அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, August 24, 2010

கஷ்மீர் பிரச்சினைக்கு நிபந்தனையற்ற பேச்சு நடத்த வேண்டும் - காரத்

கஷ்மீர் பிரச்சனைக்குத் அனைத்து பிரிவினரையும் அழைத்து நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முன்வரவேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி பொதுச்செயலர் பிரகாஷ் காரத் வலியுறுத்தினார்.

ஜம்மு கஷ்மீரில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாமல் காங்கிரஸ் அரசு திணறுகிறது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதைவிட அணு விபத்து நஷ்ட ஈடு மசோதாவை நிறைவேற்றுவதில்தான் அதிக அக்கரை காட்டுகிறது.

கஷ்மீரில் அனைத்துத் தரப்பினரையும் அழைத்து மத்திய அரசு உடனடியாக பேச்சுவார்த்தையை தொடங்கவேண்டும். பிரச்சனையை கண்டு ஒதுங்குவதால் தீர்வு கிடைக்காது. திறந்தமனதுடன் பேச்சு நடத்தப்படவேண்டும். கஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை அங்கீகரிப்பதும் மாநில மக்களின் தனி அடையாளத்துக்கு உத்தரவாதம் அளிப்பதன் மூலமும் பிரச்சனைக்கு தீர்வு காண வழி ஏற்படும் என்பதில் நம்பிக்கை உள்ளது

அதிகபட்ச தன்னாட்சி என்பதை அடித்தளமாக கொண்டு புதிய அரசியல் தீர்வு காணவேண்டும். காஷ்மீர் பிரச்சனை மோசமடைந்துள்ளது. மாநிலத்தில் நிலவும் விரும்பத்தகாத சம்பவங்களை வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மட்டும் கருதி,அதைச் சமாளிக்க சட்ட நடவடிக்கை எடுப்பதை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.

கஷ்மீரில் அமல்படுத்தப்பட்டிருக்கும் இராணுவ சிறப்பு அதிகார சட்டத்தில் அச்சுறுத்தும் கடுமையான சட்ட விதிகளை அரசு திருத்த வேண்டும். அதுவரை ஸ்ரீநகரிலிருந்தும் பிற குடியிருப்புப் பகுதிகளிலிருந்தும் அந்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்.

கடந்த 2 மாதத்துக்கும் மேலாக தொடரும் வன்முறைச் சம்பவங்களால் 62க்கும் மேற்பட்டோர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டது வேதனையிலும் வேதனை.இதை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்று காரத் கூறினார்.

No comments: