மத்தியப் பிரதேசம் போபாலைச் சேர்ந்த ஷீலா மசூத் என்னும் சமூக ஆர்வலர் நேற்று தன் கார் இருக்கையில் அமர்ந்து இருந்த நிலையில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப் பட்டார்.
ஷீலா மசூத் இதுவரை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் 40 மனுக்கள் விண்ணப்பித்து வனத் துறை மற்றும் காவல் துறை சம்பந்தமான தகவல்களைப் பெற்று இருப்பதாக தெரிகிறது.
மேலும் ஷீலா மசூத் கடந்த 2010 ஜனவரி மாதம் மத்தியப் பிரதேச மாநில டி ஜி பி க்கு எழுதிய கடிதத்தில் இரண்டு வருடமாக பவான் ஸ்ரீவத்சவா என்னும் காவல் துறை உயர் அதிகாரி தமக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்து வருவதாகவும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாகவும் புகார் அளித்துள்ளார்.
தமது உயிருக்கு ஸ்ரீ வத்சவா என்பவரால் அச்சுறுத்தல் உள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார் ஷீலா மசூத்.
No comments:
Post a Comment