முல்லைப் பெரியாறு அணையின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு நடத்த வருமாறு ரூர்கி ஐ.ஐ.டி. நிறுவனத்துக்கு கேரள அரசு அழைப்பு விடுத்துள்ளது.
திருவனந்தபுரத்தில் முதலமைச்சர் உம்மன் சாண்டி தலைமையில் நடைபெற்ற கேரள அரசின் உயர் நிலைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள இடுக்கி பகுதியில் அண்மையில் 3.5 ரிக்டர் அலகில் நிலநடுக்கம் பதிவானது. பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டால் அணையின் நிலைமை என்ன என்பது குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க ரூர்கி ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தை கேட்டுக் கொள்வது என்று கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டது.

No comments:
Post a Comment