அண்ணா ஹசாரே குழுவினர் தயாரித்துள்ள ஜன் லோக்பாலை முழுவதுமாக ஏற்க முடியாது என்றும் அதிலும் குறைபாடுகள் உள்ளதாகவும் பாஜகவின் மாநிலங்களைவை துணைத் தலைவர் எஸ்.எஸ்.அலுவாலியா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மாநிலங்களைவை துணைத் தலைவர் எஸ்.எஸ்.அலுவாலியா மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள லோக்பால் மசோதா பலவீனமானது என்றும் அதே நேரத்தில் அன்னா ஹசாரேவின் ஜன் லோக்பாலையும் முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 30 க்குள் ஜன் லோக்பால் மசோதா நிறைவேற்றப் பட வேண்டும் என்ற அன்னா ஹசாரேவின் கோரிக்கையும் ஏற்கப் படக் கூடியது அல்ல என்றும் இந்த விவகாரத்தில் பாஜக அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு அளிக்காது என்றும் எஸ்.எஸ்.அலுவாலியா மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment