அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, August 23, 2011

"கிராமங்களுக்கு ஒளி கொடுக்க ஆசைப்பட்டேன்!'



சூரிய ஒளி மூலம் கிராமங்களில் மின்சார புரட்சி ஏற்படுத்திய ஹரிஷ் ஹண்டே: என் தந்தை பொறியாளர். நானும் ஐ.ஐ.டி.,யில் இன்ஜினியரிங் படித்து, அமெரிக்காவில், பி.எச்டி., முடித்தேன். ஆராய்ச்சி படிப்பின்போது, உலகின் பல பகுதிகளில் இன்னும் மின்சார வசதியில்லை என்ற விஷயம் மனதை மிகவும் பாதித்தது. மாற்று சக்தியான சூரிய ஒளி மின்சாரம் பரவலாக மக்களை அடையவில்லை. அப்போது எழுந்த எண்ணம், சூரிய ஒளி மின்சாரத் தயாரிப்பை ஏன் தொழிலாக செய்ய கூடாது என்பது தான். இந்தியா திரும்பியதும் தொழில் துவங்கும் யோசனையை கேட்டு, அமெரிக்காவில் படித்து பெரிய வேலைக்கு போவேன் என நினைத்த குடும்பத்தினர் அதிர்ந்தனர். பின், 1995ல், மின்சாரமே இல்லாத கிராமங்களுக்கு சூரிய ஒளியில் மின் சாதனங்கள் இயங்க பயன்படும், "சோலார் பேனல்'கள் தயாரிக்கும் நிறுவனத்தை துவங்கினேன். இன்று எங்கள் நிறுவனம், ஒரு லட்சத்து 20 ஆயிரம் இல்லங்களில் விளக்கு ஏற்றியிருக்கிறது. கர்நாடகத்திலும், குஜராத்திலும், 170 பேர் வேலை செய்கின்றனர். இதுவரை விற்பனை செய்திருக்கும், "சோலார் பேனல்'களின் எண்ணிக்கை ஒரு லட்சம். இந்த வெற்றியை அடைய நான் கடந்து வந்த பாதை மிக கடினமானது. இன்று, அரிக்கேன் விளக்கில் படித்த கிராமப்புற மாணவர்கள், "ட்யூப் லைட்'டில் படிக்கின்றனர். பீடி சுற்றுதல், தையல் போன்ற தொழில்களை பெண்கள் இரவில் செய்கின்றனர். என் வெற்றியை பாராட்டி, 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் விருதுகள் வழங்கி கவுரவித்திருக்கின்றன. அமெரிக்க அதிபர் ஒபாமா தேர்ந்தெடுத்து சந்தித்த, 20 பேரில் நானும் ஒருவன். சென்ற மாதம் எனக்கு, ஆசிய நோபல் பரிசாக கருதப்படும், "மகசேசே விருது' அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: