மராட்டிய மாநிலம் கொல்காபூரில் உள்ள காவல்துறை பயிற்சி பள்ளியில் புதிதாக தேர்வு பெற்ற 70 பெண் காவலர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அனைவருமே திருமணமாகாத இளம்பெண்கள் ஆவர். பயிற்சி நிறைவு பெறும் நிலையில் உள்ள அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
அதில் 11 பெண் காவலர்கள் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. அவர்களிடம் விசாரித்தபோது அவர்களுக்குப் பயிற்சி அளித்த காவல்துறை ஆய்வாளர் யுவராஜ் காம்ளி வலுக்கட்டாயமாக அவர்களை உறவு கொண்டதாக கூறினார்கள். யுவராஜ் காம்ளியின் வீடு காவலர் பயிற்சி பள்ளியருகே உள்ளது. தினம் ஒரு பெண் காவலரை வரவழைத்து வல்லுறவு வைத்ததாகவும் ஆசைக்கு இணங்குபவர்களை மட்டுமே பயிற்சியில் வெற்றி பெற்றதாக அறிவிப்பேன் என மிரட்டி அனைவரையும் வல்லுறவு செய்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்களோடு உல்லாசமாக இருந்ததை வீடியோ படமும் எடுத்து, இங்கு நடந்ததை வெளியே சொன்னால் வீடியோ படத்தை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியதால் இதனை வெளியே சொல்லவில்லை என பெண் காவலர்கள் தெரிவித்தனர். கர்ப்பமான பெண் காவலர்கள் மட்டுமல்லாது மேலும் ஏராளமான பெண் காவலர்களையும் காம்ப்ளி பாலியல் வல்லுறவு செய்துள்ளதாகவும் அவர்கள் அதிர்ச்சி தரும் தகவலைக் கூறியுள்ளனர்.
இதையடுத்து காவல்துறை ஆய்வாளர் யுவராஜ் காம்ளி கைது செய்யப்பட்டான். இதற்கிடையில், "நான் பெண் போலீஸ் யாரையும் மானபங்கபடுத்தவில்லை. எனது உயர் அதிகாரிகளே மானபங்கப்படுத்திவிட்டு என் மீது பழி போட்டு விட்டனர்" என்று கூறியுள்ளான்.
இந்தச் சம்பவம் மராட்டிய மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி விசாரிக்க உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பட்டீல் உத்தரவிட்டுள்ளார். எதிர்கட்சியினர் இச்சம்பவத்தைக் கண்டித்து முழு போராட்டத்தில் குதித்துள்ளனர்.
No comments:
Post a Comment