புதுடெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில், அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு மேல்முறையீடு செய்யவுள்ளதாக, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் விசாரிக்கக் கோரும் சுப்பிரமணியன் சுவாமியின் மனுவை தள்ளுபடி செய்து, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது.
இதுகுறித்து ஏமாற்றம் தெரிவித்த சுப்பிரமணியன் சுவாமி, "இந்தத் தீர்ப்பை நான் எதிர்பார்க்கவில்லை. எனது மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. ஆனாலும் இதுபற்றி நான் கவலைப்படவில்லை.
ப.சிதம்பரத்துக்கு எதிராக இன்னும் அதிகமான ஆதாரங்களுடன் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடுவேன். அத்துடன், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தை நேரடியாக அணுகுவது பற்றி பரிசீலித்து வருகிறேன்.
முதலில் ப.சிதம்பரத்துக்கு எதிரான ஆதாரங்களைத் தருவேன். பிறகு, சோனியாவுக்கு எதிரான ஆதாரங்களை சமர்ப்பிப்பேன். இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை நிச்சயம் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் சேர்ப்பேன்," என்றார் சுப்பிரமணியன் சுவாமி.

No comments:
Post a Comment