அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, October 26, 2011

கடைகளில் மக்கள் கூட்டம் ஸ்டீவ் ஜாப்ஸ் புத்தகம் சீனாவில் கடும் கிராக்கி!!!


பெய்ஜிங் : ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றிய வாழ்க்கை வரலாற்று புத்தகத்துக்கு  சீனாவில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. கடைகள் முன் நீண்ட வரிசையில் காத்திருந்து புத்தகங்களை மக்கள் வாங்கிச் செல்கின்றனர். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் 1955ல் பிறந்த ஸ்டீவ் ஜாப்ஸ், 21 வயதில் கம்ப்யூட்டர் துறையில் கால்பதித்து ஆப்பிள் நிறுவனத்தை நிறுவினார். கம்ப்யூட்டர் துறையில் உலகின் சிறந்த நிபுணர்களை உருவாக்கியதுடன் பல புதிய பொருட்களை அறிமுகப்படுத்தினார். 




இளம் வயதிலே உலக பணக்காரர்களில் ஒருவரானார். கம்ப்யூட்டர் உலகில் புரட்சியை ஏற்படுத்திய ஸ்டீவ் ஜாப்ஸ் (56) புற்றுநோய் பாதிப்பால் அக்டோபர் 5ல் இறந்தார். இந்நிலையில் ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கை குறிப்பு பற்றி 630 பக்க புத்தகம் ஒன்றை வால்டர் இசாக்சன் என்பவர் அண்மையில் வெளியிட்டார். அதில் ஸ்டீவ் மனைவி, சகோதரி, நண்பர்கள், மருத்துவர்களிடம் திரட்டப்பட்ட தகவல்கள் மற்றும் கடைசி 2 ஆண்டுகளுக்கு மேலாக அவரிடம் நடத்திய நேர்காணல்கள் மூலம் கிடைத்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன. 


இந்த புத்தகத்தின் சீனா பதிப்பு அந்நாட்டின் 21 முக்கிய நகரங்களில் குறிப்பிட்ட 30 புத்தக கடைகளில் விற்பனைக்கு வந்தது. காலை 6 மணி முதலே புத்தகத்தை வாங்க கடைகள் முன்பு நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். விற்பனை தொட ங்கிய ஒரு மணி நேரத்துக்குள் அனைத்து புத்தகங்களும் விற்றுத் தீர்ந்தன. ரூ.550க்கு விற்பனையான ஸ்டீவ் பற்றிய புத்தகத்தை பல்வேறு வயதுடையோர், உறவினர் மற்றும் நண்பர்களுக்கும் சேர்த்து வாங்கிச் சென்றனர். சிலர் ஆன்லைன் மூலம் பதிவு செய்தும் வாங்கினர்.

No comments: