|
Monday, March 28, 2011
ஆலிவ் எண்ணெய்
தாய்மார்களே உஷார் !
''அம்மாவுக்கு வேலை இருக்கு... நீ அமைதியா டி.வி பார்த்துட்டு இரு... நான் வேலை முடிச்சுட்டு வந்துடுறேன்!''என்று தங்கள் குழந்தைகளை டி.வி பெட்டிகள் / டி.வி. முன் அமரவைத்துப் பழகும் உம்மாக்கள் கொஞ்சம் காலம் கழித்து ஏன் இப்போவே, ''என்னோட புள்ள / மவ என்கிட்ட சரியாவே ஒட்ட மாட்டேங்குது எப்பவும் அடம் பிடிச்சுகிட்டு அழுதுட்டே இருக்கு. சில விஷயங்களில் கோபமும் படுது டி.வி போட்டாதான் அழுகையை நிற்கிறது!'' என்று புலம்புவார்கள். நம்புவதற்கு கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால், நம்புங்கள்... விவரம் அறியும் முன்னரே டி.வி-யின் அரவணைப்பில் வளரும் குழந்தைகளுக்கு, எதிர் காலத்தில் பெற்றோர் மீது பாசப் பிணைப்போ, நேச அரவணைப்போ இருக்காதாம். ஸ்கூல் மிஸ், ஆட்டோ டிரைவர், கராத்தே மாஸ்டர் போலப் பெற்றோரையும் தனது தினசரி அலுவல்களை முடிக்க உதவும் ஆளாக மட்டுமே கருதுவார்களாம். இவைகள்தான் இன்றைய நிலையில் நிஜம், இப்படியாக சர்வசாதரமாக நமது இல்லங்களில் நடந்தேறும் அன்றாட நிகழ்வுகளை எத்தனை பேர் கண்கானிக்கிறீர்கள் அல்லது வீட்டிலுள்ளவர்களிடம் கலந்து பேசிக் கொள்கிறீர்கள்?
இன்னொரு அதிர்ச்சி இந்த விஷயத்தை அப்படியே அமோதித்த மனோதத்துவ மருத்துவர் இன்னும் பல அதிர்ச்சிகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். ''பொழுதுபோக்குச் சாதனம் என்பதைத் தாண்டி டி.வி எனும் இயந்திரம் ஒரு வீட்டின் சூழலையே கட்டுப்படுத்தும் மாஸ்டர் மெஷினாக மாறிவிட்டது. இன்றைய நெருக்கடி மிகுந்த சூழலில், தத்தமது குழந்தைகளுடன் போதுமான நேரம் செலவிட முடியாமல் தங்களைத்தானே ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள். வீட்டில் இருக்கும் சமயங்களிலும் 'எப்படியோ அமைதியாக இருந்தால் சரி’ என்று குழந்தைகளை டி.வி-யிடம் தத்துக் கொடுத்துவிடுகிறார்கள். அதன் மிக மோசமான பின்விளைவுகளைப்பற்றிய விழிப்பு உணர்வு அவர்களிடம் இல்லை.
ஒன்றரை முதல் மூன்று வயது வரையில் ஒரு குழந்தை கிரகித்துக்கொள்ளும் விஷயங்கள்தான் அந்தக் குழந்தையின் மனநல வளர்ச்சியில் மிக முக்கியப் பங்கு வகிக்கும். ஒரு குழந்தைக்கு உலகத்தின் ஃபேன்டஸிகளைக் கற்றுக்கொடுக்கும் பொறுப்பு தாயைச் சேர்ந்தது. எப்படி சத்தான, ஆரோக்கியமான உணவுகளை மட்டும் ஒரு குழந்தைக்கு 'ஸ்பூன் ஃபீட்’செய்கிறோமோ, அதைப்போலத்தான் மனநலன் சம்பந்தப்பட்ட சங்கதிகளையும் தரம் பிரித்து ஒரு குழந்தைக்குப் புகட்ட வேண்டும். ஆனால், அப்படியான எந்த ஃபில்டரும் இல்லாமல் உலகின் அத்தனை நல்லது, கெட்டதுகளையும் மொத்தமாகக் கடை பரப்பும் டி.வி-யைக் குழந்தையின் கையில் கொடுத்தால் என்ன நடக்கும்?
'அம்மாவுக்கு வேலை நிறைய இருக்கு. அதனால நம்மகூட விளையாட மாட்டாங்க’ என்று தானாகவே முடிவெடுத்து,தாயிடம் இருந்து விலகிவிடுகிறது. அதே சமயம், அந்த நேரம் தன்னை வசீகரிக்கும் டி.வி கேரக்டர்களோடு ஒன்றிவிடுகிறது. வீட்டுக்கு யாராவது உறவினர்கள் வந்தால்கூட, அவர்கள் அம்மா, அப்பாவுக்குத்தானே சொந்தக்காரர்கள் என்ற நினைப்புடன், அவர்களை கண்டு கொள்ளாமல் இருப்பதன் காரணமும் இதுதான்.
நல்ல விஷயங்களை டிவியில் அல்லது கணினியில் காண்பிப்பதைத் தவிர்த்து, நம் மடியில் தூக்கிவைத்துக்கொண்டு அந்தச் சம்வங்களைச் சொல்ல வேண்டும். நல்ல விளையாட்டுக்களை விளையாடக் கற்றுக் கொடுப்பதன் மூலம்,குழந்தைகளின் கை, மூளை, கண்கள் போன்ற உடல் உறுப்புகளுக்குப் பலம் சேர்க்கலாம். தொடர் தொலைக் காட்சிகள் கானும் பழக்கத்தில் இருந்து ஒரு குழந்தையை அத்தனை சாமான்யத்தில் வெளியே கொண்டு வர முடியாது. தொலைக் காட்சி பார்ப்பதைக் குறைத்துக் கொள்!’ என்று அவர்களைக் கட்டாயப்படுத்தும்போது கோபம் அதிகமாகி, கை,கால்களை உதைத்து அழ ஆரம்பிப்பார்கள். நாமும் பயந்து போய், அவர்களை டி.வி பார்க்க அனுமதிப்போம். அப்படிச் செய்தால் அதைப்போல முட்டாள்தனம் வேறு எதுவும் கிடையாது. அழுது அடம்பிடித்தாலும் டி.வி-யின் இயக்கத்தை நிறுத்திவிட்டு, அமைதியாக நம் வேலை யைப் பார்த்துக்கொண்டு இருந்தால், 'நம் பாச்சா இவர்களிடம் பலிக் காது’ என்று நம் சொல் பேச்சு கேட்கத் துவங்குவார் கள். அதே சமயம், அழுகையை நிறுத்தியதும் மனது கேட்காமல் குழந்தைகளிடம், 'அம்மா தெரியாமத் திட்டிட்டேன்... ஸாரி!’என்று செல்லம் கொஞ்சாதீர்கள். அப்படிச் செய்வது பேராபத்து.'தப்பு செய்தாலும், உம்மா மன்னித்துவிடுவாங்க!’ என்ற எண்ணத்துக்கு அது நீர் ஊற்றும். வேறு வழியே இல்லை... இந்தக் காலத்தில் குழந்தை வளர்ப்பு என்பது கத்தி மேல் நடப்பதைக் காட்டிலும் ஆபத்தானது. ரொம்பவே பக்குவமாகக் கையாள வேண்டும். ரிமோட் எப்போதும் உங்கள் கையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்... நான் சொல்வது டி.வி ரிமோட் மட்டுமே அல்ல!'' என்று அறிவுறுத்துகிறார். நம் குழந்தை நமது வளர்ப்பில்தான் நமக்கு நன்மை செய்யும் ஆக... ஒவ்வொரு தருனத்தையும் பயனுல்லதாக பயண்படுத்திக் கொள்ள முயலுங்கள் உங்களையும் மாற்றிக்கொள்ளுங்கள்,இனிமேல் யாருடைய சந்தோஷத்தை எதிர்பார்க்கிறீர்கள் உங்களுடையது சந்தோஷம் என்றால் உங்கள் குழந்தைகளை உங்கள் வசப்படுத்திக் கொள்ளுங்கள். குழந்தைகளின் சந்தோஷம் என்றால் நீங்கள் மாறிக் கொண்டு அவர்களை வசப்படுத்திடுங்கள்.
சரி, இதுமட்டுமா இன்னும் இருக்கிறதே சொல்வதற்கு. சமீபகாலமாக திடீரென்று சிறு குழந்தைகளின் பார்வை இழைப்பு, கோளாறு, மழலையிலிருந்தே முகக் கண்ணாடி !இவைகள் ஏன் !? சிந்தீர்ப்பார்களா பெற்றோர்கள்!?
