by ஹாபிழ். எம்.ஏ. அஹமது ஹசன்
(முன்னால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தாயீ)
அல்குர்ஆன் மொழியாக்கம் மற்றும் விரிவுரை என்ற பெயரில் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளை தகர்க்கும் விஷக்கருத்துக்களை பீ.ஜை திணித்துள்ளார். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் அவருடைய தர்ஜமாவில் ஊடுறுவிக் கிடக்கும் ஏராளமான கொடிய தவறுகளை மார்க்க அறிஞர்கள் அடையாளம் காண்பித்து ஆங்காங்கே எச்சரித்து வருகின்றனர்.
இந்த எச்சரிக்கை பொதுமக்களை சென்றடையும் சூழல் உருவாகும் போதெல்லாம் தன் அந்தஸ்துக்கு பங்கம் வந்துவிடக் கூடாது? என்பதற்காக ‘என் தர்ஜமா பற்றி விவாதிக்கத் தயார்’ என்று சவ(ட)ால் விடுவதை தன் வழமையாக்கிக் கொண்டுள்ளார்.
தொண்டியில் நடந்ததென்ன?
தொண்டியில் நிகழ்ந்ததும் இதுபோன்றதே! 11-12-2008 அன்று தொண்டியைச் சார்ந்த முஜீபுர்ரஹ்மான் உமரீ (கேம்ப் விருதுநகர்) பீ.ஜையின் தர்ஜமா தவறுகள் பற்றி தொண்டியில் உரையாற்றினார்.
அடுத்த இரு நாட்களில் ‘தர்ஜமா பற்றி விவாதிக்க பீ.ஜை தயார்’ என்று தொண்டி முழுக்க வால்போஸ்டர் ஒட்டிய பீ.ஜை, அதனைத் தொடர்ந்து வினியோகித்த நோட்டீஸில் முறையே 1) சஹாபாக்களை பின்பற்றுதல் 2) பீ.ஜை தர்ஜமாவில் தவறுகள் 3) ஹிஜ்ரா காலண்டர் 4) முஜீப் ஏன் தடம் புரண்டார் ஆகிய நான்கு தலைப்புகளை விவாதப் பொருளாக்கினார்.
விவாத ஒப்பந்தத்திற்கு ததஜ பிரமுகர்களைத்தான் அனுப்புவேன்! நான் நேரடியாக வரவே முடியாது! என்று தொண்டியைச் சார்ந்த திரிஸ்டார் அப்துல் அஜீஸ் மற்றும் நைனார் காஜா ஆகிய இரு தூதுவர்களின் மூலம் இறுதி அறிவிப்பு செய்து விட்டார்.
ஆனால் 18-12-2008 அன்று பீ. ஜைனுல் ஆபிதீனின் வண்டவாளங்களை தோலுரித்துக் காட்டும் ‘அன்பான வேண்டுகோள்’ என்ற தலைப்பில் முஜீபுர்ரஹ்மான் வெளியிட்ட நோட்டீஸ் பொதுமக்களை சென்றடைந்தது. இதை அறிந்தவுடன் விவாதத்திலிருந்து பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடிக் கொண்டிருந்த பீ. ஜை தன் சொந்த ஊரில் தன் இமேஜ்(?) மேலும் பாழாகி விடக்கூடாது என்ற நிர்பந்தத்தால் இவ்வொப்பந்தத்திற்கு தானே வருவதாக சம்மதித்து(?) நோட்டீஸ் வெளியிட்டார்.
அதில் தான் தர்ஜமாவில் செய்துள்ள தவறுகளை இருட்டடிப்பு செய்வதற்காக முந்தைய நோட்டீஸில் கூறப்பட்ட தலைப்புகளில் சிலதை நீக்கியும் சிலதைப் புதிதாதச் சேர்த்தும் குழப்பியிருந்தார்.
பின்வாங்கும் தந்திரங்கள்!
மேலும் விவாத ஒப்பந்தத்திற்காக இருதரப்பும் இணைந்து முடிவெடுக்க வேண்டிய இடம், காலம் ஆகியவற்றை நியாயமின்றி தானே முடிவு செய்தார். 20-01-2009 செவ்வாய் கிழமை காலை 10 மணிக்கு தனது தொண்டி கட்சி அலுவலகத்தில் (சுலைா மகாலில்) காத்துக் கொண்டிருப்பதாகவும் இதனைத் தவிர வேறு எதனையும் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்றும் வீர(?) பிரகடனம் செய்திருந்தார். இதன் மூலமாவது நின்று விடாதா? என்று மனப்பால் குடித்தார்.
