சமச்சீர் கல்வி திட்டத்தை எதிர்த்த ஜெயலலிதா அரசுக்கு நல்ல தீர்ப்பு கிடைத்தது போல புதிய தலைமை செயலக வழக்கிலும் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம். சமச்சீர் கல்வி திட்டத்தை தாமதமாக செயல்படுத்துவதால் மாணவர்களுக்கு ஏற்படும் இடைக்கால இழப்பீட்டை ஈடுசெய்ய கல்வியாளர்களை கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டும். சமச்சீர் கல்வியின் வெற்றி, சாமான்ய மக்களுக்கு, மாணவர்களுக்கு தமிழர்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.
இதே தீர்ப்பு தி.மு.கழக ஆட்சியிலே உச்சநீதி மன்றத்தினால் வழங்கப்பட்டிருந்தால், உடனடியாக கருணாநிதி பதவி விலக வேண்டுமென்று அறிக்கை விடுத்திருப்பார் அம்மையார் ஜெயலலிதா. அதைப் போல நான் தற்போது அறிக்கை விடுவதற்கு விரும்பவில்லை. இனியாவது இதுபோன்ற பிரச்சினைகளில் ஜெயலலிதா தனது பிடிவாதப் போக்கினைக் கைவிட்டு நாட்டு நலன்கருதி தன்னுடைய அணுகுமுறையையும், நடவடிக்கைகளையும் மாற்றிக் கொண்டு செயல்படுவார் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். சமச்சீர் கல்விக்குக் கிடைத்த இந்த உச்சகட்ட வெற்றியை அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வோம்
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment