ஸ்ரீநகர்: காஷ்மீரில் இரண்டு பெண்கள் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அங்கு ஹூரியத் அமைப்பு பெரும் போராட்டத்தில் குதித்துள்ளது. இதையடுத்து அந்த அமைப்பின் தலைவர் சையத் அலி ஷா கிலானியை போலீஸார் கைது செய்தனர்.
கிலானியுடன், பாகிஸ்தான் ஆதரவு தலைவர்களான அயாஜ் அக்பர், குலாம் நபி சுமிஜ் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள சோபியான் என்ற கிராமத்தில் இரண்டு பெண்கள் கற்பழித்துக் கொல்லப்பட்டதைக் கண்டித்து பள்ளத்தாக்கு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்த கிலானி அழைப்பு விடுத்தார். இதையடுத்து அங்கு போராட்டம் வெடித்துள்ளது.
இதையடுத்து கிலானி உள்ளிட்டோரைக் கைது செய்ய ஜம்மு காஷ்மீர் அரசு உத்தரவிட்டது. மேலும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள உள்ளூர் கேபிள் டிவி ஒளிபரப்பும் தடை செய்யப்பட்டுள்ளது.
போராட்டம் காரணமாக ஸ்ரீநகர் மற்றும் பல்வேறு பகுதிகளில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் ஒரு வாரமாக மூடப்பட்டு உள்ளன. ஸ்ரீநகர், பாரமுல்லா, சோபியான் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப் பட்டு உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment