அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிரானவரா?
அன்னா ஹசாரே காங்கிரசுக்கு எதிரானவரா?
பிஜேபி ஆட்சியிலும் ஊழல் இருந்தது. காங்கிரஸ் ஆட்சியிலும் ஊழல் இருக்கிறது என்கிறார் அன்னா ஹசாரே.
ஆனால் இன்று இருக்கும் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக அன்னா ஹசாரே போராடுவது பிஜேபிக்குத்தான் சாதகமாகிப் போகும்.
மோடியைப் பாராட்டிய ஹசாரே, தான் மதச்சார்பற்றவர் என்று கூறுகிறார்.
ஆனால் ஹசாரே கோயிலில் தங்கியிருக்கிறார். அதனால் அவருக்கு மத உணர்வு இருக்க வேண்டும் என்பது இல்லை.
அவருக்குப் பின்னால் திரண்டவர்கள் எல்லோரும் மதச்சார்பு கொண்டவர்கள் என்று பொருள் அல்ல.
ஊழலை எதிர்த்தால் அதற்கு ஏன் மதச்சார்பு சாயம் பூச வேண்டும்?கூடாது.
ஆனால் யாருடைய ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே போராடுகிறார் என்பதுதான் முக்கியம்.
அவர் இப்போது காங்கிரசின் ஊழலுக்கு எதிராகப் போராடுகிறார்.
இப்போது ஆட்சியில் காங்கிரஸ் இருப்பதால் அவர் காங்கிரசின் ஊழலுக்கு எதிராகத்தான் போராட முடியும்.
ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ்காரர்கள் ஊழலுக்கு எதிரானப் போராட்டத்தை முடக்குபவர்கள் என்று அவர் காட்ட நினைக்கலாம்.
இன்றைய உண்மைகள் காங்கிரசுக்கு எதிரான ஒரு போராட்டத்தை ஊக்குவிக்கின்றன. ஒரு சக்திக்கு எதிராகத்தான் எதிர்சக்தி உருவாக முடியும். அது காங்கிரசுக்கு எதிராக இப்போது நடைபெறுகிறது.
காங்கிரசுக்கு எதிராக இருக்கும் சக்திகள் அனைத்தும் மதச்சார்பு சக்திகள் என்று கொள்ள முடியாது. கூடாது.
காங்கிரசே முழுக்க முழுக்க மதச்சார்பற்ற சக்தி என்றும் பார்க்கப்பட முடியாது. காங்கிரசின் மூத்த அதிகார மையங்கள் சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதிகளாக இருக்கின்றன.
சிறுபான்மை சமூகத்தின் அதிகார மையங்களின் கீழே ஊழல் அதிகாரம் ஒன்று உருவாகிக் கிடக்கிறது என்றுதான் எதிர்சக்திகள் காட்ட நினைக்கின்றன.
அது அப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது.
ஊழல் அதிகாரங்களை உடைக்கும்போது மேலே ஆட்சி செலுத்தும் அதிகார மையங்கள் உடைந்துவிடும்.
இப்போது அந்த அதிகார மையங்கள் சிறுபான்மை மையங்களாக இருக்கின்றன. எனவே அவைதான் உடையும். உடைய வேண்டும்.
ஊழலுக்கு எதிரான போராட்டம் சிறுபான்மை பிம்பங்களுக்கு எதிரான போராட்டம் என்ற குற்றச்சாட்டு இப்படித்தான் நிகழ்கிறது.
குற்றச்சாட்டுகளுக்கு பயந்தால் எந்தப் போராட்டமும் நடக்க முடியாது.
ஊழலுக்கு எதிரான போராட்டமும் அப்படித்தான்.
அதனால் அன்னா ஹசாரே வெற்றி பெறுவார். வெற்றி பெற வேண்டும்.
இந்த நாடே அவருக்குப் பின்னால் அணி திரளக் காத்திருக்கிறது.
அல்லது, அப்படிக் காட்டப்படுகிறது.
எப்போதும் எந்தப் போராட்டமும் தன் உண்மைத் தோற்றத்தை வெளிக்காட்டிக் கொண்டதில்லை.
அன்னா ஹசாரேயின் போராட்டத்தினுடைய உண்மைத் தோற்றம் தெரிய பல ஆண்டுகள் ஆகலாம்.
ஆகும்.
No comments:
Post a Comment