அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, September 11, 2009

சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்க அக். 15 கடைசி நாள்!

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் பயிலும் சிறுபான்மையின மாணவ மாணவியர் கல்வி உதவித் தொகை பெற, 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்து உள்ளார்.


கடலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சுயநிதிக் கல்லூரிகளில் தொழிற்கல்வி, தொழில் நுட்பக் கல்வி (4 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல்) பயின்று, 2007-08 மற்றும் 2008-09 ஆண்டுகளில் முதல் முறையாகக் கல்வி உதவித் தொகை பெற்ற சிறுபான்மையின மாணவ மாணவியர், நடப்பு ஆண்டில் புதுப்பிக்க 15-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.
முந்தைய பருவத்தில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்று இருப்பதை உறுதி செய்து, கல்வி உதவித் தொகை பெற புதுப்பிக்க வேண்டிய மாணவ மாணவியரின் பட்டியலை, கல்வி நிறுவன முதல்வர்கள் 23-ம் தேதிக்குள் சென்னை சிறுபான்மையின நல ஆணையருக்கு அனுப்ப வேண்டும்.
அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வகுப்பு 11 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (தொழிற்கல்வி தொழில் நுட்பக் கல்வி நீங்கலாக) பயிலும் சிறுபான்மையின மாணவ மாணவியர் புதிய அல்லது புதுப்பித்தல் கல்வி உதவித் தொகை கோரி சம்பந்தப்பட்ட மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர், ஐடிஐ, ஐடிசி, பாலிடெக்னிக், கல்லூரி முதல்வருக்கு 15-9-2009-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கல்வி நிறுவன தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் கல்வி உதவித் தொகைக்கான கேட்புப் பட்டியலை மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு 18-9-2009-க்குள் அனுப்ப வேண்டும் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.


No comments: