அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Monday, August 10, 2009

இஸ்ரேலின் அணுவுலைகளை அகற்ற ஈரான் வலியுறுத்தல்



அமெரிக்கா இஸ்ரேலின் அணுவுலைகளை அகற்றுவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
ஈரான் அணுவாயுதங்களை உருவாக்கும் பட்சத்தில் வளைகுடாப் பிராந்தியத்தில் அமெரிக்கா தனது நட்பு நாடுகளுக்கு ஆயுதம் வழங்கும் என்று சமீபத்தில் ஹிலாரி கிளிண்டன் வெளியிட்ட கருத்துக்குப் பதிலடியாக ஈரான் இக்கருத் தினை வெளியிட்டுள்ளது.
எங்களது அண்டை நாடுகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான தேவை எதுவும் அமெரிக்காவுக்கு இல்லை என்று ஈரானிய வெளியுறவுத்துறை செய்தியாளர் ஹஸன் கஷ்காவி கூறியுள்ளார்.
இஸ்ரேலிடம் 200 அணுகுண்டுகள் உள்ளன. அவற்றை அகற்றுமாறு சியோனிஸ அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு அதன் நட்பு நாடான அமெரிக்காவை வேண்டுகிறோம். அது இயல்பாக மத்திய கிழக்கில் அமைதியை உண்டாக்கும். சியோனிஸத்திடம் உள்ள ஆயுதங்களைக் களைவதைத் தவிர மத்திய கிழக்கில் சமாதானத்தை உருவாக்க வேறு வழியில்லை. எங்களது பாதுகாப்புக் கட்டமைப்பில் அணுவாயுதங்களுக்கு எந்த இடமும் இல்லை. அமைதியான வழிமுறையில் அணுசக்தியை பயன்படுத்துவதே எங்கள் நோக்கம். அதற்கான உரிமையும் எங்களுக்கு உண்டு என்று அவர் மேலும் கூறினார்.

No comments: