ஸ்ரீநகர்:ஜம்மு கஷ்மீர் மாநிலத்தில் மூன்று வடக்கு மாவட்டங்களில் அடையாளப்படுத்தப்படாத 38 கல்லறைகளிலிருந்து 2156 அடையாளம் காணமுடியாத இறந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக மனித உரிமை கமிஷனின் புலனாய்வு குழுவினரின் அறிக்கை தொடர்பாக பதிலளிக்க மாநில அரசு தயாராக இல்லை.
அறிக்கையை பார்க்கவில்லை எனவும், கிடைத்தவுடன் ஆராய்ந்த பிறகு மட்டுமே பதில் அளிப்போம் என கஷ்மீர் மாநில உள்துறை அமைச்சர் நாஸில் அஸ்லம் வாணி தெரிவித்துள்ளார்.
பாரமுல்லா, பந்திபூர், குப்வாரா ஆகிய மாவட்டங்களில் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இறந்த உடல்களில் பெரும்பாலானவை துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டவர்களுடையாதாகும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கஷ்மீரிலிருந்து காணாமல் போனவர்களின் உடல்கள் இதில் உட்படும் என கமிஷன் அறிக்கை கூறுகிறது. மனித உரிமை கமிஷனனின் புலனாய்வு அதிகாரிகளின் அறிக்கை தங்களது விசாரணை அறிக்கைகளை உறுதிச்செய்கிறது என கஷ்மீரில் மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பான ஜெ.கெ.சி.சி.எஸ் ஒருங்கிணைப்பாளர் குர்ரம் பர்வேஸ் தெரிவித்துள்ளார்.
அடையாளப்படுத்தப்படாத கல்லறைகள் குறித்து தாங்கள் அறிக்கைகளை வெளியிட்டபொழுது ராணுவத்தை அவமதிப்பதாக எங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது என பர்வேஸ் கூறினார்.
No comments:
Post a Comment