பெங்களூரு:சுதந்திர தினத்தை முன்னிட்டுதென்னிந்தியாவின்மூன்று மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட்ஆஃப் இந்தியாவின்சுதந்திரஅணிவகுப்புநடக்கிறது.மைசூர்,கும்பக்கோணம்,இடுக்கி,கண்ணூர்ஆகியஇடங்களில் நடைபெறும் அணிவகுப்பின் கடைசிகட்டஏற்பாடுகள்பற்றி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசியநிர்வாக குழுமதிப்பீடு செய்தது.மைசூரில் நடைபெறும் சுதந்திரதினஅணிவகுப்பு ஆகஸ்ட் 15 ஆம் தேதி மதியம் 2.30 க்குஜெ.கேமைதானத்தில் ஆரம்பித்து ஷஹீத் திப்புசுல்தான்நகரில்பொதுக்கூட்டத்தோடு நிறைவுறும்.முன்னாள்முதல்வர்ஹெச்.டி.குமாரசுவாமி பொதுக்கூட்டத்தைதுவக்கிவைப்பார்.விஸ்வநாத் எம்.பி,தன்வீர் சேட்எம்.எல்.ஏ,முன்எம்.எல்.சி சுப்பையா ஆகியோர்வாழ்த்துரைவழங்குவார்கள்.பாப்புலர் ஃப்ரண்ட்தேசியப்பொதுச்செயலாளர்கெ.எம்.ஷெரீஃப் சிறப்புரைநிகழ்த்துவார்.
தஞ்சாவூரில் மதியம் 2.30 மணியளவில் எ.ஜெ.எஸ் கார்டனிலிருந்து ஆரம்பிக்கும் சுதந்திர அணிவகுப்பு ஷஹீத் திப்புசுல்தான் நகரில் பொதுக்கூட்டத்தோடு நிறைவுறும்.சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் மாநிலத்தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துக்கொள்வார்.பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் அவர்கள் பொதுக்கூட்டத்தை துவக்கி வைப்பார்.தமிழ்நாடு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர் முஹம்மது அலி ஜின்னா,பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய பொருளாளர் ஷேஹ் முஹம்மது தெஹ்லான் பாகவி,மெளலவி டி.ஜெ.எம்.ஸலாஹுத்தீன் ரியாஜி ஆகியோர் உரை நிகழ்த்துவார்கள்.
இடுக்கியில் மதியம் 3 மணியளவில் நெடுங்கண்டம் பஸ்நிலையத்திலிருந்து ஆரம்பிக்கும் சுதந்திர தின அணிவகுப்பு அய்யங்காளி நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தோடு நிறைவுறும்.
கண்ணூரில் காலை 10.30 மணியளவில் நகராட்சி ஸ்டேடியத்திலிருந்து ஆரம்பிக்கும் சுதந்திர தின அணிவகுப்பு டாக்டர்.அம்பேத்கர் நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தோடு நிறைவுறும்.
நமது நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளின் தியாகத்தை நினைவு கூறவும்,மக்களுக்கிடையே தேசிய உணர்வை ஜொலிக்கச்செய்யவும்,இந்நாட்டின் குடிமக்களை சுதந்திரத்தின் பாதுகாவலர்களாக மாற்றுவதும்தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் சுதந்திர தின அணிவகுப்பின் இலட்சியம் என நிர்வாகிகள் கூறினர்.தேசத்தின் அபிமானத்தை உணர்த்தும் இந்த சுதந்திர தின அணிவகுப்பு 2004 முதல் ஒவ்வொரு வருடமும் கேரள மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.கடந்த ஆண்டு பெரும் மக்கள் ஆதரவோடு மங்களூர்,மதுரை,கொச்சி,மானத்தவாடி ஆகிய இடங்களில் அணிவகுப்பு நடைபெற்றது.இந்திய தேசத்தின் அனைத்து குடிமக்களும் இந்த சுதந்திர தின அணிவகுப்பின் வெற்றிக்காக களமிறங்க பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாக குழு கேட்டுக்கொண்டது.
No comments:
Post a Comment