அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, August 12, 2009

மீறி கண்டனபேரணிமணிப்பூர்:போலி என்கவுண்டரை கண்டித்து ஊரடங்கு உத்தரவையும்


இம்பால்:ப‌ட்ட‌ப்ப‌க‌லில் போலி என்க‌வுண்ட‌ரில் இளைஞ‌ர் ஒருவ‌ரையும்,க‌ர்ப்பிணி பெண்ணையும் சுட்டுக்கொன்ற‌ காவல்துறையின் அக்கிர‌ம‌ ந‌ட‌வ‌டிக்கைக்கு எதிராக‌ ம‌ணிப்பூரில் க‌டும் எதிர்ப்பு கிள‌ம்பியுள்ள‌து.

நூற்றுக்க‌ண‌க்கான‌ பேர் க‌ல‌ந்துக்கொண்ட‌ க‌ண்ட‌ன‌ பேர‌ணியில் முத‌ல்வ‌ர் இபோபி சிங் ராஜினாமா செய்ய‌வும்,கொலைக்கார‌ர்க‌ளான‌ போலீஸ் அதிகாரிக‌ளின் மீது கொலைவ‌ழ‌க்கு ப‌திவுச்செய்ய‌வும்,பாதுகாப்பு ப‌டையின‌ரை க‌ட்ட‌விழ்த்து விடும் ச‌ட்ட‌ங்க‌ளை வாப‌ஸ் பெறுத‌ல் உள்ளிட்ட‌ கோரிக்கைக‌ள் வைக்க‌ப்ப‌ட்ட‌ன‌.

ச‌மூக‌ அமைப்பான‌ அபூன்பா லூப் என்ற‌ அமைப்புதான் இந்த‌ பேர‌ணிக்கு ஏற்பாடுச்செய்திருந்த‌து.ஊர‌ட‌ங்கு உத்த‌ர‌வும், அதிகாரிக‌ளின் மிர‌ட்ட‌லையும் புற‌க்க‌ணித்து நூற்றுக்க‌ண‌க்கான‌ ந‌ப‌ர்க‌ள் இதில் க‌ல‌ந்துக்கொண்ட‌ன‌ர். போராட்ட‌ம் தொட‌ருமென‌ அபூன்பா லூப் த‌லைவ‌ர்க‌ள் தெரிவித்த‌ன‌ர்.க‌ட‌ந்த‌23ம் தேதிதான் போலி என்க‌வுண்ட‌ரில் போலீஸ் க‌மான்டோக்க‌ள் ஒரு இளைஞ‌ரையும் க‌ர்ப்பிணி பெண்ணையும் சுட்டுவீழ்த்தின‌ர்.

க‌ர்ப்பிணியின் வய‌து 23.தீவிர‌வாத‌ இய‌க்க‌த்தில் முன்பு உறுப்பின‌ராக‌ இருந்த‌ ந‌ப‌ருட‌ன் ஏற்ப‌ட்ட‌ மோத‌லில்தான் அவர் கொல்ல‌ப்ப‌ட்ட‌தாக‌ போலீஸ் தெரிவித்த‌ நிலையில் தெஹல்கா ப‌த்திரிகை வெளியிட்ட‌ என்க‌வுண்ட‌ர் புகைப்ப‌ட‌ங்க‌ள் போலீஸின் கூற்று பொய்யென‌ நிரூபிக்கின்ற‌ன‌. போன் செய்வ‌த‌ற்காக‌ பூத்திற்குள் நுழைந்த‌ இளைஞனை எந்த‌வொரு எதிர்ப்பு இல்லாம‌ல் போலீஸ் சுட்டுக்கொன்ற‌ காட்சிக‌ள‌ட‌ங்கிய‌ புகைப்ப‌ட‌த்தைதான் டெஹ‌ல்கா வெளியிட்ட‌து. போலீஸ் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிசூட்டில் கர்ப்பிணி பெண்மணியொருவர் கொல்லப்படவும், 5 பேருக்கு காயமும் ஏற்படவும் செய்தது.

போலி என்கவுண்டர் செய்தி வெளியானவுடன் பொதுமக்கள் கடும் கோபமடைந்து அரசு மற்றும் போலீசுக்கெதிராக போராடத்துவங்கினர். இதற்கிடையில் போலி என்கவுண்டருக்கு காரணமான முதல்வர் சட்டமன்ற உறுப்பினர்களை திசைதிருப்ப முயல்கிறார் என மணிப்பூர் மாணவர் அமைப்பான செலியாங் ரோங் கூறியுள்ளது. ஆயுதப்படை சிறப்பு சட்டம்,தேசப்பாதுகாப்பு சட்டம்,பாதிக்கப்பட்ட பிரதேச சட்டம் ஆகியவற்றின் மூலம் மணிப்பூர் அரசு அநீதமான தாக்குதல்களையும்,மனித உரிமை மீறல்களையும் சட்டபூர்வமாக்கியுள்ளதாக அவ்வமைப்பு வெளியிட்ட பத்திரிகை செய்தியில் கூறியுள்ளது. மாநிலத்தில் இதுவரை நடைபெற்றுள்ள அனைத்து என்கவுண்டர் படுகொலைகளைப்பற்றியும் நடுநிலையான விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் அவ்வமைப்பு கோரியுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ், தெஹல்கா

No comments: