பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் A.S.இஸ்மாயில் |
மேலப்பாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்திமுடித்தனர். இந்த ஆர்பாத்தில் சுமார் 2000 துக்கு அதிகமாக ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். இந்த ஆர்பாட்டத்தின் மூலம் மேலப்பாளையம் சந்தை முக்கு பெரிய மாநாடு நடைபெறுவதை போல காட்சியளித்தது.
SDPI மாநிலத்தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாக்கவி |
நம் நாட்டில் சுதந்திர போராட்டத்தின் தொடக்கமான 1857 சிப்பாய் கலகம் நடைபெற காரணமாக அமைந்தது தொடங்கி, கப்பலோட்டிய தமிழனுக்கு கப்பல் வாங்குவதற்கு பொருளாதார ரீதியாக உதவி செய்தது, தனது இரண்டு மகன்களின் தலைகள் துண்டிக்கப்பட்ட போதும் இந்தியாவிற்கான சுதந்திரத்தை வென்றெடுக்கும் போராட்டத்தில் சற்றும் பின்வாங்காத மாமனனர் பகதூர்ஷாவின் தியாகம் என சுதந்திர போராட்ட வரலாற்றுச் சுவடுகளின் எல்லா பக்கங்களிலும் நீங்கா இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு, இன்று பெற்ற சுதந்திரத்தை கொண்டாடுவதற்க்கும், சுதந்திர போராளிகளின் தியாகங்களை நினைவு கூறுவதற்கும் அனுமதி கிடையாது என்பது நமது காவல்துறை மற்றும் தமிழக அரசின் முஸ்லிம் விரோத போக்கை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.
நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மாநிலத்துணை தலைவி A. பாத்திமா ஆலிமா |
மாவட்ட தலைவர் எம்.அன்வர் முஹைதீன் |
தமிழக மற்றும் காவல்துறையின் சிறுபான்மையினருக்கு எதிரான இத்தகைய போக்கினை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா 17 ஆகஸ்ட் 2011 அன்று தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த முடிவு செய்தது. அதன் ஒரு பகுதியாக 17-08-2011 நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையம் சந்தைமுக்கில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சுமார் 2000 திற்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த ஆர்பாட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் எம்.அன்வர் முஹைதீன் தலைமை ஏற்று வழிநடத்தினார்.
மேலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் A.S.இஸ்மாயில், தேசிய அரசியல் கட்சி SDPI ன் மாநிலத்தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாக்கவி, நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மாநிலத்துணை தலைவி A. பாத்திமா ஆலிமா, விடுதலை சிறுத்தை கட்சியின் நெல்லை மாவட்ட செயாலாளர் M.C.கார்த்திக் ஆகிய அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு சிறுபான்மையினருக்கு எதிராக செயல்பட்ட தமிழக அரசு மற்றும் காவல்துறையினருக்கு எதிராக தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.
ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்கள் மட்டுமின்றி ஆங்காங்கே அன்றாட வேலைகளில் ஈடுபட்டிருந்த பொதுமக்களும் சிறுபான்மை உரிமைகளை மீட்டும் நோக்கோடு சுய ஆர்வத்துடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் தங்களை இணைத்து கொண்டனர். ஏன் இந்த ஆர்ப்பாட்டம்? என்று விசாரித்த வழிப்போக்கர்களும், கண்டன உரையை செவிமெடுத்த மேலப்பாளைய வாழ் மக்களும் தமிழக அரசு மற்றும் காவல்துறையின் முஸ்லிம்களுக்கு எதிரான இந்த போக்கினை வன்மையாக கண்டித்தனர்.
Thanks
Melapalayam voice
No comments:
Post a Comment