இந்தியாவில் படித்து முடித்தவுடன் மிக அதிக சம்பளம் தரும் படிப்பு IIM-ல் உள்ளMBA படிப்பு தான், அதிக பட்சமாக ஒரு வருடத்திற்க்கு ஒரு கோடி (மாதம் 8லட்சம்) வரை சம்பளம் IIM-ல் MBA படித்தவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இப்படி அதிக சம்பளம் தரும் இந்த படிப்புகளில் சேர CAT என்ற நுழைவு தேர்வை எழுதி தேர்சி பெற வேண்டும். இதில் முஸ்லீம்களையும் சேர்த்து பிற்படுத்தபட்டவகுப்பினருக்காக 27% இட ஒதுக்கீடு உள்ளது.
மேலாண்மை படிப்புகள் படிக்க (MBA) மத்திய அரசால் உறுவாக்கப்பட கல்விநிறுவனம்தான் IIM (Indian Institute of Management ). தமிழகத்தின் திருச்சி உட்பட இந்தியாவில் 13 இடங்களில் IIM-கள் உள்ளன. உலக அளவில் பொருளாதாரம்மற்றும் மேலாண்மை துறையில் மிக பெரிய பொருப்புகள் வகிப்பவர்கள் இந்த IIM-ல் படித்தவர்கள். மிக பெரிய நிறுவங்களை நிர்வகிக்ககூடிய அளவிற்க்கு உலகதரத்தில் இங்கு பயிற்சி அளிக்கப்படுகின்றது. இதுவே உலகின் முன்னனிநிறுவங்களை இங்கு ஈர்க்க காரணமாகின்றது. CAT நுழைவு தேர்வில் எடுக்கும்மதிப்பெண் IIM மட்டுமல்லாமல் பிற அரசு மறும் தனியார் மேலாண்மை கல்விநிறுவனங்களிலும் MBA சேர்வதற்க்கு பயன்படுகின்றது.
CAT-2011 நுழைவு தேர்வை பற்றிய விபரம்
விண்ணப்பிகும் முறை : குறிபிட்ட Axis வங்கி கிளைகளில் CAT-2011 வவுச்சரை வாங்கி, இந்த www.catiim.in இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். வவுச்சர் கிடைக்கும் Axis வங்கி கிளைகளின் முகவரி இந்த இணையதளத்தில்www.catiim.in/axisbank_branch.html உள்ளது.
விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி தேதி : செப்டம்பர் 28
விண்ணப்பத்தின் விலை : ரூ.1,600
தேர்வு நடைபெறும் தேதி : இந்த தேர்வு அக்டோபர் 22 முதல் நவம்பர் 18 வரை தொடர்ந்து நடைபெறும், விண்ணப்பிக்கும் நபர்கள் இதில் ஏதாவது ஒரு நாளில் தேர்வு எழுதுவார்கள்.
தேர்வு எழுத தகுதியான மாணவர்கள் :
1. ஏதாவது ஒரு பட்ட படிப்பு படித்தவர்கள் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்கள்.
2. குறைந்தது 50% மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும்.
இட ஒதுக்கீடு : முஸ்லீம்களையும் சேர்த்து பிற்படுத்தபட்ட வகுப்பினருக்காக 27%இட ஒதுக்கீடு உள்ளது.
தேர்வு நடைபெறும் இடங்கள் : சென்னை மற்றும் கோவை உட்பட இந்தியாவில் 36 நகரங்களில் தேர்வு நடைபெறும்
இந்த தேர்வை பற்றி : இது கணினியில் எழுதும் தேர்வாகும். CAT தேர்வு இரண்டு பகுதிகளை கொண்டது. முதல் பகுதி Quantitative Ability & Data Interpretation. இரண்டாம் பகுதி Verbal Ability & Logical Reasoning. ஓவ்வொரு தேர்வு எழுத 70நிமிடங்கள் ஒதுக்கப்படும், மொத்தம் 140 நிமிடங்கள். தேர்வு எழுதும் முன் 15நிமிடம் தேர்வை பற்றி விளக்கப்படும்.
இந்த தேர்வுக்கு தயாராவது எப்படி?
இது வருடா வருடம் நடக்கும் தேர்வாகும். எனவே கடந்த 5 ஆண்டு கேள்விதாள்களை பார்த்தால் பொதுவாக எப்படி பட்ட கேள்விகள் கேட்கப்படுகின்றது என அறிந்து கொள்ளலாம். அந்த பகுதிகளை நன்றாக ஆராய்ந்து படித்தாலே போதும். இந்த கேள்விதாள்கள், புத்தகங்கள் முக்கிய புத்தக கடைகளில் கிடைக்கும். இதற்க்காக பல்வேறு பயிற்சி மைய்யங்கள் தமிழகத்தில் உள்ளது,அங்கு சேர்ந்தும் பயிற்சி பெறலாம்.
இந்த தேர்வை எழுதும் முஸ்லீம் மாணவரகளின் எண்ணிக்கை மிக மிக குறைவு,காரணம், இந்த நுழைவு தேர்வுகளை பற்றி முஸ்லீம் சமுதாயம் அறியாமல் இருப்பதும், அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுக்கி விடுவதாலும் தான், உண்மையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்குஇத்த தேர்வுகள் கடினமில்லை. மாணவர்களே! தேர்வுகள் கடினம் என்ற தவறானசிந்தனையை குப்பையில் போடுங்கள், எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்கநம்மோடு அல்லாஹ் இருகின்றான், அல்லாஹ்விம் மீது நம்பிக்கைவையுங்கள் அவனிடம் வலியுத்தி கேளுங்கள், கடினமாக உழைத்து படியுங்கள் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ்.
No comments:
Post a Comment