இலவசம்!
என் தேசத்தை நாசமாக்கிய ஒரே சொல்… இலவசம்! – குன்றக்குடி அடிகளார்
ஆனால், ‘ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும்!’ என்கிறார் தன்மானத் தமிழர்களைக் காக்கப் பிறந்த தலைவர் கருணாநிதி.
இலவசங்கள் தொடரும் வரை ஏழைகள் தொடருவார்கள் என்கிற பேருண்மை அந்தப் பெரியவருக்குத் தெரியாதுபோலும்.
பசியில் வாடுபவனுக்கு மீனைக் கொடுக்காதே… மீன் பிடிக்கக் கற்றுக்கொடு! » என்கிற மேலை நாட்டுப் பொன்மொழி இந்த ஏழை நாட்டுத் தலைவர்களுக்கு ஏன்புரியாமல்போனதோ?
தொலைக்காட்சி இலவசம், உடுப்பு இலவசம், அடுப்பு இலவசம் என அனுதினமும் ஓர் அறிவிப்பை வெளியிட்டு, கையேந்தும் பெருமக்களை பெருக்கிக்கொண்டே போகிறது இந்த அரசாங்கம்.
65 ஆண்டு கால சுதந்திரத்தில், 45 ஆண்டுகள் இந்தத் தாய்த் தமிழகத்தை திராவிட இயக்கங்கள் ஆண்டிருக்கின்றன. இன்றைக்கு இலவசத்தை மகத்தான திட்டமாக வாய் வலிக்கச் சொல்பவர்கள், இத்தனை காலங்கள் ஆண்டும் என் மக்களைக் கையேந்தவைத்த கயமைக்குப் பொறுப்பு ஏற்பார்களா?
கலைஞரின் ‘இளைஞன்’ படம் தமிழ்த் திரையுலகத்தின் புரட்சியாய், புகழாரக் கூட்டத்தால் கொண்டாடப்படுகிறது. மாக்ஸிம் கார்க்கியின் ‘தாய்’ நாவலை, தாய்க் காவியமாக வடித்த முதல்வர் பெருமகனாருக்குச் சொல்கிறேன்… அய்யா, கார்க்கியின் எழுத்துகள் மேல் நீங்கள்கொண்டு இருக்கும் ஈர்ப்பும் பிரியமும் என்னை வியக்கவைக்கிறது. கார்க்கி எழுதிய சாலச் சிறந்த வாக்கியம் ஒன்றை உங்களுக்குச் சொல்கிறேன்.
‘பிச்சை போடுபவனைக் காட்டிலும் அருவருக்கத்தக்கவன் யாரும் இல்லை. பிச்சை எடுப்பவனைக் காட்டிலும் பரிதாபத்துக்கு உரியவன் யாரும் இல்லை!’
கார்க்கியின் எழுத்துகளைப் பல சந்தர்ப்பங்களில் புகழ்ந்து உரைத்திருக்கும் நீங்கள், இந்த வரிகளுக்கு என்ன அய்யா பதில் சொல்ல முடியும்? உடனே, பிச்சைக்கும் இலவசத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது என வழக்கம்போல் விளக்கப் புராணம் பாடாதீர்கள். தனி மனிதனுக்குப் போட்டால் பிச்சை… தமிழ்நாட்டுக்கே போட்டால் இலவசமா? எங்களின் பணத்தை எங்களுக்கே பிச்சையாக்கும் வித்தையை இத்தனை காலம் நீங்கள் பயன்படுத்தாமல் இருந்ததே ஆச்சர்யம்தான்.
இலவசத் திட்டங்களுக்காக அரசாங்கம் இழக்கும் தொகையை நீங்கள் எதன் மூலமாகஈடுகட்டுகிறீர்கள்? மது விற்பதன் மூலமாக… ஏழைக் குடியானவன் சாராயம் காய்ச்சினால்,சட்டப்படி அது குற்றம். அரசாங்கமே சாராயம் காய்ச்சினால், அது திட்டம். நல்லா இருக்கிறதய்யா உங்கள் நியாயம்? தீபாவளி தினத்தில் மட்டும் 90 கோடிக்கு சாராயம் விற்றதாக இந்த அரசாங்கம் சாதனை அறிக்கை வெளியிடுகிறது. வயிற்றுக்கு விஷம் வைத்துவிட்டு, வாய்க்கு உணவு கொடுப்பதுதான் உங்கள் சாதனையின் மகத்துவமா அய்யா?
இலவசம் என்றால் என்ன பொருள் உங்கள் அகராதியில்? பல்துறைப்பட்ட வருமானத்தின் அரசுத் திட்டங்களைச் செயல்படுத்தியதுபோக, மீதம் இருக்கும் உபரி வருமானத் தொகையை வைத்து மக்களுக்கு ஏதாவது வழங்கினால் அதற்குப் பெயர்தான் இலவசம். ஆனால், 80 ஆயிரம் கோடியை தமிழகத்தின் கடனாக ஏற்றிவைத்துவிட்டு, இழுத்துக்கோ பறிச்சுக்கோ என்கிற நிலைமையிலும், இலவசத்தை வழங்கினால், அதற்கு உண்மையான அர்த்தம் ‘உள்நோக்கம்’ என்பதுதானே!
உடனே அறிவார்ந்தவரும் மூத்த அமைச்சருமான அய்யா அன்பழகனார் அறிவிக்கிறார்… ‘தமிழக அரசின் 80 ஆயிரம் கோடி கடன் தமிழக மக்களைப் பாதிக்காது!’ அப்படி என்றால்,எங்களின் கடனை கன்னடக்காரன் கட்டுவதாகச் சொல்லி இருக்கிறானா? இல்லை தெலுங்குக்காரன் திரட்டிக் கொடுப்பதாகச் சொல்லி இருக்கிறானா?
இலவசங்கள் தொடர்ந்துகொண்டே போகட்டும்… என்றைக்கோ ஒரு நாள் பொருளாதாரநெருக்கடி ஏற்பட்டு, இலவசங்களைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டால், தமிழகத்தின் நிலை என்னாகும் என்பது உங்களின் புத்திக்குப் புலனாகவில்லையா முதல்வரே?
இலவசம் இல்லாமல் போனால், பிறர் சவம் என்றாலும், பிய்த்துத் தின்னும் நிலை வந்துவிடாதா? இத்தனை காலம் உண்டபடியே உறங்கியவனை, ஒரே நாளில் உழைப்புக்குப் பழக்கப்படுத்திவிட முடியுமா? கொலை, கொள்ளை, வழிப்பறி என இந்த நாடே சுடுகாடாகிவிடாதா? அப்படி ஒரு நிலை வரத்தானே இத்தனை இலவசங்களை அறிவித்து,எம்மக்களின் சொரணைக்குச் சுருக்குப் போட்டுவிட்டீர்கள்?
தேர்தல் நெருங்க… நெருங்க… எப்படி எல்லாம் இலவசங்களை அறிவிக்கலாம் எனமூளையைக் கசக்கி முப்பொழுதும் யோசிக்கிறீர்கள். வாரம் ஐந்து முட்டை என அறிவித்து குழந்தைகளைக் குதூகளிக்கவைத்தீர்கள்… இத்தனை காலம் ஒரு முட்டை போட்ட கோழிகள் திடீரென ஐந்து முட்டைகள் போட ஆரம்பித்துவிட்டதா அய்யா? நாலரை ஆண்டு காலம் ஏழைகள் எந்தக் குடிசையில் வாழ்ந்தாலும் சரி என நினைத்த நீங்கள், இப்போது திடீரென வீடு வழங்கும் திட்டத்துக்கு வித்திட்டு இருக்கிறீர்கள். கடகட வேகத்தில் மூன்று லட்சம் வீடுகளைக் கட்டவைக்கும் நீங்கள், அடுத்த மூன்று லட்சம் பேருக்கு வீடு கட்டிக் கொடுப்பதற்கான ரசீதைக் கொடுத்து இருக்கிறீர்கள். ‘எங்கள் ஆட்சி மீண்டும் வந்தால்,உங்களுக்கு வீடு நிச்சயம்!’ என்பதை ஏழைகள் மனதில் எவ்வளவு சூசகமாக ஏற்றிஇருக்கிறீர்கள் பார்த்தீர்களா? அடிக்கத் திட்டமிட்டு இருக்கும் கொள்ளையில் மக்களையும் மறைமுகப் பங்குதாரர்களாக மாற்றுவதற்குத்தானே இலவசம் என்கிற பெயரில் இந்தக் கையூட்டு?
