ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக்பாட்சாவின் சாவில் இருந்துவந்த மர்மம் விலகியது.
ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதற்காக, சாதிக்பாட்சாவுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். விசாரணைக்கு ஆஜராகவேண்டிய நாளான கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி தேனாம்பேட்டையில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் சாதிக் பாட்சா தூக்கில் தொங்கினார்.
அவரது சாவில் பல்வேறு மர்மங்களும், சந்தேகங்களும் இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் சாதிக்பாட்சா மரணம் குறித்து விசாரணை நடத்துவதற்காக டெல்லியில் இருந்து அகில இந்திய விஞ்ஞான மருத்துவ கழக தடயவியல் நிபுணர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை வந்தனர். சாதிக்பாட்சாவின் பிரேத பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்த அவர்கள் இது தொடர்பாக விசாரணையை முடுக்கி விட்டனர். அப்போது சாதிக்பாட்சா தற்கொலை செய்து கொண்டது உறுதியானது.
இது தொடர்பான அறிக்கை டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகளிடமும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களாக சாதிக்பாட்சா சாவில் நிலவி வந்த மர்மம் தற்போது விலகியுள்ளது.

No comments:
Post a Comment