அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, June 9, 2009

ஒமாக் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு


குண்டு வெடித்த இடம்
குண்டு வெடித்த இடம்
1998 ஆம் ஆண்டு வட அயர்லாந்தில் நடந்த ஒமாக் குண்டுவெடிப்பு சம்பவத்தில் கொல்லப்பட்டிருந்தவர்களின் உறவினர்களுக்கு எட்டு ஆண்டுகால நீதிமன்ற வழக்குகளுக்குப் பின்னர் தற்போது இருபத்து ஐந்து லட்சம் டாலர்கள் நஷ்ட ஈடு வழங்கப்படும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஆர்.ஏ அமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்களான ரியல் ஐ.ஆர்.ஏ. அமைப்பின் நான்கு உறுப்பினர்களாலேயே இந்த குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பதற்கு திட்டவட்டமான ஆதாரங்கள் இருப்பதாக பெல்ஃபாஸ்ட் உயர் நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 29 பேர் கொல்லப்பட்டும் இருநூறுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தும் இருந்தனர். வட அயர்லாந்து பிரிவினைவாதிகளால் நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இதுதான்.

இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை எவர் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக தீர்ப்பு வந்திருக்கவில்லை.

No comments: