தியாகராய நகர் மற்றும் புரசை வாக்கத்தில் அமைந்துள்ள சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களில் வியாழக் கிழமைக் காலை முதல் 500 க்கும் மேற்பட்ட வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையில் கோடிக் கணக்கிலான மதிப்புடைய கணக்கில் வராத தங்கக் கட்டிகள், பணம் மற்றும் ஆவணங்கள் வருமானவரித் துறையினர் கைப் பற்றியுள்ளனர். இருப்பினும் கைப் பற்றப் பட்ட ஆவணங்கள், பணம் மற்றும் தங்கக் கட்டிகளின் மதிப்பை தெரிவிக்க வருமானவரித் துறையினர் மறுத்து விட்டனர்.
சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்கள் தாக்கல் செய்த கடந்த 6 வருட வருமானவரி கணக்கை வருமானவரி துறையினர் மீண்டும் ஆய்வுக்கு எடுத்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. சரவணா ஸ்டோர்ஸில் நடைபெற்ற சோதனை காரணமாக இரு நாட்கள் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் மூடப் பட்டு வாடிக்கையாளர்கள் யாரும் அனுமதிக்கப் பட வில்லை.
சில வருடங்களுக்கு முன்னர் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸின் மேல் தளத்தில் இருந்து ஒருவர் கீழே விழுந்து மரணமடைந்ததும் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத் தக்கது.
No comments:
Post a Comment