ஆனால், உங்கள் நெஞ்சத்தில் கைவைத்துச் சொல்லுங்கள்… இலவசமாக்கப்பட்டு இருக்கவேண்டியது கல்வியும், மருத்துவமும்தானே… ஏழைக்கு ஓர் உயிர்; பணக்காரனுக்கு ஓர் உயிர் என்கிற பாராமுக நிலைப்பாடுதானே இன்றுவரை தொடர்கிறது. கல்வி ஏற்றத்தாழ்வுகளை இன்று வரை இந்த அரசாங்கத்தால் களைந்து எடுக்கமுடியாமல் போனது ஏன்?
ஒரு ரூபாய்க்கு அரிசி போட்டு, ‘உழைப்பு தேவை இல்லை!’ என்கிற சோம்பேறித்தனத்தை விதைப்புச் செய்தீர்கள். புத்தியை மழுங்கடிக்க இலவசத் தொலைக்காட்சி கொடுத்தீர்கள். எவன் வீட்டில் இழவு விழுந்தாலும் தன் வீட்டில், ‘மானாட மயிலாட’ ஆடினால் சரி என்கிற சாக்கடை எண்ணத்துக்குள் ஒவ்வொரு தமிழனையும் தள்ளினீர்கள். உங்களின் இலவசம் ஏற்படுத்திய பாதிப்பு என்ன என்பதை காவிரிக் கரையோர விவசாயிகளிடம் கேட்டுப் பாருங்கள்… கூலிக்கு வேலை இல்லாமல் திண்டாடிய காலம் போய், வேலைக்கு ஆள் இல்லாமல் அல்லாடும் காலம் உருவாகி இருக்கிறது. இது ஆரோக்கியமான மாற்றம் அல்ல அய்யா… அயோக்கிய மாற்றம்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் விவசாய மாவட்டங்களில் பட்டினிச் சாவுகள்தொடர்ந்தபோது, அரசாங்கமே சோறு போடும் என அறிவித்தார் அன்றைய முதல்வர்ஜெயலலிதா. கூட்டுப் பொறியலோடு குக்கிராமங்கள்தோறும் சாப்பாடு தயாரானது.அப்போது நீங்கள் சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா அய்யா… »ஊருக்கே படியளந்தமக்களை சோற்றுக்குக் கையேந்த வைத்துவிட்டார் ஜெயலலிதா!
அந்த அம்மையாரின் நிலைப்பாட்டை நான் நியாயப்படுத்தவே இல்லை. ஆனால்,அன்றைக்கு எம் விவசாய வர்க்கம் கையேந்தியதைக் காணச் சகிக்காத நீங்கள், இன்றைக்கு ஒரு ரூபாய்க்கு அரிசி போடுகிறீர்களே… நீங்கள் அரிசி போட்டால், அது மகத்தான திட்டம்… அந்த அம்மையார் ஆக்கிப்போட்டால் அது குற்றமா?
நாவைச் சுழற்றியே நாட்டைச் சுழற்றும் உங்களின் அபூர்வ ஆட்சியை மீண்டும்தக்கவைக்க நீங்கள் தீட்டி வரும் சில திட்டங்கள்பற்றிக் கேள்விப்பட்டேன். ‘ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஓர் அலைபேசி இலவசம்’ என அறிவிக்கப்போகிறீர்களாமே…தொலைக்காட்சியை இலவசமாக வழங்கி இணைப்புக்கு எங்களிடமே பணம் பறித்ததைப்போல, அலைபேசியை இலவசமாக வழங்கி இணைப்புக்கு எந்த நிறுவனத்திடம் பேசி வைத்திருக்கிறார்களோ?
உலகத்தில் தமிழகத்தைத் தவிர வேறு எங்கேயுமே சுய மரியாதைக்கு கட்சிதொடங்கியதாகவோ, தன்மானத்துக்காக இயக்கம் தொடங்கியதாகவோ, சரித்திரம் இல்லை.ஆனால், இன்றைக்கு அவமரியாதையின் அடையாளமாகவும், அவமானத்தின் சின்னமாகவும் எம் மக்கள்