சி.ஆர்.பி.எஃப் ஐச்சார்ந்த ஜவான்கள் சேர்ந்து இரண்டு பெண்களை கற்பழித்து கொன்ற சம்பவத்தை தொடர்ந்து வடக்கு கஷ்மீரில் போராட்டம் வலுக்கிறது.இரண்டு தினங்களாக தொடரும் போராட்டத்தில் 40 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.இரண்டாம் நாளாகிய நேற்றும் ஷோபியான்,புல்வானா நகரங்களில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தது.சனிக்கிழமை அன்று நிலோஃபர் ஜான்(வயது 22) ஆஸியா ஜான்(வயது17)ஆகிய பெண்களை கடத்திக்கொண்டு சென்று சி.ஆர்.பி.எஃ ஐச்சார்ந்த வெறியர்கள் கற்பழித்து கொலைச்செய்துள்ளனர்.ஆனால் இச்சம்பவத்தை விபத்து என்று கூறுகிறது காவல்துறை.இப்பெண்களின் சகோதரனான ஸஹூர் அஹ்மதுதான் ஆஸியாவின் உடலை நுல்லயில் பாலத்தின் அருகில் முதலில் பார்த்திருக்கிறார்.அப்போது உடலின் பல இடங்களிலும் காயங்களும் ஆடைகள் கிழிந்த நிலையிலும் இருந்ததாக கூறுகிறார்.இச்சம்பவத்தை கண்டித்து அந்நகரைச்சார்ந்த பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் பல இடங்களிலும் மோதல் நடைபெற்றது.இரண்டாம் தினமான நேற்றும் இரு நகரங்களிலும் கடைகளும் அலுவலகங்களும் பூட்டிகிடந்தன.ராணுவத்தின் இந்த அக்கிரமத்தை கண்டித்து இன்று முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளார் ஹுரியத் தலைவர் ஸய்யித் அலிஷா கிலானி.க்ஷ்மீரிகளின் உயிர் மட்டுமல்ல அவர்களின் மானத்தையும் பறித்துக்கொண்டிருக்கிறது இந்திய அரசு என மீர்வாய்ஸ் ஃபாரூக் அவர்கள் குற்றம் சுமத்தினார்.
Thejas
No comments:
Post a Comment