பாபா வாம் தேவ் ராம் எனப்படும் அவருக்கு பாம்தேவ் என்றும் ராம்ஜி மஹராஜ் என்றும் வேறு பெயர்கள் உள்ளனவாம். இந்தப் போலியை கடந்த செவ்வாயன்று பஞ்சாபி பாக் பகுதியில் காவல்துறை கைது செய்துள்ளதாக துணை ஆணையர் வி. ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
பெயர் குறிப்பிடப்படாத அந்த 18 வயது இளம்பெண் தன் பணியகத்தில் பாலியல் தொல்லைக்குள்ளானதால், பாபாவிடம் மனோ ஆலோசனை பெற வந்தபோது, வாணலிக்குத் தப்பி அடுப்பில் விழுந்தாற்போல் தன்னிலை ஆனதாகவும் 'பாபா'வும் தன்னை வன்புணர்ந்ததாகவும் காவல்துறையில் கடந்த மே மாதமே முறையிட்டுள்ளார்.
பன்னிரெண்டாவது வரை படித்துவிட்டு, பகவத் கீதை, ராம் கதா, ஆகியவற்றை சொற்பெருக்குச் செய்து பிரபலமடைந்த பாபாவை ஆள் கடத்தல் வழக்கில் ஜார்க்கண்டின் சிமேட்கா நகர காவல்துறை கடந்த 2006 ஆம் ஆண்டே கைது செய்ததும், பின்னர் அவரை கூட்டுவன்புணர்வு வழக்கொன்றில் ராஞ்சி நகர காவல்துறை தேடி வருவதும், குறிப்பிடத்தக்கது.
ஜார்கண்டிலிருந்து மலைவாழ் இளம்பெண்களை வேலைவாய்ப்பு ஆசை காட்டி டெல்லிக்கு அனுப்பும் வழக்கம் கொண்டிருந்த பாபா, அவர்களுக்காக மனோ ஆலோசனை மையம் என்ற பெயரில் துஷ்பிரயோகம் செய்வந்துள்ளதாகவும் துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment