சென்னை: பெரியமேட்டில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் சுமார் ரூ.5.30 லட்சம் கள்ளநோட்டை புழக்கத்தில் விட முயற்சி செய்ததாக சென்னை காவல்துறையினர் 5 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
பெரியமேட்டில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் கள்ளநோட்டு மாற்றுப்படுவதாக ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இத் தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் துணை கண்காணிப்பாளர் முகம்மது அஸ்லம், ஆய்வாளர் ஹரிதாஸ் மற்றும் காவலர்கள் அந்த ஹோட்டலின் குறிப்பிட்ட அறையை செவ்வாய்க்கிழமை மாலை திடீர் சோதனை செய்தனர்.
இந்தச் சோதனையில் அங்கு இருந்த ரூ.5.30 லட்சம் கள்ளநோட்டு, ரூ.90 ஆயிரம் ஓரிஜினல் நோட்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அங்கிருந்த தஞ்சாவூரைச் சேர்ந்த சரவணன் (25), ஷாஜஹான் (42), சென்னை மண்ணடியைச் சேர்ந்த முகம்மது பரூக் (26), காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரமணன் (33), மேற்கு வங்களாத்தைச் சேர்ந்த மசூத்சேக் (20) ஆகிய 5 பேரை கையும் களவுமாக பிடித்து பிறகு அவர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மேற்கு வங்காளத்தில் இருந்து கள்ளநோட்டு கடத்தி இங்கு கொண்டு வரப்பட்டு மாற்றப்படுவது தெரியவந்தது.இந்த வழக்குத் தொடர்பாக மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
No comments:
Post a Comment