சீனாவின் கட்டுப்பாட்டிலிலுள்ள ஜின்சியாங்கின் வடகிழக்கு மாகாணத்திலிலுள்ள விமான நிலையம் ஒன்றில் தரையிறங்க முயன்ற ஆப்கானிஸ்தான் நாட்டு விமானத்தில் வெடிக்குண்டு இருப்பதாக பீதி ஏற்பட்டதால் அவ்விமானம் தரையிறங்க அனுமதிக்கப்படாமல் திருப்பியனுப்பப்பட்டதாக சீன செய்தி நிறுவனமான சின்குவா கூறியது. இதனால் விமான நிலையத்தில் போலீஸ் படை குவிக்கப்பட்டதாகவும் விமானப்படையும் எதற்கும் தயாரான நிலையில் இருந்ததாகவும் கூறப்பட்டது. பின்னர் இச்செய்தியை மறுத்த சின்குவா போதிய ஆவணங்கள் இல்லாததால் விமானம் திருப்பியனுப்பப்பட்டதாக தெரிவித்தது.
கடந்த மாதம் ஜின்சியாங்கில் ஹான் இனத்தவர்களும், சீன போலீஸும் உய்கூர் முஸ்லிம்கள் மீது நடத்திய தாக்குதலில் 197 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். ஒரே இரவில் 10 ஆயிரம் உய்கூர் முஸ்லிம்கள் காணாமல் போயினர். இந்நிலையில் தான் இந்த வெடிக்குண்டு புரளியை கிளப்பி பீதியை ஏற்படுத்தியுள்ளது சீன செய்தி நிறுவனம்.
news extracted from Al jazeera
No comments:
Post a Comment