
வழங்களை வளர்க்கும் வழிமுறைகள் கூர்ந்து நோக்க வேண்டிய ஒரு விசயமாகும். மனித தேவைகளை கருத்திற்கொள்ளாது உற்பத்தியை மட்டும் கருத்திற் கொள்வதால், நாட்டிற்கு நாடு இது வேறுபடுகிறது. இஸ்லாமிய நாட்டில் தொழிற் புரட்சியின் வாயிலாக விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் வழிமுறையினை கண்டறிவமே இதன் முக்கிய நோக்கமாகும். அதன் மூலம் பொருளாதார முன்னேற்றத்திற்கு தொழிற்சாலைகள் முக்கிய பங்காற்றுமாறு செய்யலாம். இவ்வணுகுமுறையை நான்கு பகுதிகளாக நோக்கலாம்.
1. விவசாயக் கொள்கை
2. இயந்திரமயமாக்கற் கொள்கை
3. திட்டங்களுக்கான மூலதனம்
4. வெளிநாட்டுச் சந்தை உருவாக்கம்
விவசாயக் கொள்கை
இது பண்ணை உற்பத்தி அதிகரிப்பை அடிப்படையாக்க கொண்டதாகும். இது பின்வரும் முறைகளை உள்ளடக்கியுள்ளது.
மண்ணின் விளைச்சலை அதிகரித்தல் : இது அதி நவீன இயந்திரங்களையும், இரசாயண பொருட்களையும், உற்பத்தித்திறன் மிக்க விதைகளையும் உபயோகிப்பதன் மூலமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. இவற்றை கொள்முதல் செய்யமுடியாத விவசாயிகட்கு மானியங்கள் வழங்குவதையும் (கடன்கள் அல்ல), முடியுமாணோரை ஊக்குவிப்பதையும் அரசு மேற்கொள்ளும்.
உற்பத்திக்கான நில அளவை அதிகரித்தல் : நில அளவை அதிகரித்தல் என்பது விவசாயிகளிடம் இருக்கும் உற்பத்தி நிலங்களை அதிகரித்தலாகும். இது உலர் நிலங்களை விவசாயத்திற்கு ஏற்ற முறையில் மாற்றியமைக்க உதவுவதோடு நிலமற்ற சிறிய அளவிலான விவசாயிகட்கு அரசாங்கத்தின் கைவசம் இருக்கும் நிலங்களை வழங்குவதன் மூலமாகவும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. விளைநிலத்தை, விளைச்சலின்றி மூன்று ஆண்டுகள் வைத்திருப்பது ஹராம் ஆதலால் அவ்வாறு செய்வோரின் நிலங்களை அபகரித்து விவசாயத்திற்கு ஈடுபடுத்தப்படவேண்டும்.
இவ்விரு முறைகளின் மூலமாக விவசாய உற்பத்தியில் முன்னேற்றம் காணப்படுவதோடு விவசாயக் கொள்கையின் நோக்கம் நிறைவேற்றப்படுகிறது. இக்கொள்கையை அமுல்படுத்தும் நிலையில் வேறு சில விசயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். விளைச்சலை அதிகரிப்பதோடு அதன் தரத்தையும் அதிகரித்தல் அவசியமாகும். இது நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலமாக சாத்தியமடைவதால் இயந்திரத் தொழிற்புரட்சியை ஏற்படுத்துதல் முக்கியத்துவம் மிக்கதாக காணப்படுகிறது.
அகவே விவசாயத் தறனை அதிகரிப்பதில் பின்வரும் நோக்கங்கள் அடிப்படையாக அமையவேண்டும்.
1. அன்றாடத் தேவை, நீண்ட கோடை, விளைச்சல் சரிவு, வர்த்கத் தடை, என்பனவற்றை மனதிற்கொண்டு இச்சந்தர்ப்பங்களை முகம் கொடுக்கும் வகையில் உணவு உற்பத்தியில் முன்னேற்றம் காண வேண்டும். இதன் போது விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு இரண்டிலும் கவனம் செலுத்துதல் அவசியம்
2. ஆடை அணிகட்கு தேவையான பருத்தி, பட்டு, கம்பளி போன்ற மூலப்பொருட்களின் உற்பத்தியல் முன்னேற்றம் காணல். இதன் முக்கிய நோக்கம் வர்த்தகத்தடையின் போது அறக்குமதியினை சார்ந்திராது சுயதேவையினை பூர்த்தி சய்து கொள்வதேயாகும்.
3. வெளிநாட்டு சந்தையில் கிராக்கி நிலவும் பொருள்களின் உற்பத்தியல் முன்னேற்றம். அது ஆடை அணிகலன்களானாலும் சரி அல்லது உணவுப் பொருட்களான பேரீத்தம் பழம் போன்ரவையானாலும் சரி.
அணைகள் கால்வாய்கள் கிணறுகள் அமைத்தல் போன்ற அபிவிருத்தித் திட்டங்கள் மிக அவசியமாயின் முக்கியத்துவம் அளிக்கப்படல் வேண்டும். இதன் நோக்கம் விவசாயப்புரட்சியினை மட்டும் ஏற்படுத்துவதல்ல. மாறாக இயந்திரப் புரட்சியினை, விவசாயத்தை புறக்கணிக்காமல் ஏற்படுத்தி, உற்பத்தியினை அதிகரித்தலாகும். இதன் முக்கிய நோக்கம் பொருள் அபிவிருத்தியினை உண்டாக்குவதே. இது இயந்திரப் புரட்சியன்றி சாத்தியமாகாது.
இன்றைய முஸ்லிம் உலகின் பொருளாதாரம் ஒரு தோழிற்சாலைகளுடன், விவசாயத்தை மட்டுமே முழுமையாக ஒன்றியதாக உள்ளதால் பொருளாதார பின்னடைவு பெற்றதாக காணப்படுகிறது. அதனால் இயந்திரப் புரட்சி ஏற்படுத்த அதிகளவிலான முயற்சி மிக அவசியமாகும். குடியேற்ற சக்திகளின் நோக்கம் ஏனைய நாடுகளை விவசாயத்தில் மட்டும் கவனம் செலுத்தச் செய்து, இயந்திர தொழில் முயற்சிகளை தடைசெய்து அவ்வியந்திரங்கட்காக மேற்குலகை நம்பியிருக்கவைப்பதாகும். ஆகவே விவசாயத்தினை மட்டும் ஊக்குவிக்க முனையும் இவர்களின் திட்டங்களை அலட்சியப்படுத்துதல் மிக அவசியமாகும். ஷரீஆ முடிவை இவ்விடம் கூறுவது பயனளிக்கும், “சமூகத்திற்கு பயன்தரக்குடிய வீண்விரயமற்ற செயல்திட்டங்கட்கு பொருள் விநியோகிக்க முடியுமானவிடத்து அதனை மேற்கொள்ளல் கடமையாகும்” அதாவது மூலதனம் இருக்குமாயின் அதனை மேற்கொள்ளல் அவசியமானது. அச்செயல்திட்டம் அதி முக்கியமாக இல்லாவிடில் வரிவிதித்தலையோ அல்லது தன் நாட்டு மக்கள்டையே கடன் வாங்கியோ மேற்கொள்ளக் கூடாது.
இயந்திரமயமாக்கற்கொள்கை.
இக்கொள்கையின் முக்கிய நோக்கம் நாட்டை இயந்திரமயமாக்கலாகும். இக்குறிக்கோளை அடையக்கூடிய முக்கிய வழியானது இயந்திரங்களை உற்பத்தி செய்வதாகும். பின் மற்றைய உற்பத்தித் தொழிற்சாலைகளை மேற்கொள்ளலாம். இவ்விலக்கை அடைய மாற்று வழியேதும் இல்லாததால் இயந்திரங்களை வடிவமைக்கும் தொழிற்சாலைகளை நிறுவுவதில் முக்கியத்துவம் அளித்தல் மிக அவசியமானது. இதன் மூலம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட இயந்திரங்களால் இயங்கும் தொழிற்சாலைகளை அமைக்கும் வாய்ப்பு வாய்க்கிறது. “இயந்திரங்களை உற்பத்தி செய்வதானது அதிக காலம் எடுக்கும் ஒரு நடைமுறை ஆதலால் நுகர்வோர் பாவனை பொருள் உற்பத்தியினை மேற்கொள்ளும் தொழிற்சாலைகளை முதலில் அமைத்தல் வேண்டும்” என்பது அடிப்படையற்ற நாசகாரத்தை நோக்கிய ஒரு கருத்தாகும். இது இஸ்லாமிய நாடுகளை தன் பொருட்களின் சந்தையாக மாற்றுவதற்காக மேற்கத்திய நாடுகளால் திணிக்கப்பட்ட ஒரு கருத்தேயன்றி வேறில்லை.
மேலும் இந்நோக்கை அடைய இயந்திரத் தொழில்நுட்ப அறிவுடைய மனிதவளத்தை முதலில் உருவாக்க வேண்டும் என்பது தவறான கருத்தாகும். மேற்குலகில் அளவிற்கு அதிகமாக காணப்படும் பொறியாலார்களையும் தொழில்நுட்ப வல்லுனர்களையும் ஒப்பந்த முறையில் வேலைக்கு அமர்த்துவதுடன் முஸ்லிம் இளைஞர்களை வெளிநாடுகளில் இத்துறைகளில் கற்கவைக்கலாம். மேலும் கற்றுக் கொண்டிருப்போரையும் உபயோகிக்கலாம். ஆகையால் சிறு அல்லது நுகர்வோர் பாவனை பொருட் தொழிற்சாலைகளை உருவாக்க முனைவதன் மூலம் இயந்திரமயமாக்கல் முயற்சி வீணடிக்கப்படக்கூடாது. முதல் படியே இயந்திரங்களை உற்பத்தி செய்தலாக அமையவேண்டும். இக்கொள்கைக்கான படிமுறைகளை ஒன்றன்பின் ஒன்றாக மேற்கொள்ளப்படாது ஒரே சமயத்தில் மேற்கொள்ள வேண்டும். ஒரு படியினை நிறைவேற்றிய பின்பே மற்ற படியினை ஆரம்பித்தல் என்பது இம்முயற்சிக்கு எதிரான ஒரு தடையாகும்.
தற்போதுள்ள நுகர்வோர் பாவனை பொருள் உற்பத்தித் தொழிற்சாலைகளை மேலும் விரிவுபடுத்துவதில் கவனத்தை செலுத்துவதை தவிர்த்து இயந்திரமயமாக்கலில் முழு கவனத்தையும் செலுத்துதல் அவசியம். சுய உற்பத்தியை ஆரம்பிக்கும் வரையில் தற்போதுள்ள இறக்குமதி கொள்கையினை, இஸ்லாமிய பொருளாதார கொள்கையை, அமலில் வைக்கலாம். அரசின் கீழுள்ள கனிமப்பொருள் அகழ்வுத்துறுயும் இதே நுணுக்கத்தை கையாளலாம். இஸ்லாமிய கொள்கைகளின் பிரகாரம் இத்துறையின் பிரதிநிதியான இஸ்லாமிய அரசு, இத்துறைக்குத் தேவையான உபகரணங்களை சுய உற்பத்தியில் மேற்கொள்ள முனைய வேண்டும். இந்நிலையினை அடையும் வரை இறக்குமதியை மேற்கொள்வதோடு தன் கவனத்தை சிதறடிக்காது இயந்திரமயமாக்கலில் முழுதாக செலுத்தவேண்டும்.
திட்டங்களுக்கான மூலதனம்
அரசும், தனியார் துறையும் பொறுப்பேற்க வேண்டிய திட்டங்கள் எவை என இஸ்லாத்தில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. விவசாயத்துறை முற்றுமுழுதாக தனியார் வசம் தெல்வதோடு, மானியம் வழங்கல் கட்டடங்களுக்கான முதலீடு மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் ஆகியவற்றில் அரசு பங்கேற்கும். ஆனால் இயந்திரமயமாக்கலில் அரசு மற்றும் தனியார் ஆகிய இரு துறையும் பங்கேற்கும். ஆனால் எண்ணை கனிம்ப்பொருள் அகழ்வு என்பன அரசின் கீழ் வருதல் கட்டாயமாகும். ஏனெனில் புமியினின்றும் கிடைக்கும் கனிமப்பொருட்கள் முஸ்லிம் உம்மாவுக்கு சொந்தமானது. எனவே அதன் பிரதிநிதியான இஸ்லாமிய அரசே அதனை பேணிப்பாதுகாக்க வேண்டும்.
தனியார் மற்றும் அரசு இரண்டும் திட்டங்களுக்கான மூலதனம் திரட்டல் அவசியம். தனியார் துறையை பொருத்தமட்டில் இது தனியொருவரோ அல்லது பங்காளர்கள் இணைந்தோ சட்டவிரோதமற்ற, இஸ்லாத்திற்கு எதிரான முறையில் இல்லாமல் அமைத்துக் கொள்ளலாம். அரசினை பொருத்தமட்டில் இதற்காக வெளிநாட்டு உதவிகளில் இருந்து தவிர்த்தல் அவசியம். இது வறுமையையும் வெளிநாட்டினை சார்ந்திருக்கும் நிலையையும் உண்டாக்குகிறது. அதுமட்டுமன்றி வெளிநாட்டு கடன்கள் வட்டியை அடிப்படையாகக் கொண்டதாகும். வட்டி இஸ்லாத்தில் ஹராமாக்கப்பட்டுள்ளதால், வெளிநாட்டுக் கடன்களை விலக்குதல் அவசியம். ஆகையால் திட்டங்களுக்கான மூலதனத்திரட்டல், அது அதி முக்கியத்திட்டமாக இருப்பின், தன் மக்களிடம் வரிவிதித்தல் மூலம் மேற்கொள்ளலாம். இதன்போது இஸ்லாமிய வரிவிதிப்புக் கொள்கை செயல்படுத்தப்படவேண்டும். திட்டங்களுக்கான மூலதனத்திரட்டல் தவணை முறையாலும் மேற்கொள்ளப்படலாம். இதன்போது அதன் கொள்ளளவு விலையிலும் அதிகமாக காணப்படுமாயின் அது வட்டி ரீதியாக அமையாது விலை ரீதியில் அமையுமாயின் மேற்கொள்ளலாம்.
வெளிநாட்டுச்சந்தை உருவாக்கம்
பொருள் சந்தைப்படுத்தலானது வருமானத்தை தரக்கூடிய முக்கிய வழியாகும். பல நாடுகள் தன் பொருட்களுக்கான சந்தை உருவாக்கலில் அன்றுபோல் இன்றும் மும்முறமாக ஈடுபட்டுள்ளன. பல பொருளாதார வல்லரசுகள் இதன் மூலம் உருவாகியுள்ளன. ஆகையால் இஸ்லாமிய அரசும் தன் பொருள்களை வேளிநாட்டு சந்தையில் சந்தைப்படுத்தல் முக்கியமாகும். ஆனால் இது ஒரு தனி நோக்கமாக அமையாது. இயந்திரமயமாக்கலுக்கு தேவையான பொருள் கொள்முகல், தழும்பலற்ற அன்னியசிசெலாவணி திரட்டு, முஸ்லிம் இளைஞர்கட்கு பொறியியல் வைதிதியத் துறைகளில் கல்வி என்பவற்றை கருத்தில் கொண்டு அமையவேண்டும். வர்த்தகம், இயந்திரமயமாக்கலை நோக்காக கொண்டு அமையவேண்டும். இதன்போது ‘வர்த்தகமீதி’ யில் கவனம் செலுத்துவது அவசியமற்றது. வர்த்தகமானது, இயந்திரமயமாக்கலுக்கும், இஸ்லாமிய தூது ஏனைய நாடுகளை அடையும் வகையில் இருப்பின், ஏற்றுமதி இறக்குமதியிலும் அதிகமாகவோ, சமமாகவோ அல்லது குறைவாகவோ அமைதலைப்பற்றி சிந்திக்கவேண்டிய அவசியம் கிடையாது. அனைத்து நாடுகளும் பொருட்கள் எங்கு உற்பத்தியாகின்றன என்பதை நோக்க்கிறது. எனினும் நம் கொள்கை வர்த்தகர்கள் எந்நாட்டை சேர்ந்தவர்கள் என்பதில் கவனம் செலுத்துகிறது. அதன் மூலமே இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொள்ள முடியும். இஸ்லாமிய நாட்டைச் சார்ந்த வர்த்தகத்கள் இஸ்லாமிய ஷரீஆவால் அனுமதிக்கப்பட்ட வகையில் வர்த்தகம் செய்வர். வெளிநாட்டவர் தன் சொந்த கொள்கையினை பின்பற்றி வர்த்தகம் செய்வர். இம்முறை உற்பத்தியை அதிகரிக்க உதவும்.
சுருக்கம்.
நாம் இன்று மேலைத்தேய முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையால் பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ளோம். சுதந்திர வர்த்தக நடைமுறைகள் (free trade), உலக நிதி நிறுவனம் (IMF) பின்பற்றும் கொள்கைகள் (இது அடிப்படை தேவைகளில் நிறைவற்ற தன்மையை உருவாக்கும்), இன்றைய முஸ்லிம் நாடுகளில் சுரண்டல் ஆகியவற்றால் அல்லாஹ் தன் அருளால் வழங்கிய வளம் வீணாகி உபயோகமற்றதாகிவிடுகிறது. தெளிவான ஒரு தலைமைத்துவத்தைக் கொண்டுள்ள, குர்ஆன் மற்றும் சுன்னாவினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முறையான கிலைஃபா முறைக்கு திரும்புவதற்கு இதுவே தக்க தருணமாகும்.
முஸ்லிம்களின் நோக்கம் அல்லாஹ் (சுபு)வின் மார்கத்தை அமுல்படுத்தி, இதனை முழு மனித சமுதாயத்திற்கும் சென்றடைய செய்வதாகும். இஸ்லாமிய பொருளாதார கொள்கையானது இயந்திரமயமாக்கல் மூலம் வல்லரசாகி தஆவா, ஜிஹாத் மூலம் இஸ்லாத்தை மற்றையோருக்கு சென்றடைய செய்வதுடன் தன் குடிமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதாகும். அமெரிக்கா, பிரிட்டிஷ் (முதலாளித்தும்), ரஷ்ய (கம்யூனிஸம்) மற்றும் ஏனைய முஸ்லிம் அல்லாதோர்தளின் கொள்கையை பின்பற்றும் அதிகாரத்தை மீட்பதன் மூலமே நம் இலக்குகளை நாம் அடையமுடியும்.
மேலும், (நபியே !) அல்லாஹ் இறக்கிவைத்ததைக் கொண்டு நீர் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பீராக நீர் அவர்களுடைய மன இச்சைகளைப் பின்பற்றியும் விடாதீர். அன்றியும், உமக்கு அல்லாஹ் இறக்கிவைத்த்தில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைத் திருப்பி விடாதபடியும், நீர் அவர்களைப் பற்றி எச்சரிக்கையாக இருப்பீராக. (உம்முடைய தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விட்டால், அப்போது அல்லாஹ் (சுபு) நாடுவதெல்லாம் அவர்களின் சில பாவங்களின் காரணமாக அவர்களை அவன் (தண்டிக்க) பிடிப்பதைத்தான் என்பதை நீர் அறிந்து கொள்வீராக. மேலும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகளாவர்.
அறியாமை காலத்துத் தீர்ப்பையா அவர்கள் தேடுகின்றனர். உறுதியாக நம்பிக்கை கொண்ட சமூகத்திற்குத் தீர்ப்பளிப்பதில் அல்லாஹ்வை விடவும் மிக்க அழகானவன் யார் ? (TMQ 5:49, 50)
No comments:
Post a Comment