அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, August 24, 2011

லிபியாவின் தலைநகர் திரிபோலியில் கர்ணல் கடாஃபியின் வளாகத்துக்குள் கிளர்ச்சிக்காரர்கள் நூற்றுக்கணக்கானோர் நுழைந்துள்ளனர்..

.
திரிபோலி வீதியில் கிளர்ச்சிக்காரர் வாகனம்
அந்த வளாகத்தில் இருந்தபடி கிளர்ச்சிக்காரர்கள் வெற்றி ஆரவாரம் செய்ததோடு வானை நோக்கி சுட்டனர் என்றும் அங்குள்ள செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

அந்த வளாகத்தில் இருந்து பெருமளவில் கரும்புகை கிளம்புவதை தொலைக்காட்சிப் படங்கள் காட்டுகின்றன.
நெடுநேர கடும் சண்டைக்குப் பிறகு கிளர்ச்சிக்காரர்களால் கடாஃபியின் வளாகத்துக்குள் நுழைய முடிந்திருந்தது.
கர்ணல் கடாஃபியோ அவர் குடும்ப உறுப்பினர்களோ அந்த வளாகத்தில்தான் இருக்கிறார்களா என்பது இன்னும் தெரியவரவில்லை.
நேட்டோ விமானங்கள் திரிபோலிக்கு மேலே பறந்தன என்று நேட்டோ ஒப்புக்கொண்டுள்ளது என்றாலும், கடாஃபியின் தலைமையகம் மீது இவ்விமானங்கள் தாக்குதல் நடத்தின என்று கூறப்படும் தகவலை நேட்டோ உறுதிசெய்யவில்லை.
இதற்கிடையே, லிபியாவில் சண்டை அதிகரித்துள்ளதால், அங்கு அவசரமாக மருந்துகளும், பணியாளர்களும் தேவைப்படுவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

No comments: