
செச்னிய தலைநகர் குரோஸ்னியில் ஒரு காரினுள் ஸரேமா ஸதுலயேவாவையும் அவருடைய கணவர் அலிக் த்ஸப்ரெய்லொ ஆகியோரின் உடல்கள் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் காணப்பட்டன.
கடந்த திங்கள் கிழமை "லெட்ஸ் சேவ் தி ஜனரேசன்" என்ற மனித உரிமை அமைப்பின் அலுவலகத்திலிருந்து துப்பாக்கி ஏந்திய அடையாளம் தெரியாத சிலர் ஸரேமாவையும் அவருடைய கணவரையும் கடத்திச்சென்றனர்.கடந்த ஜூலை மாதம்தான் மனித உரிமைப்போராளியான நதாலியா எஸ்கமிரோவா கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவின் செச்னிய மீதான அக்கிரமத்தாக்குதலில் பாதிக்கப்படும் குழந்தைகளுக்காக செயல்படும் அமைப்புதான் "லெட்ஸ் சேவ் தி ஜனரேசன்". இது யூனிசெஃபின் ஆதரவோடு செயல்படுகிறது. செச்னியாவில் ரஷ்யா நடத்திவரும் மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டுவரும் மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து கொலைச்செய்யப்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2006 ஆம் ஆண்டு மனித உரிமைப்போராளியும், பத்திரிகையாளருமான அன்னா பொலிட்கோவ்ஸ்கயா கடந்த ஜூலையில் நதாலியா எஸ்கமிரோவா ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.
மாஸ்கோவில் செயல்படும் "ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்"அமைப்பின் துணை இயக்குநர் டட்யானா லோக்ஷினா கூறுகையில்,"இந்த சூழலில் செச்னியாவில் மனித உரிமை அமைப்புகள் செயல்படுவது இயலாதாக்கப்பட்டுள்ளது. ஸரேமாவின் கொலையை கற்பனைச்செய்ய முடியவில்லை. 25 வயதான இளம்பெண்ணையும் அவருடைய கணவரையும் கொலைச்செய்துள்ளனர். சமீபத்தில்தான் அவர்கள் திருமணம் முடித்தனர்."என்றார். செய்தி:
No comments:
Post a Comment