உலகப் பொருளியல் நெருக்கடியால் எண்ணெயின் தேவை வெகுவாகக் குறைந்துள்ளது. இதன் காரணமாக எண்ணெய் துரப்பண மேடைகளின் தேவையும் குறைந்து வருகிறது.
உலகில் எண்ணெய்க்கான தேவை சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் வரை உச்சத்தில் இருந்து வந்தது.
இதனால் எண்ணெய் விலை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து ஒரு பீப்பாய் எண்ணெய் கிட்டத் தட்ட 149 அமெரிக்க டாலருக்கு விற்பனையாகி வந்தது.
ஆனால், அதன்பின் வந்த பொருளியல் நெருக்கடி இந்த நிலையை அப்படியே தலைகீழாக மாற்றிவிட்டது.
No comments:
Post a Comment