ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம் அடைந்ததையொட்டி ரோசைய்யாவை முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்தது. இதன்படி அவர் முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால் ஆந்திர மக்கள் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டியை முதல்வராக்க வேண்டும் என்று தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
90 சதவீத காங்கிரஸ் தொண்டர்களும் ஜெகனுக்கு ஆதரவாக உள்ளனர். ஆந்திராவில் பல்வேறு பகுதிகளில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆதரவாளர்கள் அவரை முதல்வராக்க கோரி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். இதனால் ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அனந்தபுரம் மாவட்டம் தாடிபத்ரியை சேர்ந்த பிளஸ்-1 மாணவன் சுரேஷ் என்பவர் ஜெகன் மோகன் ரெட்டியின் தீவிர ஆதரவாளர். இவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வர் ஆவார் என்று எதிர்பார்த்தார். திடீரென காங்கிரஸ் மேலிடம் ரோசைய்யாவை முதல்வராக அறிவித்ததால் வேதனை அடைந்தார்.
இந்நிலையில் அவர் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்தார். உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அனந்தபுரம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அப்போது சுரேஷ் போலீசாரிடம், ஜெகன்மோகன் ரெட்டியை முதல்வராக்காததால் விஷம் குடித்தேன் என்றார்.பின்னர் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
இதேபோல் வாரங்கலை சேர்ந்த காங்கிரஸ் தொண்டர் சிரஞ்சீவியும் ஜெகன்மோகன் ரெட்டியை முதல்வராக்க கோரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
No comments:
Post a Comment