அத்வானியின் ர(த்)த யாத்திரைக்கு பா.ஜ.க வில் எதிர்ப்புகிளம்பியுள்ளது. பா.ஜ.க வின் தலைவரான அத்வானி ர(த்)த யாத்திரைகளுக்கு பெயர் போனவர்.
இவர் இந்த ரத யாத்திரை நடத்திதான் பாபரி மஸ்ஜித் மற்றும் அதனை தொடர்ந்து முஸ்லீம்கள் மீது நடத்தப்பட்ட கலவரங்களை சாதித்து காட்டினார். தற்பொழுது அவரின் ர(த்)த யாத்திரை ஆசைக்கு பா.ஜ.க விலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அத்வானி தலைமையிலான பா.ஜ.க அரசு கடும் தோல்வியுற்ற நிலையில் அவருக்கு எதிராக பல குரல்கள் அவர் கட்சியின் உள்ளேயே கிளம்பி உள்ளது. ஆரம்பத்தில் அவருக்கு எதிராக கிளம்பிய ஓரிரு குரல்கள் இன்று கூட்டம் சேர்ந்துக்கொண்டு அவருக்கு எதிராக பேசத்தொடங்கிவிட்டன. கட்சி தற்போது இருக்கின்ற நிலைமையில் அத்வானி ரத யாத்திரை மேற்கொண்டால் அது அவரை கட்சியின் பிரதிபலிப்பாக மக்களிடம் காட்டும், அதனால் இதனை அனுமதிக்க கூடாது என்று அவர்கள் கூறுகின்றனர். (அவர்களின் கூற்றுப்படி, அத்வானி கட்சிக்கு சரியானவர் இல்லை போலும்.) பா.ஜ.க வின் தாய் அமைப்பான R.S.S. அத்வானியை ரத யாத்திரை நடத்துவதை தவிர்த்து அவரை கடை நிலை ஊழியர்களை சந்தித்து அவர்களை உற்சாகமூட்டுமாறு கூறியுள்ளது.
ஒருகாலத்தில் அவருக்கு ஆதரவாக இருந்த குரல்கள் இன்று இப்படி அவருக்கு எதிராக மாறியது அவரின் அரசியல் பயணத்திற்கு முற்றுபுள்ளியாக மாறக் கூடும்.
No comments:
Post a Comment