அமைச்சர் திஸாநாயக்க |
வந்தாறுமூலையில் இருக்கும் கிழக்கு பல்கலைகழகத்திலுள்ள காவல் நிலையத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கோரி மாணவர்கள் போராடி வருகின்றனர். ஆனால் அவர்களது கோரிக்கையை ஏற்க இயலாது என்று அங்கு விஜயம் செய்த அமைச்சர் எஸ் பி திஸாநாயக்க என்று கூறிவிட்டார்.
பல்கலைகழக மாணவர்களுக்கும், பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிசாருக்கும் இடையே ஏற்பட்டுள்ள முறுகல் நிலை காரணமாக கடந்த மாதம் 30ஆம் தேதி முதல் கிழக்கு பல்கலைகழகத்தில் கல்விச் செயற்பாடுகள் தடைபட்டுள்ளன.
அங்கு நிலவும் நெருக்கடி குறித்து ஆராய்வதற்காக புதன்கிழமை அங்கு விஜயம் செய்த அமைச்சர் திஸாநாயக்க, அங்கு விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் போது "பல்கலைகழக வளாகத்திலிருந்து பொலிஸ் காவல் நிலையத்தை அகற்ற முடியாது" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.
மாணவர்கள் மற்றும் பல்கலைகழகத்தின் பாதுகாப்பு கருதியே அங்கு பொலிஸ் காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார். மாணவர்களின் கோரிக்கையை ஏற்று அந்த பொலிஸ் காவல் நிலையம் அகற்றப்பட்டால், அங்கு பாதுகாப்புக்காக இராணுமோ அல்லது கடற்படையினரோ அல்லது சிறப்பு அதிரடிப் படையினரோ கடமையாற்ற வேண்டி வரும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமது கோரிக்கை நிராகரிக்கப்பட்டாலும், அமைச்சருடனான சந்திப்பை அடுத்து வியாழக்கிழமை முதல் மாணவர்கள் விரிவுரைகளுக்கு சமூகமளிப்பர் என்று மாணவர் ஒன்றியத் தலைவர் கூறுகிறார்.
No comments:
Post a Comment