அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, August 24, 2010

நோக்கியாவின் இரட்டை சிம் கார்டு போன் இந்தியாவில்


கொல்கத்தா : உலகளாவிய மொபைல் சந்தையில் அதிகம் விற்பனையாகும் நோக்கியா இந்தியாவிலும் அதிக விற்பனையாகும் மொபைலாக விளங்குகிறது. இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதத்தில் உலகளாவிய அளவிலும் இந்தியாவிலும் ஓரே சமயத்தில் இரண்டு சிம் கார்டு உள்ள மொபைலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

நோக்கியா அறிமுகம் செய்ய உள்ள சி-1 மற்றும் சி-2 ஆகிய இரண்டு மாடல்களும் 2,500 ரூபாய்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இம் மொபைல்களில் எப். எம். ரேடியோ, 1000 முகவரி கொள்ளளவு வசதி, டார்ச் மற்றும் வி.ஜி.ஏ. கேமரா போன்றவை இருக்கும் என தெரிகின்றது.

இத்தகவலை உறுதிப்படுத்திய நோக்கியா இந்தியாவின் இயக்குநர் ராம்நாத் இம்மொபைல்களை இப்போதே சென்னையில் உள்ள நோக்கியா தொழிற்பேட்டையில் தயாரிப்பதா அல்லது பின்னர் தயாரிப்பதா என்பது முடிவு செய்யப்படவில்லை என்றார். இரண்டு வருடங்களுக்கு முன்பே இதன் போட்டியாளர் சாம்சங் இரட்டை சிம் கார்டு போனை அறிமுகப்படுத்தினாலும் அவற்றின் விலை 3,200 ரூபாயிலிருந்து 9.600 ரூபாய் வரை இருப்பதால் நோக்கியா இரட்டை சிம் கார்டு மொபைல் சந்தையிலும் ஆதிக்கம் செலுத்தும் என தெரிகின்றது.

No comments: