Thursday, April 21, 2011
இந்திய மாணவரைக் கொன்றேன்: 16 வயது ஆஸ்திரேலியர் வாக்குமூலம்.
மெல்போர்ன், ஏப்.21: கடந்த ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த நிதின் கர்க் என்ற மாணவரைக் கொன்றதை ஆஸ்திரேலிய இளைஞன் ஒப்புக் கொண்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு எதிரான தாக்குதல் அதிகரித்த நிலையில் அது இன வெறி தாக்குதலா? என்ற அச்சம் உருவானது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பஞ்சாபைச் சேர்ந்த நிதின் கர்க் என்ற 21 வயது மாணவர் அடையாளம் தெரியாத ஒருவரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியர்கள் மத்தியில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்தியர்களுக்கு அதிக பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று இந்திய அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக ஒரு இளைஞன் கைது செய்யப்பட்டார். குற்றவாளியின் நண்பர் ஒருவருக்கு 18 மாதம் சிறுவர் சீர்திருத்தப் பள்ளி ஒன்றில் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டது. தனது நண்பருக்கு கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை வழங்கியதை ஒப்புக் கொண்டார். தனது நண்பர்தான் கொலை செய்ததாக தனக்கு தெரிய வந்ததாக அவர் விசாரணையின்போது குறிப்பிட்டார். இதனடிப்படையில் கொலையாளி என கருதப்பட்ட இளைஞனது வீட்டில் ஒட்டுக் கேட்புக் கருவியை போலீஸôர் வைத்தனர். கொலையாளிக்கும் அவரது தாய்க்கும் இடையிலான உரையாடலில் அவர்தான் இந்த கொலையை செய்துள்ளார் என்பது நிரூபணமானது. இதனடிப்படையில் அந்த இளைஞன் கைது செய்யப்பட்டதாகவும் அவரை உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் போலீஸôர் தெரிவித்தனர். ஆனால் கைது செய்யப்பட்ட இளைஞனின் புகைப்படம், அவரைப்பற்றிய விவரம் எதையும் வெளியிட மறுத்துவிட்டனர். இந்த வழக்கு விசாரணை ஜூன் மாதம் நடைபெற உள்ளது. அதுவரை அந்த இளைஞன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக போலீஸôர் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment