காஞ்சி சங்கர மட மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு சம்மந்தமாக குற்றம் சாட்டப்பட்டுள்ள காஞ்சி பீடாதிபதி சங்கராச்சார்யா மீதான விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை நீதிபதி ராமசாமி விசாரித்து வருகிறார்.
இந்த விசாரணைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுந்தர்ராஜ் மனு தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில், ஜெயேந்திரர், அவரது பெண் உதவியாளர் 2 இடைத்தரகர்கள் மற்றும் நீதிபதி ஆகியோர் பேசிக்கொள்ளும் உரையாடல் குறித்து சி.டி. வெளியாகி உள்ளது. அந்த சி.டி.யில் சங்கரராமன் கொலை குறித்தும், பணம் பட்டு வாடா குறித்தும் பேசுவது போன்று அந்த உரையாடல் உள்ளது.
இது குறித்து பேசிய வழக்கறிஞர் சுந்தர்ராஜ் இந்த உரையாடல் சி.டி. உண்மைதானா? அவ்வாறு உண்மை என்றால் பேசியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று கோரி சென்னை உயர் நீதிமன்ற விஜிலென்ஸ் பதிவாளரிடம் புகார் மனு கொடுத்தேன்.
அந்த மனு மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். அதுவரை புதுச்சேரியில் நடைபெறும் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை தடைவிதிக்க வேண்டும்’’என்றும் அதில் கேட்டுக்கொள்ளபட்டுள்ளது.
No comments:
Post a Comment