இவ்வாறு ஒரு தரப்பாக முடிவெடுப்பது அயோக்கியத்தனம்! என்றும் அதனை அறிவுள்ள எவனும் ஏற்றுக் கொள்ள முடியாது! என்றும் பிறர் விஷயத்தில் இவரே கூறியிருப்பது இங்கு நினைவு கூறத்தக்கது.
பீ.ஜையின் ஈனச் செயல்!
இவ்விவாதத்திலிருந்து எப்படியேனும் தப்பிக்கத் திட்டமிட்ட இவர் சுய வாழ்வில் ஒழுக்கக்கேட்டின் உச்சக் கட்டத்தில் இருக்கும் சாதாரண முஸ்லிமுக்குக் கூட மனம் வராத ஈனச் செயலில் ஈடுபட்டார். 21-12-2008 அன்று தொண்டியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முஜீபுர்ர்மானை தீவிரவாத இயக்கத்தோடு தொடர்பு படுத்தும் விதமாக அவதூறு கூறி அவரை பிரச்சனையில் சிக்க வைக்க முயற்சித்தார்.
அந்த அவதூறை நீக்கி எடிட்டிங் செய்யப்பட்டு ‘ததஜ சந்தித்த விவாதங்கள்’ என்ற தலைப்பில் இந்நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு, சீடியாகவும் வெளியிடப்பட்டது. முஜீபுர்ரஹ்மான் தொடர்பாக நீர் கூறியது உண்மையாக இருந்தால், உமக்கு திராணி இருந்தால் எடிட்டிங் செய்யாமல் அந்த சீடியை அப்படியே தாருங்கள்! என்று தொண்டியில் 07-03-2009 அன்று ஊரறிய அறைகூவல் விடுக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை அதனைக் கொடுக்காமல் அவர் பொய்யன்! அவதூறு ஆசாமி! என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
அவரின் அவதூறுக்கு அஞ்சாமல், ஒருதலைப்பட்சமான அவரின் காலம், இடம் பற்றிய முடிவை முஜீபுர்ரஹ்மான் துணிவுடன் ஏற்றுக் கொண்டார்.
ஒப்புதல் கடிதம் தராது ஓட்டம்!
விவாதத்திலிருந்து பின்வாங்கும் பீ.ஜையின் சூழ்ச்சியை முஜீபுர்ர்மான் நன்கறிந்திருந்ததால் அவருடன் நடைபெறும் அவரது தர்ஜமா மற்றும் விளக்கவுரை பற்றி மட்டும்தான் இருக்க வேண்டும் என்று எழுத்துப் பூர்வமாக பீ.ஜையின் ஒப்புதல் கடிதத்ததை 11-01-2009 மாலை 5 மணிக்குத் தரவேண்டும் என்று ஊரறிய தொண்டியில் நோட்டீஸ் வெளியிட்டிருந்தார்.
குறிப்பிட்ட தேதியில் பீ.ஜையின் தொண்டி கட்சி அலுவலகத்திற்கு முஜீபுர்ரஹ்மானே நேரடியாக சென்றபோது பீ.ஜை ஒப்புதல் கடிதத்தை தர மறுத்தது தெரிய வந்தது. வெற்றிடமாகக் கிடந்த அவரது தொண்டி கட்சி அலுவலகத்தின் முன் நின்று ‘பீ.ஜையின் விவாத பித்தலாட்டங்களைப் பற்றி தெளிவு படுத்தி வீடியோ பதிவு செய்தார். இதை கேள்விப்பட்ட அவரது கட்சித் தொண்டர்கள் தங்கள் தலைவனின் வேஷம் கலைந்து விட்டதே! என்ற பயத்தில் வீடியோ கேமராவை தூக்கிக் கொண்டு இரவு 7 மணிக்கு தொண்டி மேலப்பள்ளிவாசலுக்கு ஓடோடி வந்தனர்.
பீ.ஜை விவாதத்திலிருந்து பின்வாங்கியது முடிவானதற்கு பிறகும் கூட அல்குர்ஆனின் முக்கியத்துவம் கருதி பீ.ஜையின் தர்ஜமா தவறுகள் பற்றி மட்டும் விவாதிக்க ஏற்பாடு செய்ய இரு தரப்பு ஆதரவாளர்களில் சிலர் தங்களிடையே ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
விவாத ஒப்பந்தம்?
அதன் அடிப்படையில் 20-01-2009 அன்று பீ.ஜைக்கும் முஜீபுர்ரஹ்மானுக்கும் இடையே விவாத ஒப்பந்தம் நடைபெற்றது. சில நிமிடங்களில் நடந்து முடிய வேண்டிய ஒப்பந்தம் பீ.ஜையின் பிடிவாதத்தால் காலை 10:15 மணி முதல் துவங்கி மாலை சுமார் 6 மணி வரை நீடித்தது.
இவ்விவாதத்தில் தர்ஜமா மற்றும் விரிவுரை பற்றி மட்டும் விவாதிக்க பீ.ஜை இறுதிவரை ஏற்க மறுத்துவிட்டார். ஒரே விவாதத்தில் பல தலைப்புகளுடன், பல நாட்கள்தான் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து பல மணி நேரங்களைக் கடத்தினார்.
அல்குர்ஆனின் மகத்துவத்தையும் தனித்துவத்தையும் கருத்தில் கொண்டு தர்ஜமா தவறுகளைப் பற்றி தனித் தலைப்பாக முதலில் விவாதிப்போம். பிற தலைப்புகளை தர்ஜமா பற்றிய விவாதத்திற்குப் பிறகு தனியாக விவாதித்துக் கொள்வோம்! என்று முஜீபுர்ரஹ்மான் தரப்பு கூறியதை பீ.ஜை தொடர்ந்து மறுத்து வந்தார்.
ரோஷத்தை கிளப்பிய திராணி!
நீங்கள் எழுதிய தர்ஜமா பற்றி தனித் தலைப்பாக விவாதிக்க உங்களுக்கு திராணி இல்லையா? ஏன் பயப்படுகிறீர்? என்று முஜீபுர்ர்மான் கேட்டது வீடியோவில் பதிவாகிக் கொண்டிருப்பதை உணர்ந்த பீ.ஜை தன் தர்ஜமா தொடர்பான தனி விவாதத்தை நிர்பந்தமாக ஏற்றுக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
எனவே அவரது தர்ஜமா தொடர்பான தனி 29-03-2009 அன்றும் பிற தலைப்புகள் மற்றொரு நாளில் தனி விவாதமாக நடைபெறும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
பீ. ஜை கேட்ட வினாத்தாள்!
தர்ஜமா தொடர்பான பீ.ஜையின் சம்மதத்தை பொதுவானவதாகக் கருதி விடாதீர்கள்! அவரது தர்ஜமாக பற்றி முஜீபுர்ர்மான் இதுவரை விமர்சித்தவைகளைப் பற்றி மட்டுமே விவாதப் பொருளாக பீ.ஜை ஏற்றுக் கொண்டார். விரல் விட்டு எண்ணும் சில தவறுகளைப் பற்றி செய்ய ஒப்புக் கொள்ளத்தானா இந்த இரண்டு(?) மாதப் போராட்டம்???!
தான் பல ஆண்டுகளாக எழுதி, 2002ம் வருடம் முதல் 2008 வரை ஏழு பதிப்புகளை பல முறை சரிபார்த்து வெளியிட்டதாகக் கூறும் இவர், இது போன்ற சிறு பிள்ளைத் தனமான நிபந்தனைகளை முன் வைக்க வெட்கப்பட வேண்டாமா?
பேசப்படாத இன்னும் ஏராளமான தவறுகள் உள்ளனவே என்று முஜீபுர்ரஹ்மான் கேட்டதற்கு இப்போதே அந்தப் பட்டியலைத் தந்து விடுங்கள்! அப்போதுதான் நான் பி(?)ரிப்பேர் செய்து கொண்டு வரமுடியும் என்று பீ.ஜை கூறினார்.
தர்ஜமா பற்றி விவாதிக்கத் தயார் என்று ஊரறிய வால்போஸ்டர் ஒட்டிய பீ.ஜையின் பரிதாப நிலை பாரீர்!
முஜீபுர்ர்மானை விவாத்திற்கு அழைத்;து வந்தால் ரூபாய் 5000 பரிசு என்று பொதுமக்களிடம் ஃபிலிம் காட்டிய பீ.ஜையின் இழிநிலை பாரீர்!
இது, மக்கு மாணவன் பரீட்சையில் பாஸாக ஆசிரியரிடம் பரீட்சைக்கு முன்பே வினாத்தாள் கேட்பது போன்றதல்லவா? என்று கூறி பொதுமக்கள் சிரிக்கின்றனர்.
இப்படி இவர் வினாத்தாள் கேட்பது நியாயம் என்றால் 21-12-2008 தொண்டி பொதுக் கூட்டத்தில் முஜீபுர்ரஹ்மானின் முகத்திரையை கிழிக்கப்போவதாக ஆணவத்தோடு எதற்காக கொக்கரித்தார்? தவறுகளின் பட்டியலைத் தாருங்கள்! பரிசீலிக்கிறேன் என்று பணிவுடன் கூறி தனக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச மதிப்பை(?) தக்க வைத்திருக்கலாமே! அந்தோ பரிதாபம்!
அந்த வினாத்தாள் பட்டியலை கொடுக்காவிட்டால் அதையே காரணம் காட்டி பீ.ஜை தப்பிவிடுவார் என்பதை உணர்ந்த முஜீபுர்ர்மான் பீ.ஜை கேட்ட பட்டியலை தரவும் சம்மதித்தார்.
பீ.ஜை தர்ஜமாவின் 399 விளக்கக் குறிப்புகளில் வெறும் 28 விளக்கக் குறிப்புகளையும் தர்ஜமாவில் காணப்படும் மொழியாக்கப் பிழைகள், தொகுக்கப்பட்ட வரலாறு, இம்மொழிபெயர்ப்பு பற்றி. . . ஆகிய தலைப்புகளைக் கொண்ட பட்டியலை 03-02-2009 அன்று ஒப்படைத்தார்.
இரு தரப்பினரும் கையெழுத்திட்ட ஒப்பந்தத்திற்கிணங்க முஜீபுர்ர்மான் மேற்கண்ட பட்டியலை ஒப்படைத்த பிறகும் கூட, அதிலும் மேலதிக விபரங்கள் கேட்டு, பீ.ஜை அங்கலாய்ப்பது மீண்டும் விவாதத்திலிருந்து தப்பிக்கும் முயற்சியோ என்று எண்ணத் தோன்றுகிறது.
‘ஏகத்துவம்’ மாத இதழின் தில்லுமுல்லு!
இந்த விவாத ஒப்பந்தத்தின் நிகழ்வுகள் இவ்வாறு இருக்க மார்ச் 2009 ‘ஏகத்துவம்’ மாத இதழில் ‘தொண்டியில் ஒரு விவாத ஒப்பந்தம்’ என்ற தலைப்பில் வழமை போல பல தில்லுமுல்லுகளை அரங்கேற்றியுள்ளனர்.
பீஜைனுல் ஆபிதீனின் மூன் பப்ளிகேஷன் மூலமாக வெளியிட்டுள்ள, அவரது தர்ஜமா தொடர்பான விவாத ஒப்பந்தத்தை ததஜவுக்கும் முஜீபுர்ர்மானுக்கும் நடந்ததாக சித்தரித்து பீ ஜையை காப்பாற்ற முயற்சித்துள்ளனர். இதன் நன்றிக் கடனாக, தர்ஜமா வியாபாரத்தில் பீ.ஜைக்கு கிடைக்கும் இலாபத்தில் துன்பத்தில் கைகொடுக்கும் தன் தொண்டர்களை இணைத்துக் கொள்வாரா?!
இவர்களின் சல்லித்தனத்தை இவர்களின் உயிர் நண்பர்களே மேடை போட்டு உலகறிய முழங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இவர்கள் பிறரைப் பார்த்து சல்லிக் காசுக்காக செயல் படுபவர்கள் என்று குற்றம் சாட்டுவது கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்து கல்லெறிவதற்குச் சமமல்லவா?
வேதம் ஓதும் சாத்தான்கள்!
இந்தப் புல்லுறுவிகள் தங்களின் அயோக்கியத் தனங்களை மறைப்பதற்காக கட்டுரையின் துவக்கத்திலும் இறுதியிலும் அல்குர்ஆனின் சில வசனங்களை எழுதி மார்க்கச் சாயம் பூசிக் கொள்கின்றனர். வேதம் ஓதும் சாத்தான்கள் இவர்கள் தானோ?!
விவாதத்திற்கு முன்னரே இவ்வாறு திசை திருப்புவோர் விவாதத்தின் போதும் அதற்குப் பிறகும் என்னென்ன நரித்தனங்களை அரங்கேற்றப்போகிறார்களோ?
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பதற்கிணங்க, இவர்களின் போலித்தனங்களை அறிந்து கொள்ளும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அல்ம்துலில்லாஹ்!
பலரை சிலகாலம் ஏமாற்றலாம்; சிலரை பலகாலம் ஏமாற்றலாம்; ஆனால் எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது என்பதை பீ.ஜையும் அவரது ஆதரவாளர்களும் உணர்வது எப்போது?
பொதுமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்! பிறர் பற்றி இவர்கள் கூறும் எந்த தகவல்களையும் உரிய முறையில் தீர விசாரிக்கமால் தயவு செய்து நம்பி ஏமாறாதீர்கள்!
சத்தியம் நிலை நாட்டப்படவும் இந்தப் போலிகள் முழுமையாக அடையாளம் காட்டப்படவும் அல்லாஹ்விடத்தில் துஆ செய்யுங்கள்!
- அல்லாஹ் போதுமானவன் -
(மார்ச் 2009 ஏகத்துவம் மாத இதழில் ‘தொண்டியில் ஒரு விவாத ஒப்பந்தம்’ என்ற தலைப்பில் தவறான பல தகவல்களை பதிய வைத்ததே இதனை நான் எழுதி வெளியிடுவதற்குக் காரணம்!)
No comments:
Post a Comment