
பிகார் அதிரடிப்படை போலீசார், சுதான்சு சுதாகர் என்ற I.S.I. உளவாளியை கைது செய்துள்ளனர். இவர் பாகிஸ்தானின் I.S.I அமைப்புக்காக இந்தியாவில் வேவு பார்த்து வந்துள்ளார். இவரிடம் இருந்து ராணுவம் தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சுதாகரின் தொலைபேசி தொடர்புகளை தொடர்ந்து கண்காணித்து வந்த போலீசார் அவரை மடக்கி பிடித்துள்ளனர். சுதாகரிடம் நடத்தப்பட்ட விசாரனையில் அவர் முன்னாள் ராணுவ வீரர் என்பதும், 5 வருடங்களுக்கு முன்னர் ராணுவத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. மேற்கு எல்லையில் இந்திய ராணுவத்தின் நடவடிக்கை குறித்த முக்கிய தகவல்கள் அடங்கிய ஆவணங்களை நேபாளத்தில் உள்ள I.S.I., உளவாளிகளிடம் கொடுக்க முயன்ற போது சுதாகர் கைது செய்யப்பட்டார்.
No comments:
Post a Comment