முந்தைய திமுக அரசுக் காலத்தில் உளவுப் பிரிவு ஏடிஜிபி யாக பணியாற்றிய ஜாபர் சேட்டுக்கு அரசு வீட்டு மனை ஒதுக்கப் பட்டதில் முறைகேடு செய்ததாக புகார் அளிக்கப் பட்டதை அடுத்து கடந்த மாதம் 26 ம் தேதி சென்னை அண்ணா நகரில் உள்ள ஜாபர் சேட்டின் வீடு உள்ளிட்ட 9 இடங்களில் லஞ்ச தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
அவரது வீட்டில் நடைபெற்ற சோதனையில் பல்வேறு முக்கிய தகவல்கள் அடங்கிய சி டி மற்றும் லேப் டாப் சிக்கியதாகத் தெரிகிறது. இந்நிலையில் மண்டபம் அகதிகள் முகாமில் பணியாற்றி வரும் ஏடிஜிபி ஜாபர் சேட் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறை செயலாளர் ரமேஷ் ராம் மிஸ்ரா பிறப்பித்துள்ளார்.
No comments:
Post a Comment