அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, May 5, 2011

அமலாக்கப்பிரிவு சம்மன்:கனிமொழியுடன் கருணாநிதியும் உடன் செல்வார்...


2G அலைக்கற்றை ஒதுக்கீடு முறைக்கேடு குறித்த வழக்கில் தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பியை நீதிம்னறத்தில் ஆஜராகும்படி அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பியுள்ளதைத் தொடர்ந்து, அவருக்குத் துணையாக கருணாநிதியும் டெல்லிக்குச் செல்வார் என்று தெரிகிறது.



கலைஞர் தொலைக்காட்சியில் 20% பங்குதாரரான கனிமொழி எம்.பி. 2G ஊழலில் கூட்டுச்சதியில் ஈடுபட்டுள்ளார் என்று CBI தாக்கல்செய்த துணைக் குற்றப்பத்திரிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மே-1 அன்று நீதிமன்றத்தில் ஆஜராகும் கனிமொழி கைது செய்யப்படக்கூடும் என்ற தகவல்கள் பரவியுள்ள நிலையில் மத்திய அமைச்சரும் சகோதரருமான மு.க.அழகிரி நேற்று ஏற்கனவே டெல்லிக்கு விரைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் அறிவாலயத்தில் நடந்த செயற்குழு கூட்டத்தில் கனிமொழியை தனது மகள் என்று பார்க்காமல் கட்சி விசுவாசி என்று கருதவேண்டும் என்று கருணாநிதி பேசியிருந்தார். கனிமொழி எம்.பி.டெல்லி நீதிமன்றத்தில் ஆஜராகும்போது உடனிருப்பதன்மூலம், உடனடியாகக் கைது செய்யப்படுவதை தடுக்க முடியும் என்பதற்காகவே முதல்வர் கருணாநிதியும் உடன் செல்ல வேண்டியுள்ளது என்பதாகச் சொல்லப்பட்டாலும், ஏற்கனவே அமலாக்கப் பிரிவு குற்றப்பத்திரிக்கையில் இடம்பெற்று விட்டதால், தனியாகக் கைது செய்யப்படவேண்டிய அவசியமில்லை என்றும் சொல்லப்படுகிறது.

கனிமொழிக்கு ஆதரவாக பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி ஆஜராவார் என்று அறிவாலய வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. ராசாவுக்கு ஆதரவாக ஆஜராக ஜெத்மலானி மறுத்து விட்டதைத் தொடர்ந்து பிரபல திமுக வழக்கறிஞர் ஷன்முக சுந்தரம் ஆஜராவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2G வழக்கை சட்டப்படி சந்திப்பதற்காக திமுஅ தரப்பிலிருந்து அமைச்சர் துரைமுருகன் மற்றும் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் ஏற்கனவே முகாமிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது

No comments: