அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, July 28, 2011

பள்ளிவாசல் தரைமட்டம்! விழுப்புரத்தில் அயோத்தி!!




விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் ஒன்றியத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது ராவுத்த நல்லூர் கிராமம். இந்த கிராமத்தில் இந்துக்கள் பெரும்பான் மையாகவும், முஸ்லிம்கள் 40 குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர்.
ராவுத்த நல்லூர் கிராமத்திற்கு அடுத்து புதுப்பேட்டை கிராமம் உள்ளது. இங்கும் முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர். இந்த இரண்டு கிராமத்தில் உள்ள முஸ் லிம்கள் தங்கள் வணக்க வழிபா டுகளை நிறைவேற்றிக் கொள்வ தற்காக நவாப் ஆட்சிக் காலத்தில் ராவுத்த நல்லூர் கிராம எல்லை யில் ஒரு ஏக்கர் 19 செண்ட் நிலம் ஆற்காடு நவாபினால் நன்கொ டையாக வழங்கப்பட்டது.
அந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டி இரண்டு கிராம முஸ்லிம்களும் பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் இரண்டு கிராமத் தின் மையத்தில் புதிய பள்ளி வாசல்கள் உருவாகிவிட்டபடி யால் நவாப் பள்ளிவாசலின் பயன்பாடு குறைந்து போனது.
இதனால் அருகிலுள்ள ஆதி திராவிடர் தரப்பினர் அந்த இடத் தின் மீது சொந்தம் கொண்டாடி னர். திடீரென்று அந்த இடத்தில் விநாயகர் சிலையையும் வைத்து விட்டனர். இதனால் புதுப் பேட்டை கிராம முஸ்லிம்கள் அவர்கள் மீது வழக்கு தொடர்ந்த னர்.
இதனையடுத்து இரு தரப்பினருக்கிடையே நடந்த சமாதான பேச்சுவார்த்தையின் அடிப்படையில் விநாயகர் சிலை அகற்றப்பட்டது. வழக்கும் வாபஸ் பெறப்பட் டது.
இந்நிலையில் ராவுத்தநல்லூர் முஸ்லிம்களில் ஒரு தரப்பினர் நவாப் பள்ளிவாசலை மீண்டும் புனரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதற்காக பள்ளிவா சலை போட்டோ எடுத்தனர்.
இந்த தகவல் ஆதி திராவிடர் தரப்பிற்கு தெரிய வந்ததும் இர வோடு இரவாக நவாப் பள்ளிவா சல் இடிக்கப்பட்டு தரைமட்ட மாக்கப்பட்டது. அந்த இடத்தில் புதிதாக விநாயகர் சிலையும் வைக்கப்பட்டுள்ளது.
பள்ளிவாசல் இடிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும் இரண்டு கிராமத்து முஸ்லிம்களும் காவல் நிலையத்தில் முறையிட்டனர்.
காவல்துறையிடம் இரு தரப் பாரும், அந்த இடம் தங்களுக்குச் சொந்தமானது என்று முறையிட் டதால் வருவாய் கோட்டாட்சி யர் முன்னிலையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ஆதி திராவிடர் தரப்பினர் அந்த இடம் மயானப் புறம்போக்கு இடம் என்றும், மேலும் அந்த இடத்தை புதுப்பேட்டை ஜமா அத்தினர் ஒரு லட்ச ரூபாய்க்கு விற்று விட்டதாகவும் விசாரணை யில் தெரிவித்தனர்.
புதுப்பேட்டை ஜமாஅத்தினர் அந்த இடம் வருவாய்த்துறையி னரின் பதிவேடுகளில் 1983வரை பள்ளிவாசல் என்றுதான் குறிப் பிட்டிருந்தது. இடையில் மயானப் புறம்போக்கு என்று மாற்றப்பட் டுள்ளதாக தெரிவித்தனர். மேலும் பள்ளிவாசலை எதுவும் செய்யக் கூடாது என்றும், அதற்கு பாதை யையும் ஒதுக்கித் தரவும், ஒத்துக் கொண்டு ஆதி திராவிடர் தரப்பி னர் உறுதி அளித்திருந்ததாகவும், அந்த வாக்குறுதியை மீறி பள்ளி வாசலை இடித்து விட்டதாகவும் குற்றம் சாட்டினர்.
மேலும் அந்த இடத்தை ஆதி திராவிடர் எழுதி வாங்கியபோது, “இந்த நிலத்தை ஆதி திராவிடர் பயன்படுத்துவது குறித்து ஏதே னும் பிரச்சினை ஏற்பட்டால் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என்று வாக்குறுதி அளித்திருப்பதையும் சுட்டிக் காட்டினர்.
இறுதியில் வருவாய் கோட் டாட்சியர் முன்னிலையில் ஆதி திராவிடர் கொடுத்த பணத்தை புதுப்பேட்டை ஜமாஅத்தினர் திரும்ப கொடுத்து விட வேண்டும்; அந்த நிலத்தின் ஓரமான ஒரு பகுதியை ஆதி திராவிடர் பயன் படுத்திக் கொள்வது என்றும் கடந்த 17ம் தேதி வெள்ளிக் கிழமை முதல் முஸ்லிம்கள் அந்த இடத்தில் தொழுகை நடத்திக் கொள்ளலாம் என்றும், அதற்கு ஆதி திராவிடர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
இந்த அடிப்படையில் கடந்த 17ம் தேதி முஸ்லிம்கள் அந்த இடத்தில் வழிபாடு நடத்த முயற் சித்தனர். ஆனால் ஆதி திராவி டர்கள் திரண்டு வந்து அவர்களை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் கலவரம் ஏற்படும் சூழ் நிலை உருவானது. முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் முயற்சி தடுக்கப்பட்டது. காவல்துறையி னர் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டிருந்ததால் அசம்பா விதம் எதுவும் ஏற்படவில்லை.
இதனையடுத்து கடந்த 20ம் தேதி மீண்டும் மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் அமை திப் பேச்சுவார்த்தை நடத்தப்பட் டது. அந்தப் பேச்சுவார்த்தையில், மாவட்ட ஆட்சியர் மூலமாக வக்ஃபு போர்டுக்கு கடிதம் எழுதி முடிவைப் பெறுவது என்றும், அரசின் மறு உத்தரவு வரும்வரை இரு தரப்பினரும் அந்த இடத்தை பயன்படுத்தக் கூடாது என்றும் ஆறு மாத காலத்திற்குள் தீர்வு காணப்படும் என்றும் முடிவெடுக் கப்பட்டுள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தையி னால் பிரச்சினை தற்காலிகமாக முடிவுக்கு வந்த போதிலும், மீண்டும் எப்போது வெடிக்குமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. ஜமாஅத் முக்கியஸ்தர்கள் இத னால் அமைதியடைந்த போதி லும் முஸ்லிம் இளைஞர்கள் முஸ் லிம்களுக்கு அநீதி இழைக்கப்ப ட்டு விட்டதாகவே குமுறுகின்றனர்.
1. பள்ளிவாசல் இடத்தை விற்பதற்கு ஜமாஅத்திற்கு யார் உரிமை அளித்தது?
2. யாரிடமும் ஆலோசனை நடத்தாமல் ஒரு சிலர் மட்டும் முடிவெடுத்தது இடத்தை விற் பனை செய்தது எப்படி நியாயமா கும்?
3. பள்ளிவாசலை இடித்தவர் களை இன்றைய தேதி வரையில் போலீஸôர் கைது செய்யாதது ஏன்?
4. பள்ளிவா சல் இடத்தில் சட்ட விரோத மாக வைத் துள்ள விநாய கர் சிலையை அகற்றாதது ஏன்?
இளைஞர்கள் கேட்கும் இந்தக் கேள்வி களில் நியா யம் இருப் பதை மறுப்ப தற்கில்லை.
அயோத்தி பாபர் பள்ளி வாசல் ஆக்கிரமிப்பிற்கும் - விழுப்புரம் ராவுத்தநல்லூர் நவாப் பள்ளிவாசல் ஆக்கிரமிப்புக்கும் இடை யில் சின்ன வித்தியாசம்தான். பாபர் பள்ளிவாசலில் முதலில் சிலை வைத்தார்கள். பிறகு இடித்து தரைமட்டமாக்கினார்கள். நவாப் பள்ளிவாசலை முதலில் தரைமட் டமாக்கி விட்டு பிறகு சிலை வைத்துள்ளார்கள்.
முஸ்லிம்களுக்கு சொந்தமான பள்ளிவாசல் இடத்தில் தொழுகை நடத்துவதற்கு தடை விதிக்கும் காவல்துறை, பள்ளிவாசலை இடித்தவர்கள் துணிவுடன் சுற்றித் திரிந்து வருவதைப் பார்த்துக்க கொண்டு அவர்களை கைது செய் யாமல் அலட்சியம் காட்டி வருகி றது.
முஸ்லிம்கள் எச்சரிக்கையுடன் இதனை மீட்க வேண்டும். இல்லை யென்றால் சங்கராபுரம் பகுதியில் 40 ஏக்கருக்கும் மேல் வக்ஃபு சொத்துகள் உள்ளன. அவற்றின் நிலையும் கேள்விக் குறியாகி விடும்!
- இப்னு மக்பூல்
سبحان الله العظيم
ஒன்று பட்ட சமுதாயமாகவாழ
நம் அனைவருக்கும்அந்த வல்ல
இறைவன் அருள் புரியட்டும்.
ஆமீன்

சாய்பாபா – நறுமண சாமியாரின் சொகுசு வாழ்க்கை விபரங்கள்


புட்டபர்த்தி : சாய்பாபாவின் ஆசிரமத்தில் சோதனை செய்யும் அதிகாரிகள் அவரது தனி அறையான யஜுர் மந்திரில் கிலோ கணக்காய் தங்கம், வெள்ளி எடுத்ததோடு மட்டுமல்லாமல் அவரின் அன்றாட பயன்பாட்டுக்காக பயன்படுத்திய அழகு சாதன பொருட்களை பார்த்து திகைத்து போய் உள்ளனர்.
இறக்குமதி செய்யப்பட்ட ஷேவிங் செட்கள், விலை உயர்ந்த சர்வதேச செண்டுகள், ஷாம்புகள், சோப்கள் மற்றும் நாப்கின்கள் அவரின் அறை முழுக்க இருந்ததாக தெரிகிறது. எப்போது உபதேசம் செய்ய வரும் போதும் நறுமணங்களை பூசிக் கொள்ளும் பழக்கம் உடையவராக சாய்பாபா இருந்ததாக தெரிகிறது. மேலும் உலகின் முண்ணணி பிராண்டுகளின் கைக்கடிகாரங்களும் உயர்ந்த ரக உலர் பழங்களின் பாக்கெட்டுகளும் ஏராளமாய் இருந்துள்ளது.
அது போல் பக்தர்கள் நன்கொடையாய் கொடுத்த ஏராளமான பொருட்கள் திறக்கப்படாமலேயே உள்ளது. 7 கிலோ எடை கொண்ட தங்க மாலைகள், 75 வெள்ளி டம்ளர்கள் உள்ளிட்ட பல அன்பளிப்புகள் அப்படியே திறக்கப்படாமல் உள்ளன. உலகில் வாழும் சாமியார்களில் வேறு யாருக்கும் பக்தர்கள் இது போல் கொடுத்ததை தாங்கள் கண்டதில்லை என்று சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் கூறினர்.
அது போல் 10,000 க்கும் மேற்பட்ட விலையுயர்ந்த சேலைகள், பிராண்டட் சட்டைகள், வேட்டிகளும் சாய்பாபாவின் அந்தரங்க அறைக்குள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றது. 2005-லிருந்தி இவ்வறையில் வசிக்கும் சாய்பாபா இவ்வறையில் டிரஸ்டின் மூத்த உறுப்பினர்களை கூட இவ்வறைக்குள் அனுமதித்ததில்லை என்பதும் அவரின் அந்தரங்க உதவியாளர் சத்யஜித்க்கு மட்டும் அனுமதி கொடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கஷ்மீர்:பரஸ்பரம் நம்பிக்கையை வளர்த்த இந்தியா-பாக். ஒப்புதல்.

  pak4-270711
புதுடெல்லி:தீவிரவாதத்தை இணைந்து எதிர்கொள்ளவும், கஷ்மீர் விவகாரத்தில் பரஸ்பரம் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும் இந்தியா-பாக்.வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானியும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இத்தீர்மானங்களை வெளியிட்டனர்.
தீவிரவாதம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஒரேபோல பிரச்சனை என கிருஷ்ணா கூறினார். அமைதிக்கான பேச்சுவார்த்தைகள் துவங்கியது இருநாடுகளுக்கு இடையேயான உறவில் புதிய யுகம் பிறந்துள்ளதாக ஹினா ரப்பானி தெரிவித்தார்.
நேற்று முன் தினம் டெல்லிக்கு வருகைத்தந்த பொழுதை விட தற்பொழுது எனக்கு தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. கஷ்மீர் விவகாரத்திலும் சரியான தீர்வு வேண்டும். இதற்காக இனியும் பேச்சுவார்த்தையை தொடருவோம் என ஹினா ரப்பானி தெரிவித்தார்.
இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அடுத்த ஆண்டு இஸ்லாமாபாத்தில் மீண்டு பேச்சுவார்த்தை நடத்துவர்.
ஜம்மு-காஷ்மீர் பிரச்னை குறித்து இருநாட்டு அமைச்சர்களும் முக்கியமாகப் பேசினர். இந்த விஷயத்தில் தொடர்ந்து பேச்சு நடத்த வேண்டும். விஷயத்தை தொலைநோக்குப் பார்வையுடன் அணுக வேண்டும். வேறுபாடுகளைக் களைந்து, நம்பிக்கையூட்டும் வகையில் அமைதியான தீர்வை எட்ட வேண்டும் என முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஷ்மீர்-பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலிருக்கும் கஷ்மீர் இடையேயான வர்த்தக தொடர்பு தாராளமாக்கப்படும். வர்த்தகம் செய்யும் பொருட்களின் பட்டியலை செயற்குழு பரிசோதித்து அனுமதி அளிக்கும். வர்த்தகத்தின் கால அளவு வாரத்தில் இரண்டு முதல் நான்கு தினங்களாக அதிகரிக்கப்படும். செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய தினங்களில் ஸ்ரீநகர்-முஷாராபாத், பூஞ்ச்-ராவல்கோட் வழிகளில் ட்ரக் போக்குவரத்தை அனுமதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கஷ்மீர், தீவிரவாதம், மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானில் விசாரணை, கடல் எல்லையை மீறி மீன்பிடிக்கச் சென்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்கள் பிரச்சனை உள்ளிட்ட மனிதநேய பிரச்சனைகள், வர்த்தக-பொருளாதார ஒத்துழைப்பு, ஸர்க்ரீக், சியாச்சின், அமைதி, பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் பேச்சுவார்த்தை நடந்தது.
ஹினா ரப்பானி டெல்லியில் ஹுர்ரியத் தலைவர்கள் செய்யத் அலிஷா கிலானி, மிர்வாய்ஸ் உமர் ஃபாரூக் ஆகியோருடனும், பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே.அத்வானியுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பாகிஸ்தானுடனான வர்த்தக உறவை தீவிரமாக்க இந்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா பாகிஸ்தான் வர்த்தக அமைச்சர் மக்தூம் ஆமினை பேச்சுவார்த்தைக்காக இந்தியாவுக்கு அழைத்துள்ளார்
Source.Thoothu

விஞ்ஞானிகளால் உயிர்பெற்ற பெண்ணடிமைத்தனம்...





நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக..ஆமீன். 

சென்சிடிவ்வான தகவல்கள் அடங்கிய பதிவு. சகோதரிகள் மன்னிக்கவும். எழுதுவதற்கு சங்கடமாக இருந்தாலும்,  பெண்ணடிமைத்தனத்திற்கு விஞ்ஞானிகளும் காரணம் என்று புரியவைப்பதற்காகவே இந்த பதிவு.  

வரலாற்றில் நடந்த சில சம்பவங்கள் மிகுந்த அதிர்ச்சி தரக்கூடியவை. இந்த பதிவில் கூறப்பட்டுள்ள வரலாற்று நிகழ்வுகளும்  அத்தகைய ரகத்தை சார்ந்தவைதான். 

"பெண்களே நீங்கள் உடலாலும், அறிவாலும் ஆண்களை விட கீழானவர்களே" - யார் தெரியுமா இப்படி கூறியவர்கள்?.....விஞ்ஞானிகள்...ஆம் விஞ்ஞானிகளே தான். அதிலும் பிரபல விஞ்ஞானிகள்.... 

உங்களுக்கு இது அதிர்ச்சியை தரலாம். இவ்வளவு முக்கிய தகவலை நாங்கள் இது வரை கேள்விப்பட்டதில்லையே என்றும் உங்களில் சிலர் எண்ணலாம்.  வரலாற்றில் பல செய்திகள் நம்மிடமிருந்து மறைக்கப்பட்டிருப்பது புதிதில்லையே...

விஞ்ஞானிகள் சொன்னார்களா?...அவர்கள் நன்கு ஆராயாமல்  எதையும் சொல்லமாட்டார்களே என்று நீங்கள் கேட்கலாம். உங்களுடைய கருத்து சரிதான். 'ஆண்களை விட தாழ்ந்தவர்கள் பெண்கள்' என்ற கருத்தை நன்கு ஆராய்ந்தே(??) கூறியவர்கள் நாம் மேலே பார்த்த விஞ்ஞானிகள்.

இவர்களுக்கு துணையாய் நின்றது பரிணாம கோட்பாடு. ஆம், இந்த அறிவியலாளர்கள் மேற்கூறிய முடிவுக்கு வர காரணமாக இருந்தது பரிணாம கோட்பாடுதான். 

எப்படி இனவெறியர்களுக்கு துணையாக நின்று இலட்சகணக்கான மக்கள் கொல்லப்பட காரணமாக பரிணாமம் இருந்ததோ, அதுபோலவே, ஆண்களை விட கீழானவர்கள் பெண்கள் என்ற கருத்துக்கு துணையாக நின்று மனரீதியாக பெண்கள் கொல்லப்பட காரணமாய் இருந்தது பரிணாம கோட்பாடு. இது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? 

கொரில்லா குரங்குகளின் மூளைகளுக்கு நிகரானது பெண்களின் மூளை என்று கருத்து கூறிய பிரபல விஞ்ஞானிகள் கூட உலகில் உண்டு என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? மனைவி என்பவள் நாயை விட மேலானவள் என்று டார்வின் கூறினாரே, இது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?      

"ஆண்களை விட அறிவுத்திறனிலும், உடல் வலிமையிலும் நீங்கள் தாழ்ந்தவர்களே" என்று பெண்களை நோக்கி அறிவியல் ரீதியாக விளக்கம் கொடுத்து, அவர்களை "நாம் கீழானவர்களே" என்று உளவியல்ரீதியாக நம்பவைத்து கேவலப்படுத்தியது பரிணாம கோட்பாடு.    

ஆணாதிக்கம்...ஆணாதிக்கம் என்று பெண்ணுரிமைக்காக கூப்பாடு போடும் பரிணாம ஆதரவாளர்கள், தற்போது அதி விரைவாக தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், அந்த ஆணாதிக்கத்திற்கு அறிவியல் ரீதியாக தீனி போட்டு வளர்த்ததில் பரிணாம கோட்பாட்டிற்கு முக்கிய பங்குண்டு என்பதைத்தான். 'பெண்ணை விட உயர்ந்தவன் ஆண்' என்பதை அழுத்தம் திரூத்தமாக சொன்னவர்களில் டார்வினும் உண்டு என்பத்தைத்தான்.

ஆதாரங்களே இல்லாத, ஒரு யூகமாக இருக்க கூட தகுதி இல்லாத பரிணாம கோட்பாடு, இவ்வுலகிற்கு பரிசாக தந்த சீர்கேடுகளில் முக்கியமானவை...இனவெறி மற்றும் பெண்ணடிமைத்தனம். 

மனிதர்களிடேயே உயர்வு தாழ்வை அறிவியல் ரீதியாக நியாயப்படுத்தியது பரிணாம கோட்பாடு. அதுபோலவே,  பெண்ணடிமைத்தனத்தை அறிவியல் ரீதியாக நியாயப்படுத்தியது பரிணாம கோட்பாடு. 

சரி, மேலே பார்த்ததற்கெல்லாம் என்ன ஆதாரம்? இதோ ஒன்றன் பின் ஒன்றாக வருகின்றன.

பெண்கள் குறித்த பரிணாமத்தின் பார்வை:

பரிணாமம் குறித்த டார்வினின் இரண்டாவது புத்தகமான "The Descent of Man, and Selection in Relation to Sex" மனித பரிணாமம் குறித்து பேசுகின்றது. இதில் ஆண், பெண் வித்தியாசம் குறித்து விரிவாக விவரித்திருகின்றார் டார்வின்.

பெண்களை சொந்தமாக்கி கொள்ள ஆதிகால ஆண்கள் போராடி வந்ததாக குறிப்பிடும் டார்வின், பெண்களை கவர வெறும் உடல் வலிமை மட்டும் போதாது என்பதால் காலப்போக்கில் ஆண்கள் அறிவுத்திறனில் வளர்ச்சியடைந்ததாக குறிப்பிடுகின்றார் (Sexual Selection Hypothesis).

மேலும், தங்களுடைய மனைவியரை அடுத்தவர் கவருவதிலிருந்து காக்கவும், தன் குடும்பத்திற்கு தேவையான உணவையும் இடத்தையும் கொடுப்பதில் ஆண்கள் மும்முரமாக செயல்பட்டதால் அறிவிலும், உடல் வலிமையிலும் ஆண்கள் உயர்ந்தவர்களாக பரிணமித்து விட்டதாக கூறினார் டார்வின்.

பெண்களுக்கு இந்த தேவைகள் இல்லாததால் அவர்கள் ஆண்களை விட தாமதமாகவே  பரிணமித்ததாக குறிப்பிடுகின்றார் டார்வின்.

We may also infer, from the law of the deviation of averages, so well illustrated by Mr. Galton, in his work on 'Hereditary Genius,' that if men are capable of decided eminence over women in many subjects, the average standard of mental power in man must be above that of woman.
The half-human male progenitors of man, and men in a savage state, have struggled together during many generations for the possession of the females. But mere bodily strength and size would do little for victory, unless associated with courage, perseverance, and determined energy. With social animals, the young males have to pass through many a contest before they win a female, and the older males have to retain their females by renewed battles. They have, also, in the case of man, to defend their females, as well as their young, from enemies of all kinds, and to hunt for their joint subsistence. But to avoid enemies, or to attack them with success, to capture wild animals, and to invent and fashion weapons, requires the aid of the higher mental faculties, namely, observation, reason, invention, or imagination. These various faculties will thus have been continually put to the test, and selected. --- Charles Darwin,The Descent of Man, and Selection in Relation to Sex, 1871, Page No.327.

மொத்தத்தில், ஆண்கள் உயர்ந்தவர்கள் பெண்கள் தாழ்ந்தவர்கள். டார்வினுடைய இந்த கருத்தில் ஆச்சர்யமொன்றுமில்லை. அவரால் பிரபலமான பரிணாம கோட்பாட்டை பொறுத்தவரை, மனிதர்கள் என்பவர்கள் முன்னேறிய விலங்குகள். அவ்வளவே.

[இங்கு  மற்றொரு முக்கிய செய்தியையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பரிணாமத்தின் ஆணிவேரான இயற்கை தேர்வை கண்டுபிடித்ததில் டார்வினுடன் சேர்ந்து பெருமையை பகிர்ந்து கொள்பவர் அல்ப்ரெட் ரஸ்ஸல் வாலஸ் அவர்கள். அறிவியலாளர்களால் பெரிதும் மதிக்கப்படும் வாலஸ், டார்வினுடைய மனித பரிணாமம் குறித்த கருத்துக்களோடு உடன்படவில்லை. அதற்கு காரணம், ஒழுக்கம் மற்றும் அற்புத அறிவுத்திறனை மனித இனம் கொண்டிருந்ததுதான்.

மனிதனின் இந்த தன்மைகள் இயற்கைத் தேர்வால் வந்திருக்க வேண்டுமென்ற விளக்கத்தை நிராகரித்தார் வாலஸ். இவற்றை விளக்க இயற்கை தேர்வு ஒத்துவராது என்றும், நம்மை மீறிய ஒரு சக்தியே இவற்றிற்கு காரணமாக இருக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டார் வாலஸ். அதுமட்டுமல்லாமல், உலகின் முதல் உயிரினத்தையும் அந்த சக்தி தான் உருவாக்கியிருக்க வேண்டுமென்றும் கூறினார். வாலசின் இந்த கருத்துக்கள் டார்வின் மற்றும் அவரது ஆதரவாளர்களை மிகுந்த சங்கடப்படுத்தியது]

டார்வினுடைய ஆண் பெண் குறித்த கருத்துக்கள் எந்த ஆதாரத்தின் அடிப்படையிலும் அமையாதவை. எப்படி இன்றளவும் பரிணாமத்திற்கு ஆதாரங்களில்லையோ, அதுபோலேவே அவர் கூறிய ஆண், பெண் வித்தியாசத்திற்கும் ஆதாரங்களில்லை.

டார்வின் தன் இளமை பருவத்தில் கூறிய கருத்து, பெண்கள் குறித்த அவரது பார்வையை இன்னும் மோசமாக்குகின்றது. திருமணத்தில் உள்ள நன்மைகளை பட்டியலிடும் அவர், மனைவியின் தன்மைகள் குறித்து பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

"...Constant companion (and friend in old age) who will feel interested in one - Object to be beloved and played with. Better than a dog anyhow - Home, & someone to take care of house..." --- Darwin Letters, Cambridge University Library.
நிரந்தரமான உடனிருப்பவர் ( வயதான காலத்தில் நண்பர்) - விரும்பப்படுவதற்கும், விளையாடுவதற்கும் ஏற்றவர். எப்படியானாலும் நாயை விட மேலானவர் - வீட்டை கவனித்து கொள்பவர்" --- (Extract from the original quote of) Darwin Letters, Cambridge University Library.



டார்வினின் இது போன்ற கருத்துக்கள் அதிர்ச்சி அளிப்பவை. தன்னுடைய கோட்பாட்டை முன்வைப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அவர் தெரிவித்த கருத்துக்கள் இவை. அவர் முன்வைத்த கோட்பாடு, அவருடைய இது போன்ற எண்ணங்களை மாற்றாமல், ஆண் பெண் உயர்வு தாழ்வுக்கு அறிவியல் ரீதியாக சாயம் பூசியது.

பரிணாம கோட்பாடு சமூகத்தில் ஏற்படுத்திய விளைவுகள்:

பிறப்பிலேயே தாழ்ந்தவர்கள் பெண்கள் என்ற கருத்தை உருவாக்கியது பரிணாமம். பெண்களை காட்டிலும் ஆண்களே உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தை அறிவியலாளர்களிடையே உருவாக்கியது பரிணாமம். "அறிவியலே கூறிவிட்டது, நாங்கள் அறிவில் குறைந்தவர்களே" என்று உளவியல் ரீதியாக நம்பவைக்கப்பட்டார்கள் பெண்கள்.

சமூகத்தில் பரிணாமம் ஏற்படுத்திய விளைவு எந்த அளவு என்றால், உளவியல் ரீதியாக ஆண்கள் ஒரு இனமாகவும், பெண்கள் வேறு இனமாகவும் பார்க்கப்பட்டார்கள்.
"The year 1884 saw the publication of scientific book in which woman is called Homo parietalis and man is called homo frontilis" --- The history of science and technology: a browser's guide to the great discoveries, inventions, and the people who made them, from the dawn of time to today, Bryan H. Bunch, Alexander Hellemans, 2004, Page No:419. 
1884 ஆம் ஆண்டு வெளியான ஒரு அறிவியல் புத்தகத்தில் பெண்கள் Homo parietalis எனவும், ஆண்கள் homo frontilis எனவும் அழைக்கப்பட்டார்கள் --- The history of science and technology: a browser's guide to the great discoveries, inventions, and the people who made them, from the dawn of time to today, Bryan H. Bunch, Alexander Hellemans, 2004, Page No:419.  

பெண்கள் தாழ்ந்தவர்களாக சித்தரிக்கப்பட டார்வினுக்கு எந்த அளவு பங்குண்டோ அதே அளவு பால் ப்ரோகா (Paul Broca) என்ற பிரபல பிரெஞ்சு விஞ்ஞானிக்கும் உண்டு. இவர் என்ன செய்தாரென்றால், மனிதர்களின் மூளையை எடை போட்டு பெண்களை விட ஆண்களே உயர்ந்தவர்கள் என்று கூறினார்.

இவருடைய இந்த ஆய்வு சமூகத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

பாரிசில் உள்ள நான்கு மருத்துவமனைகளில் தனிப்பட்ட முறையில் ஆய்வு நடத்தினார் ப்ரோகா. சுமார் 292 ஆண் மூளைகளை ஆய்வு செய்த அவர், அந்த மூளைகளின் சராசரி எடை சுமார் 1,325 கிராம்கள் என கண்டறிந்தார். பின்னர், சுமார் 192 பெண் மூளைகளை ஆராய்ந்த ப்ரோகா, அவற்றின் சராசரி எடை சுமார் 1,144 கிராம்கள் என கண்டறிந்தார். ஆக, ஆண்களுடைய மூளைக்கும், பெண்களுடைய மூளைக்கும் சுமார் 181 கிராம்கள் வித்தியாசம். தன்னுடைய ஆய்வு முடிவுகள் 'ஆண்களே அறிவுத்திறனில் உயர்ந்தவர்கள்' என்ற கூற்றை நிரூபிப்பதாக கூறினார் ப்ரோகா.

1873 ஆம் ஆண்டு, L'Homme Mort என்னும் இடத்திலிருந்து எடுக்கப்பட்ட ஆதிகால மனித மண்டையோடுகளை ஆராய்ந்தார் ப்ரோகா. இந்த ஆய்வின் மூலம் அவர் கண்டறிந்தது, ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருந்த மண்டையோடு கொள்ளளளவு வித்தியாசம் சுமார் 99.5 cubic centimeters. இன்றைய ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருக்கக்கூடிய கொள்ளளவு வித்தியாசம் சுமார் 129.5  to  220.7 cubic centimeters.

ஆக, கொள்ளளவு வித்தியாசங்கள் அதிகரித்திருப்பது, பெண்களை விட ஆண்கள் வேகமாக பரிணமித்திருப்பதற்கு ஆதாரம் என எண்ண தொடங்கினர் ப்ரோகாவின் குழுவினர். இதனை தெளிவாக அறிவிக்கவும் செய்தனர்.

'அறிவுத்திறனில் தாங்கள் தாழ்ந்தவர்களே' என்று அறிவியல் ரீதியாக நம்பவைக்கப்பட்டார்கள் பெண்கள்.

ப்ரோகாவின் குழுவில் இருந்த L.Manouvrier என்பவர், பெண்கள் குறித்த ப்ரோகாவின் கருத்துக்களை நிராகரித்தார். இந்த ஆய்வு குறித்து வேதனையுடன் பின்வருமாறு குறிப்பிடுகின்றார் L. Manouvrier,

"The  theologians  had  asked  if women had a soul. Several centuries later, some scientists were  ready  to  refuse  them  a  human intelligence" ---  L.Manouvrier, as quoted by Stephen Jay Gould in his book The Panda’s Thumb, 1980. W.W. Norton, pp. 152-159.    
பெண்களுக்கு ஆன்மா இருக்கிறதா என்று கேட்டனர் வேத விற்பன்னர்கள். பல நூற்றாண்டுகளுக்கு பிறகு, சில விஞ்ஞானிகள், பெண்களுக்குண்டான அறிவுத்திறனை மறுக்க தயாராக இருக்கின்றனர் ---  (Extract from the original quote of) L.Manouvrier, as quoted by Stephen Jay Gould in his book The Panda’s Thumb, 1980. W.W. Norton, pp. 152-159.

ப்ரோகா தோற்றுவித்த பள்ளியின் தலைமை அறிவியலாளர்களில் ஒருவரான ல பான் (Le Bon) வரலாற்றில் முக்கிய விஞ்ஞானியாக அறியப்படுபவர். ப்ரோகாவின் ஆய்வு தகவல்களை உபயோகப்படுத்தி இவர் எழுதிய கட்டுரையை பிரான்சின் மதிப்புமிக்க அறிவியல் ஆய்விதழ் 1879 ஆம் ஆண்டு வெளியிட்டது. அதில் மிக மோசமான, அப்போதைய அறிவியல் உலகம் காணாத நச்சு கருத்தை தெரிவித்திருந்தார் ல பான்.

(பின்வரும் பத்தி மிக மிக சென்சிடிவான தகவல்களை கொண்டது. விரும்பாதவர்கள் பின்வரும் பத்தியை தாண்டி செல்லவும்)
"In  the  most  intelligent  races,  as  among  the Parisians,  there  are  a  large  number  of  women whose  brains  are  closer  in  size  to  those  of gorillas than to the most developed male brains. This  inferiority  is  so  obvious  that  no  one  can contest it for a moment; only its degree is worth discussion. All psychologists who have studied the intelligence of women, as well as poets and novelists, recognize today that they represent the most inferior forms of human evolution and that they are closer to children and savages than to an adult,  civilized  man.  They  excel in  fickleness, inconstancy, absence of thought and logic, and incapacity to reason. Without doubt there exist some distinguished women, very superior to the average man, but they are as exceptional as the birth  of  any monstrosity,  as,  for  example,  of  a gorilla  with two  heads;  consequently,  we  may neglect them entirely" --- Le Bon, as quoted by Stephen Jay Gould in his book The Panda’s Thumb, 1980. W.W. Norton, pp. 152-159. 
"பாரிஸ் மக்களை போன்ற அறிவில் சிறந்த இனத்தில், நிறைய பெண்களின் மூளைகள், நன்கு வளர்ந்த ஆணின் மூளையை விடவும், கொரில்லாக்களின் மூளையையே ஒத்து வருகின்றது. இது எதிர்க்க முடியாத உண்மை. பெண்களின் அறிவுத்திறனை ஆராய்ந்த உளவியல் நிபுணர்கள் அனைவரும் இன்று உணர்ந்து கொள்ள ஆரம்பித்திருப்பது என்னவென்றால், பரிணாமத்தின் படி அவர்கள் தாழ்ந்தவர்கள் என்பதைத்தான்.
பெண்களின் அறிவுத்திறன், நாகரிகம் அடைந்த மனிதனை ஒத்திருப்பதை காட்டிலும், குழந்தைகளையும் காட்டுமிராண்டிகளையுமே ஒத்திருக்கின்றது. சபலத்திலும், நிலையாமையிலும், சிந்திக்க தெரியாமல் இருப்பதிலும், கேள்வி கேட்பதில் திறமையில்லாமல் இருப்பதிலும் பெண்கள் மேம்பட்டிருக்கின்றனர்.
நிச்சயமாக, சராசரி மனிதனை விட (அறிவில்) உயர்ந்த சில பெண்கள் இருக்கின்றனர். எப்படி இரண்டு தலை கொண்ட கொரில்லாக்கள் பிறக்கின்றனவோ அதுபோலவே இவர்களும் விதிவிலக்கானவர்கள். ஆகையால், இவர்களை முற்றிலுமாக நிராகரித்து விடலாம்" --- Le Bon, as quoted by Stephen Jay Gould in his book The Panda’s Thumb, 1980. W.W. Norton, pp. 152-159.

ல பானின் இந்த கருத்துக்கள் எரிச்சலூட்டுபவை. ஆனால் இதே போன்றதொரு கருத்தை தான் டார்வினும் கொண்டிருந்தார். பெண்களின் சில பழக்க வழக்கங்கள் கீழ்நிலை இனங்களோடு ஒத்துபோவதாக கூறியவர் அவர்.  அதுமட்டுமல்லாமல், நாகரிகத்தில், தாழ்வான நிலையிலேயே பெண்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டவர் டார்வின்...
"It is generally admitted that with woman the powers of intuition, of rapid perception, and perhaps of imitation, are more strongly marked than in man; but some, at least, of these faculties are characteristic of the lower races, and therefore of a past and lower state of civilisation" --- Charles Darwin, The Decent of Man, 1871, Page No. 326-327.
ல பான் இதோடு நிறுத்தவில்லை. பெண்களுக்கு உயர் கல்வி தரும் அமெரிக்க சீர்திருத்தவாதிகள் சிலரது திட்டத்தையும் கேள்வி கேட்டார். இயற்கை பெண்களுக்கு கொடுத்துள்ள தாழ்வான நிலையை தவறாக புரிந்து கொள்ள கூடாதென்றும், ஆண்களுக்கு நிகராக அவர்களுக்கு கல்வி கொடுக்கப்பட்டால் சமூக புரட்சி நடந்து குடும்ப பிணைப்புகள் பாதிக்கப்படும் என்றும் கூறினார்.

பான் போல தங்களது சொந்த கருத்துக்களுக்கு ஆதரவாக அறிவியலை வளைத்து கொண்ட அறிவியலாளர்கள் அன்று இருந்தனர்.

உதாரணத்திற்கு, மனிதனுடைய புத்திசாலித்தனம், மூளையின் "frontal lobe" பகுதியை சார்ந்தே அமைந்திருக்கின்றது என சில விஞ்ஞானிகள் எண்ணினர். பின்னர், பெண்களுடைய frontal lobe பகுதி ஆண்களை விட பெரியது என்று கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, தங்களுடைய எண்ணத்தை மாற்றி கொண்டனர். அதாவது, புத்திசாலித்தனதுக்கு Frontal Lobe காரணமல்ல, Parietal Lobe பகுதியே காரணமாக இருக்க வேண்டுமென்று தங்களது எண்ணத்தை மாற்றி கொண்டனர்.

(ஒருவேளை, பெண்களின் மூளை ஆண்களை விட பெரியது என்று கண்டுபிடித்திருந்தால், புத்திசாலித்தனத்துக்கும் மூளைக்கும் சம்பந்தமில்லை என்று முடிவு கட்டியிருப்பார்கள் போல...)

பெண்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் டார்வின் முதற்கொண்டு அன்றைய விஞ்ஞானிகள் பலருக்குள்ளும் நன்கு பதிந்திருந்ததால், தங்களது எண்ணங்களுக்கு ஏற்றவாறு தான் அறிவியலை அணுகினார்களே தவிர தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில் அல்ல.          

இன்றைய சூழல்: 

உயரம், பருவம் ஆகியவையை சார்ந்து(ம்) மூளையின் அளவு வேறுபடும். இன்றைய மனிதர்களிலேயே கூட மூளையின் அளவில் நிறைய வேறுபாடு உண்டு. ஆக, மூளையின் அளவை கொண்டு அறிவுத்திறனை கணக்கிடுவதெல்லாம் இன்றைய அறிவியலுக்கு ஒத்துவராதது. அவை தவறென நிரூபிக்கப்பட்டவை. ப்ரோகா முதற்கொண்டு பல விஞ்ஞானிகளின் பெண்கள் குறித்த ஆய்வுகளை "non-sense" என்று கூறுகின்றது இன்றைய அறிவியல்.

அதுபோல, ஆண் பெண் வித்தியாசம் குறித்த டார்வினின் கூற்றுக்கும் ஆதாரங்கள் இல்லை.  இருந்தாலும், டார்வின் அறிமுகப்படுத்திய Sexual Selection Hypothesis இன்றளவும் ஆண், பெண் வித்தியாசங்களுக்கான சிறந்த விளக்கமாக பார்க்கப்படுவதாக விக்கிபீடியா கூறுகின்றது.

அவ்வப்போது அறிவுத்திறன் குறித்த சர்ச்சைகள் தோன்றி கொண்டுதான் இருக்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் தலைவர் லாரான்ஸ் சம்மர்ஸ் (Lawrence Summers) மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கினார். அறிவியல் மற்றும் கணக்கு துறைகளில் பெண்கள் (அதிக அளவில்) வெற்றி பெற முடியாததற்கு காரணம், அவர்கள் பிறப்பிலேயே அப்படித்தான் என்று அவர் கூறினார். ஆம், அன்று டார்வின் கொண்டிருந்த அதே கருத்துக்கள் இன்று சம்மர்ஸ் வாயிலிருந்து வந்து விழுந்தன. 

டென்மார்க்கை சார்ந்த பிரபல மனோதத்துவ நிபுணரான ஹெல்முத் நைபோர்க் (Helmuth Nyborg) பெரும் சர்ச்சையை சில ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தினார். சர்ச்சைக்கு காரணம், "Personality and Individual Differences" என்ற அறிவியல் ஆய்விதழில் வெளிவந்த அவருடைய ஆய்வு கட்டுரை. அந்த கட்டுரையில், பெண்களை விட ஆண்களே அறிவில் சிறந்தவர்கள் என்று தன்னுடைய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இது மிகுந்த எதிர்ப்புகளை சந்திக்க, தன்னுடைய பணியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டார் நைபோர்க். இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், நைபோர்க்கின் ஆய்வில் எந்த தவறுமில்லை என்று அவருக்கு ஆதரவாக பல ஆய்வாளர்கள் திரண்டது தான்.

நைபோர்க் சர்ச்சைகளில் சிக்கியது இது முதல் முறையல்ல. கருப்பினத்தரை விட வெள்ளை இனத்தவரே அறிவில் சிறந்தவர்கள் என்று ஏற்கனவே கருத்து கூறியிருந்தவர் நைபோர்க்.

நைபோர்க்கின் கருத்துக்களை உற்று நோக்குங்கள். டார்வினின்  பார்வைகளும் இப்படித்தான் இருந்தன.  

ஆக, இன்றளவும் இந்த சர்ச்சைகள் குறையவில்லை. பெண்களுக்கு எதிரான கருத்துக்களை கூறும் பிரபல ஆய்வாளர்கள் தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கின்றனர். ஆணாதிக்கத்திற்கு துணை போய் கொண்டு தான் இருக்கின்றனர்.

முடிவாக: 

வரலாற்றை ஆழ்ந்து நோக்கும் யாருக்கும் தெரியவரும் உண்மை என்னவென்றால், பெண்ணடிமைத்தனத்திற்கு சமூகம் மட்டுமே காரணமல்ல, விஞ்ஞானிகளும் காரணம் என்பதுதான். 

அந்த விஞ்ஞானிகளுக்கு உறுதுணையாக இருந்து, பெண்களை உளவியல் ரீதியாக காயப்படுத்தியது பரிணாமம் என்ற ஆதாரமில்லாத கோட்பாடு தான்.

உண்மைகள் வரலாற்றில் மறைத்திருக்கப்படலாம். ஆனால் அவை நிரந்தரமாக மறைந்திருக்காது.

ஆணாதிக்கத்தை அறிவியல் ரீதியாக நியாயப்படுத்தி, ஆணாதிக்க சமூகத்திற்கு வரப்பிரசாதமாக அமைந்தது பரிணாம கோட்பாடு. பெண்ணடிமைத்தனத்தை போற்றி வந்த மனிதர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுத்தது பரிணாம கோட்பாடு.

"Charles darwin believed in general female inferioty in reasoning, creative imagination, and so on...A refinement of the 'inferiority' theme took shape with the development  of evolutionay theory in the mid-19 century" - Judith Worell, Encyclopedia of women and gender: sex similarities and differences and the impact of society on gender, Volume 1, 2001, Page No.595.
படைப்பு திறன், கேள்வி கேட்கும் திறன் என இன்னும் பல பிரிவுகளில் பெண்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணத்தை டார்வின் கொண்டிருந்தார்...  
பரிணாம கோட்பாடு வளர்ச்சி பெற ஆரம்பிக்க '(பெண்கள்) தாழ்ந்தவர்கள்' என்ற கருத்தும் வடிவம் பெற ஆரம்பித்தது" -  (Extract from the original quote of) Judith Worell, Encyclopedia of women and gender: sex similarities and differences and the impact of society on gender, Volume 1, 2001, Page No.595.  

எப்படி தன் இனவெறிக்கு பரிணாமத்தை காரணமாக காட்டி நியாயம் கற்பித்தாரோ ஹிட்லர், அதுபோலவே, பெண்கள் குறித்த தங்களது பாரபட்சமான கருத்துக்களுக்கு காரணமாக ஆய்வாளர்கள் கை நீட்டியது பரிணாம கோட்பாடை நோக்கி தான்.

அறிவியல் கருத்துக்கள் மாறக்கூடியவை. மூளையின் அளவை கொண்டு அறிவுத்திறனை(??) கணக்கிட்டார்கள் என்றால் அது அன்றைய தவறான புரிதல். அதுபோலவே, பரிணாம கோட்பாட்டிற்கு ஆதாரங்கள் இருப்பதாக அன்று நம்பினர். பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக அந்த ஆதாரங்கள் ஒன்றுமில்லாமல் ஆகி, இன்றோ, அதற்கு நேர்மாறான நிலைமையல்லவா இருக்கின்றது!!!

பரிணாம ஆதரவாளர்களிடம் மீண்டும் நான் கேட்டு கொள்வதெல்லாம், திறந்த மனதோடு பரிணாம கோட்பாட்டை ஆராய முன்வாருங்கள் என்பதுதான். பரிணாமத்தால் மனித சமுதாயம் அடைந்த பயன் என்று ஒன்றுமில்லை. அறிவியல் போர்வையில் தவறான தகவல்கள், இனவெறி, பெண்கள் தாழ்த்தப்பட்டது (and etc) என இவைதான் பரிணாம கோட்பாடு நமக்கு கொடுத்த பரிசுகள்.

பெண்ணுரிமை ஆர்வலர்கள் எதிர்த்து போராட வேண்டியது ஆணாதிக்க சமூகத்தை மட்டுமல்ல, அவர்களுக்கு துணை போய் கொண்டிருக்கும் ஆய்வாளர்களை எதிர்த்தும் தான்...

நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் - ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான் - (குரான் 33:35)

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்
 
Sourse: ethirkkural.
 

வீட்டு புரோக்கர்களுக்கு வருகிறது பெரிய ஆப்பு!


அருமையான ஸ்பேஸ் உள்ள 2 பெட்ரூம் வீடு ஸார்... சிட்டிக்குள்ளே ப்ரைம் லொக்கேஷனில் வாடகைக்கு கிடைக்கிறது என்று ஷாப்பிங் மால்களில், லோக்கல் நியூஸ்பேப்பர்களில் மின்னும் விளம்பரங்களைக் கண்டு ஃபோன் செய்தால் அனைத்தையும் விவரிப்பார் அந்த நபர்.
சரி வீட்டைப் பார்க்கணும் என்றால் உடனே வரச் சொல்லி அழைத்துச் சென்று காட்டுவார். ஓக்கே... பிடித்திருக்கிறது. காண்ட்ராக்ட் போடலாமே? என்று சொன்னால் வீட்டு ஓனருக்கான கூடுதல் விபரங்களைத் தரும் முன், ஒருமாத அல்லது பாதிமாத வாடகை வேணும். அது "கம்பெனி செலவுக்கு / ஆபீஸ் சார்ஜ் ஸார்!" என்பார்.

அவருக்கான அந்தப் பெருந்தொகையினை கமிஷன்(!) கொடுத்த பின்னரே அவருக்கும் அந்த வீட்டு ஓனருக்கும் எந்த விதத்திலும் தொடர்பில்லை என்ற விபரமே தெரியவரும். வெறுமனே ஓனரின் தொலைபேசி எண்களை மட்டுமே வைத்துக் கொண்டு உரிமையாளர் போன்று விளம்பரங்கள் செய்து பல லட்சம் சம்பாதித்துக் கொழிக்கும் பெரும் கூட்டமே உள்ளது.

இதில் பல ரகங்கள் உள்ளன. ஒரு பங்களா டைப் வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு, உரிமையாளருக்குத் தெரியாமல் அந்தக் கட்டிடத்தை பத்தாக கூறு போட்டு அதில் பதினைந்து குடும்பங்களை வாடகைக்கு விட்டு பணம் கொழிப்பது ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம், வீடு கிடைக்காத திண்டாட்டத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு, வீட்டின் உரிமையாளருக்கு எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத ஆசாமிகள், இவ்வாறு இடைத்தரகர்களாக மாறி பணம் கொழிப்பது வளைகுடா நாடுகளில் வழக்கமாகி விட்ட ஒன்று.

தமது சம்பளத்தில் பாதிக்கு மேற்பட்ட தொகையினை வாடகைக்கே செலவிடும் வயிற்றெரிச்சலுடன் வேறு வழியில்லாமல் கிடைக்கும் ஒட்டு ஒடைசல் இடத்தில் ஒதுங்கிக் கொள்ளும் குடும்பங்கள் பற்றி ஒரு பெரிய டாக்குமெண்டரி படமே எடுக்கலாம். அத்தனை சோகங்கள் ஒளித்துள்ளன. இதில் உச்சகட்டமாக அதிக பட்ச வீட்டு வாடகை விலைகள் உள்ள சிறிய நாடான கத்தரில் பல வருடங்களாக இத்தகைய புரோக்கர்களின் ஆட்டம் இருந்து வந்தது. பொதுமக்கள் மிகவும் துன்பத்திற்குள்ளாக்கி வந்த இந்த ஆட்டம் இப்போது முடிவுக்கு வந்துள்ளது.

ஆம். கத்தர் அரசு இத்தகைய இடைத்தரகர்களுக்கு QR. 50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கும் வகையில் புதிய சட்டமொன்றை (Law No 13 of  2011) நேற்று 26-07-2011 உருவாக்கி வெளியிட்டுள்ளது.

புதிய சட்டத்தின்படி ஏஜண்ட்/புரோக்கர் தொழில் செய்யும் தனிநபரோ, நிறுவனமோ அரசு பதிவு பெற்றபின்னரே செய்ய இயலும். இதற்கான லைசென்ஸை அரசே முன்னின்று வழங்குகிறது.

லைசென்ஸ் உரிமம் பெற்ற ஏஜெண்ட் எந்த அளவு லாபம் சம்பாதிக்க முடியும் என்பதை இதன் விண்ணப்பத்தில் காணப்படும் விதிகள் தெளிவு படுத்துகின்றன.

இந்த லைசென்ஸைப் பெற அரசிடம் உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இதனைப் பரிசீலித்தபின்னர் 30 நாட்களுக்குள் இதற்குண்டான பதிலை அரசு தெரிவிக்கும். இந்த லைசென்ஸ் இருவருடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதன்பின்னர் மீண்டும் ரினிவலுக்காக அப்ளை செய்யவேண்டும்.

லைசென்ஸ் பெற்று இதிலுள்ள விதிகளை மீறும் ஏஜெண்ட்டின் உரிமம் Articles 9, 8, 11 and 12 படி உடனடியாக ரத்து செய்யப்படும்.

இந்த லைசென்ஸ் இல்லாமல் விளம்பரம் செய்து "கம்பெனி செலவு" அல்லது "ஆபிஸ் பீஸ்" என்று சம்பாதிக்கும் இடைத் தரகர்களுக்கு உடனடியாக ஐம்பதாயிரம் ரியால்கள் (கிட்டத்தட்ட ஆறு இலட்சம் இந்திய ரூபாய்கள்) அபராதம் விதிக்கப்படும். கட்ட இயலாதவர்கள் சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும்.

இது நாள் வரை புரோக்கர்களின் கொட்டத்தில் மாட்டித் தவித்து வந்த பொதுமக்கள், அரசின் இந்த அறிவிப்பு கண்டு நிம்மதிப் பெருமூச்சுடன் தமது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

100 மருத்துவக் குறிப்புகள்



1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.


2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்... கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.


3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.


4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ்தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.


5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியைப் பாதிக்கும்.


6. எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள்தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.


7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.


8. கால் தடுமாறி பிசகிவிட்டால்... உடனே 'கையால் நீவிவிடு' என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவிவிடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.


9. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்... நாற்காலியும் செருப்பும்கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா... நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா... என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து 'ரிலாக்ஸ்' செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.


பெண்களுக்காக...

10. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.


11. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.


12. மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.


13.மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.


கர்ப்பக் கால கவனிப்பு!

14. கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை 'மெலனின்' எனப்படும் நிறமிகளே!


15. கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.


16. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.


17. வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.


18. பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.


19. கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல... உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் தாயாகப் போகிறவரின் தினசரி உணவில் வாழை ரெசிபிக்கள் விதவிதமாக இருக்கும்.


20. கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.


21. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.


22. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.


23. தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.


24. பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.


25. சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக்கிருமி, இளம்பிள்ளைவாதத்தைக்கூட கொண்டு வரக்கூடும்.


26. வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.


27. குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும்.


28. தாய்ப்பாலைச் சேமித்துக் கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில், சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.


29. தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில்
புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.


30. குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்... வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு.


31. குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள்.



உணவே மருந்து!

32. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்... ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்!


33. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது... உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.


34. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.


35. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.


36. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்... உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.


37. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம்,
கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.


38. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.


39. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்... நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.


40 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.


41. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்... கண் நோய்கள் நெருங்காது.


42. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.


43. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.


44. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.


45. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.


46. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.


47. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு... இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.


48. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.




மருந்தே வேண்டாம்!

49. இயற்கைச் சூழலான இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால்... கொஞ்ச நேரம் ஆழமாக மூச்சு விடுங்கள். நுரையீரலுக்கு அது மிகவும் பயனளிக்கும்.


50. எந்தவித நோய் தாக்கியிருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது, கவலையைத் தூக்கி எறிவதுதான். அதுதான் முதலுதவிக்கும் முந்தைய சிகிச்சை.


51. சர்க்கரையை (சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம்.


52. உடம்பைக் குறைக்க ஒரே வழி உணவுக் கட்டுப்பாடும், நடைபயிற்சியும்தான். காந்தப்படுக்கை, பெல்ட், மாத்திரை போன்றவை உரிய பலனைத் தராது.


லப்... டப்..!


53. பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அடர் பச்சை நிற கீரைகள் போன்றவை.


54. நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால்... இதயத்தைப் பற்றி கவலையேபடத் தேவையில்லை.


55. உப்பு, இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும்போதெல்லாம், இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள்.


56. மன அழுத்தம் இதயத்தின் எதிரி. அதை விட்டுத் தள்ளுங்கள்.


57. உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.



கிட்னியைக் கவனியுங்கள்


58. கிட்னியில் கல் இருக்கிறதா? சாப்பாட்டில் மெக்னீசியம் சேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும்! கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி போன்றவையெல்லாம் மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள்.


59. சிப்ஸ், கோக், இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி - இவையெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும் வில்லன்கள்... உஷார்!


60. நிறைய தண்ணீர் குடிப்பது, சிறுசிறு கிட்னி கற்களை அகற்ற உதவும். கூடவே கேரட், திராட்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதாவது ஒன்றைக் குடிப்பது மிகவும் நல்லது.


61. காய்கறிகளை நிறைய சாப்பிடுபவர்களுக்கு, 'கிட்னியில் கல்' என்ற பயமே தேவையில்லை.



பல்லுக்கு உறுதி!


62. பல்லில் வலி, ஈறுகளில் வீக்கம், வாயின் வெளிப்புறத்தில் வீக்கம், பல் கறுப்பு நிறமாக மாறுவது, பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது, குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும்போது கூச்சம் ஏற்படுவது போன்றவை பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்.


63. பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி, சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எனவே, பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.


64. தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி குடிப்பது பற்களுக்கு நீங்களே வேட்டு வைப்பதற்குச் சமம். மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிருங்கள்.


65. சூடான உணவை சாப்பிட்ட நொடியே, ஜில்லான உணவுக்கு மாறினால், உடலுக்கும் பல்லுக்கும் பாதிப்புகள் ஏற்படும்.


66. இனிப்புச் சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்க வேண்டும்.


67. அக்கி எனப்படும் முகத்தில் தோன்றும் கட்டிகளுக்கு மண் பூசும் வழக்கமிருக்கிறது. அக்கி, ஒருவித கிருமித் தொற்றுமூலம் ஏற்படக்கூடியது. அதற்கான மருந்துகளைப் பயன்படுத்துவதே நல்லது.


68. சருமத்தை இளமையாக, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்க தண்ணீர் அதிகம் குடிப்பது முக்கியமானது. மன அழுத்தம், சோர்வு, இறுக்கமான ஆடை, மது, புகை, காபி... இவையெல்லாம் சருமத்தின் வில்லன்கள்.


69. தேவையற்ற அழுக்குகள் சருமங்களில் தங்கி, அதன் பொலிவையும், உயிர்ப்பையும் கெடுக்கின்றன. எனவே, முகத்தை அடிக்கடி கழுவிச் சுத்தப்படுத்துவது அவசியமானது.


70. முகப்பரு இருந்தால்... உடனே கிள்ளி எறிய விரல்கள் படபடக்கும். ஆனால், அது ஆபத்தானது. முகத்தில் பள்ளங்களை நிரந்தரமாக்கிவிடும்.


71. நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் அனைத்து வகை கீரைகள், காய்கள், வாழைத்தண்டு சாப்பிடலாம். வெந்தயம் மிக நல்லது.


72. உப்பில் ஊறிய ஊறுகாய், கருவாடு, அப்பளம், வற்றல் கூடவே கூடாது. அசைவம் வாரத்தில் 100 கிராம் அளவில் சாப்பிடலாம். முட்டையில் வெள்ளைக்கரு மட்டும் ஓ.கே! உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.


73. மா, பலா, வாழை, காய்ந்த திராட்சை, சப்போட்டா, பேரீச்சை ஆகியவற்றைத் தவிர்க்கலாம். பனை வெல்லம், பனங்கற்கண்டு, தேன், மலைவாழை, லேகியம், பஞ்சாமிர்தம் சேர்க்கவே கூடாது.


74. இரண்டு, மூன்று வெண்டைக் காய்களின் காம்பு மற்றும் அடிப்பகுதியை நீக்கி, நெடுக்குவாட்டில் கீறல்களை போட்டுவிட்டு இரவு முழுக்க டம்ளர் நீரில் மூடி வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் இந்த நீரை மட்டும் அருந்திவர, இரண்டே வாரத்தில் சர்க்கரை குறையும். இது மேற்கத்திய நாடுகளின் எளிய வைத்தியம்


75. உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என சாப்பாட்டின் அளவை திடீரென குறைப்பது ஆபத்து. உடலில் சர்க்கரையின் அளவு வேறுபட்டு, சர்க்கரை நோய் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.



ஜெனரல் வார்டு!

76. சர்க்கரை, டி.பி., கேன்சர், எய்ட்ஸ் ஆகிய நோய்களால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கும், ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும் உடலில் எதிர்ப்புச் சக்தி குறைந்து இருக்கும். இவர்களை எளிதில் நோய் தாக்கும். எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.


77. வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவமனை செல்ல தாமதமாகும் சூழலில்... உடலில் இருந்து வெளியேறிய நீருக்கு இணையாக உடனே சர்க்கரை மற்றும் உப்பு கலந்த நீரோ, இளநீரோ குடிக்க வேண்டும்.


78. நடு இரவு அல்லது பயண நேரங்களில் திடீர் ஜுரம் அடிக்கிறது. உடனே டாக்டரை பார்க்க முடியாத நிலை. அதற்காக சும்மா இருக்க வேண்டாம். வீட்டில் இருந்தாலோ அல்லது பயணத்தின் இடையிலோ பாராசிட்டமால் மாத்திரை ஒன்றை பயன்படுத்துவது நல்லது. அதன்பிறகு, 6 மணி நேரத்துக்குள் டாக்டரை சந்திப்பது நல்லது.


79. காதுகளை வாரம் இருமுறை மெல்லிய காட்டன் துணிகளால் சுத்தம் செய்ய வேண்டும். சாவி, ஹேர்பின், பட்ஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பட்ஸ் போடும்போது திட அழுக்குகள் அப்படியே அழுத்தப்படுமே தவிர, வெளியில் வராது.


80. வயிற்றுப்போக்கு விடுபட உடனடி உபாயம்... வெறும் கொய்யா இலைகளை மெல்வதுதான்.


81. சாப்பிட்டதும் நெஞ்செரிச்சலா? சிறிது வெல்லம் கரைத்த நீரை அருந்தினால் போதும்.


82. வியர்வை தங்கிய உடையுடேனேயே இருப்பது ஆபத்தானது. அதுவே நோய் தொற்றுக்கான காரணியாக அமைந்துவிடும்.


83. நீங்கள் நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும்கூட சிறுநீர் மஞ்சளாக போகும்.

84. உடலில் ஏதேனும் காயம் அல்லது நகக்கீறல் போன்றவை ஏற்பட்டால், 12 மணி நேரத்துக்குள் தடுப்பு ஊசி (டி.டி.) போடவேண்டும். தடுப்பூசி காலத்தில் இருக்கும், பத்து வயது வரையுள்ள குழந்தைகள் என்றால், இந்த ஊசி தேவையில்லை.


85. மூலம், பவுத்திரம் பாதிப்பு உள்ளவர்கள் கூச்சப்படாமல் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். மலச்சிக்கல் தொடர்ந்தால், இதயத்துக்கே ஆபத்தாகிவிடும்.



நில்... கவனி... செல்!


86. மருத்துவமனையில் நோயாளியின் படுக்கைக்குக் கீழே, நடைபாதை என்று கிடைத்த இடங்களில் எல்லாம் அமர்ந்து சாப்பிடுவது தவறு. அது... தொற்றுக்கிருமிகளை பரஸ்பரம் உள்ளே - வெளியே எடுத்துச்செல்லும் வேலையைத்தான் செய்யும்.


87. தவிர்க்க முடியாத சூழலைத் தவிர, மற்ற சமயங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்களை நோயாளியைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூடாது.


88. 'போஸ்ட்மார்ட்டம்' என்றாலே பலருக்கும் ஒருவித பயமும் பதற்றமும் இருக்கும். இதன் காரணமாக போஸ்ட்மார்ட்டத்தைத் தவிர்த்துவிட்டால்... பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். எதிர்பாராத மரணமென்றால் கட்டாயம் பிரேத பரிசோதனை செய்வதுதான் எல்லாவற்றுக்கும் நல்லது. பரிசோதனை அறிக்கை இருந்தால்தான் வாரிசுகளுக்கான இன்ஷுரன்ஸ் உள்ளிட்ட அனைத்துவிதமான முதலீடுகளை பெறுவதில் சிக்கல் ஏற்படாமலிருக்கும்.


89. ஹோட்டல், ஹாஸ்டல் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் தட்டு மற்றும் டம்ளர்களை சரியாக கழுவவில்லை என்றாலும், சாலட்டில் போடப்படும் பச்சைக் காய்கறிகள், பழங்களை சுத்தமான தண்ணீரில் அலசவில்லை என்றாலும்... அமீபியாசிஸ் எனும் தொற்றுக்கிருமி தாக்குதல் ஏற்படும். இதனால், சாப்பிட்டதும் மலம் கழிந்துவிடும். கவனிக்காமல் விட்டால் உடல் மெலிந்து எதிர்ப்புச் சக்தியை முற்றிலுமாக இழக்க நேரிடும்.



90. 'போரடிக்கிறது' என அடிக்கடி காபி, டீ குடிக்கக் கிளம்பாமல்... தூய்மையான தண்ணீரைக் குடிப்பதே நல்லது.


91. ஒரே இடத்தில் உட்கார்ந்திராமல் அவ்வப்போது எழுந்து நடக்கவேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக அமர வேண்டாம். லிஃப்ட் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்கவும்.


92. ஓடுவது நல்ல உடற்பயிற்சி. ஆனால், கறுப்பு நிற ஆடை அணிந்து கொண்டு ஓடக் கூடாது. உடலில் அதிக வெப்பம் ஈர்க்கப்பட்டு சிக்கல் உருவாகலாம். ஜிலுஜிலு குளிர் நேரமென்றால்... கறுப்பே சிறப்பு.


93. கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் 20-20-20 பயிற்சியைப் பழக வேண்டும். இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை, இருபது அடி தொலைவிலுள்ள பொருளை, இருபது விநாடிகள் பார்த்து கண்ணை இலகுவாக்குவதுதான் பயிற்சி. அவ்வப்போது கண்களைக் கழுவுவதும் அவற்றுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.


94. சமைக்கும்போது ஜன்னல்களைத் திறந்து வைப்பது... அல்லது எக்ஸாஸ்ட் ஃபேனை ஓடவிடுவது நல்லது. சமையல் எரிவாயுவிலிருந்து வெளிப்படும் நச்சுக்களைத் தொடர்ந்து சுவாசிப்பது நுரையீரலுக்கு ஆபத்தானது.


எச்சரிக்கை

95. வெற்றிலை-பாக்கு, புகையிலை, சீவல், புகை போன்றவற்றைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவோரின் வாயானது, உட்புறம் மென்மைத் தன்மையை இழந்து, நார்நாராகக் காட்சியளிக்கும். இது, வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.


96. இரவு உணவுக்குப் பிறகு நீண்ட நேரம் வெறும் வயிறாக இருப்பதால், ஆசிட் நிறைய சுரந்திருக்கும். எனவே, காலையில் கட்டாயம் சாப்பிடவேண்டும். சரிவர சாப்பிடாமல் பழகிவிட்டால், அது வயிற்றில் புற்றுநோயை உருவாக்கும்.


97. இரவு வெகு நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தால், மறுநாள் காலையில் வாக்கிங், ஜாகிங் போகக்கூடாது. அது, பயனளிப்பதற்குப் பதிலாகக் கெடுதலையே தரும்.


98. அலர்ஜி - ஆஸ்துமா போன்ற நோய்கள் இருந்தால், செல்லப் பிராணிகளைக் கொஞ்சம் தள்ளியே வையுங்கள். அலர்ஜி நோய்க்கு, கரப்பான் பூச்சி ஒரு முக்கிய காரணம்.


99. நாற்பது வயதுக்குமேல் தொடர்ச்சியாக அல்சர் தொந்தரவு இருந்தால் என்டோஸ்கோபி பரிசோதனை செய்துவிடுவது நல்லது. ஃபாஸ்ட்ஃபுட் வகையறாக்களைத் தொடவே கூடாது.


100. சுகாதாரமற்ற முறையில் பச்சை குத்துதல் மற்றவர்களுடைய நோயை நமக்கு வாங்கித் தந்துவிடும்.

நன்றி: விகடன்.

மகி, தமிழ் கருத்துக் களம்

http://tamil.darkbb.com/t99-topic

சுதந்திர அணிவகுப்பு ஒத்திகை அணிவகுப்பின் பயிற்சி முகாம் நாகர்கோவில் லாயத்தில் வைத்து நடைபெற்றது



வருகின்ற ஆகஸ்ட் 15  சுதந்திர அணிவகுப்பு நெல்லையில் நடைபெற இருக்கிறது .இதற்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகிவருகிறது .அணிவகுப்பின் பயிற்சி முகாம் நாகர்கோவில் லாயத்தில் வைத்து நடைபெற்றது.அணிவகுப்புக்கு காவல் துறை உதவி ஆய்வாளர் பாலா முருகன் தலைமையில் காவல் துறையினர் பாதுகாப்பு அளித்தனர் .




















மக்கள் திரளாக கலந்து சுதந்திர அணிவகுப்பு வீரர்களை வரவேற்றனர் இந்த பயிற்சி முகாமிற்கு லாயம் முன்னால் பஞ்சாயத்து தலைவர் காதர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் .பாப்புலர் பிரண்ட் நாகர்கோவில் மாவட்ட தலைவர் ஜுல்பி முஹம்மத் தலைமை வகித்தார் முடிவில் பாப்புலர் பிரண்ட் நெல்லை மாவட்ட செயலாளர் ஹைதர் ஆலிம் நன்றி உரை ஆற்றினார் .

வாருங்கள் நீங்களும் சுதந்திரத்தின் காவலர்களாக.



பாப்புலர் ஃபிரான்ட் ஆஃப்  இந்தியா கடந்த வருடம் போல இந்த வருடமும் சுதந்திர தின அணிவகுப்பு நடத்த திட்டமிட்டுள்ளது.தமிழ்நாட்டில் நெல்லையிலும் கேரளாவில் புனலூர்,சாவக்காடு ,மஞ்சேரி,தமரசேரியிலும் நடத்த திட்டமிட்டுள்ளனர்.பாசிச பயங்கரவாதிகளையும் இந்த நாட்டினை துண்டாட நினைக்கும் அந்நிய சக்திகளுக்கும் சாவு மணி அடிக்க வருகிறார்கள். தீரன் திப்புவின் வாரிசுகள் போர் பரணி எழுப்பி வீர முரசு கொட்டி வருகிறார்கள்.வாருங்கள் நீங்களும் சுதந்திரத்தின் காவலர்களாக என அனைவரையும் அன்போடு  அழைக்கிறது.பாப்புலர் ஃபிரான்ட் ஆஃப்  இந்தியா.

Wednesday, July 27, 2011

தூயோனின் தூதரகம்...







படைத்தவனை வணங்குவதற்காக
படைப்பினங்கள் ஒன்றுகூடும்
பயிற்சி பாசறை!

அல்லாஹ்வின் பெயர்தனை -
ஐவேளை தினம் கூறி
அனைவரையும் வரவேற்கும்
அருளால் அலங்கரிக்கப்பட்ட
ஆன்மிக ஆபரணம்...

இபாதத்தோடு இணக்கத்தையும்
சலாத்தோடு சகிப்புத்தன்மையும்
மனித மனங்களில்
இறுகக் கட்டும்
இறைவனின் இல்லம்...!

இங்கு,
தீண்டாமையையும்
தீண்டுவோர் இல்லை
மொத்த உலகமும் பேசி தீர்க்க யோசிக்க
தம் மௌனத்தால் சாதித்தது
மறை ஓதும் மாளிகை.

ஏற்றத்தாழ்வுகள்
எங்கே? - என
எவரையும்
கேட்க வைக்கும்
இஸ்லாத்தின் அத்தாட்சி.,

ஆள்பவனும் -ஆமோதிப்பவனும்
பணம் கொண்டவனும்
தினம் உழைப்பவனும்
வாழ்வில் தேரியவனும்
வாழ்வை தேடுபவனும்
ஆகாய விமான ஓட்டியும்
அன்றாட காட்சியும்...
அருகருகே தொழ வைக்கிறது -
தூர தேசத்திலும்...
சகோதரத்துவத்தை எழ செய்கிறது

வணக்கத்தோடு
வாழ்வியல் வெற்றிக்கும்
வழிக்காட்டும்
வசந்தங்களின் கூடாரம்

மார்க்கத்தை முன்னிருத்தி
மற்றவை பிற -என
மனித நல்லெண்ணங்களுக்கு
மாசற்ற வர்ணம் பூசும்
மனிதநேய ஆலயம்

அல்லும் -பகலும்
அனைத்துக்காகவும்
அலைந்து திரியும்
அற்ப மனிதர்களுக்கு
அல்லாஹ்வின் நினைவை
அதிகம் ஊட்டி
அழகிய ஆதாயத்தை
அன்றாடம் தரும்
அருளாளனின் சின்னம்..!

உள்ளே ஏதுமில்லையென்றாலும்
வெளியே வரும்போது
மனது நிறைய
நம்பிக்கையும், நன்மைகளையும்
கொடுக்கும்
தூயோனின் தூதரகம்..!

சமூகத்தில் ஓரு சிலரை
முன்னிலைப்படுத்தும்
அரங்கங்களுக்கு மத்தியில்
ஓர் சமுகத்தையே
கண்ணியப்படுத்தும்
கருணை தளம்...

வல்லோன் சொல் கேட்டு
வாக்களித்ததை நிறைவேற்ற..
விரையும் எவருக்கும்
வரையறையற்ற
இலாபத்தினை மட்டுமே தரும்
வாழ்வியல் வர்த்தக மையம்...


Thanks.
gulam